உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • மரவள்ளி இலைகள்—கோடிக்கணக்கானோருக்கு அன்றாட உணவு
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஜாலியாக இருப்பது எனக்கு வயது 12. “இளைஞர் கேட்கின்றனர் . . . மற்ற இளைஞர் ஏன் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்?” (ஜூலை 22, 1996) என்ற கட்டுரையை நான் படித்து மகிழ்ந்தேன். நானும் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருப்பேன். என்னுடைய பள்ளிக்கூடத்தில் பார்ட்டிகளில், டான்ஸ்களில் இன்னும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஒருவர் விரும்பினால் தன் பெயரைக் கொடுக்கலாம். அவற்றிற்கு போகவேண்டும் என்று அடிக்கடி நான் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், நான் எடுக்கும் தீர்மானம் யெகோவாவுக்கு முன் என்னை பொறுப்பாளியாக்கிவிடும் என்பதை உணர்ந்துகொள்ள அந்தக் கட்டுரை எனக்கு உதவியது. ஆகவே, என் கிறிஸ்தவ நண்பர்களோடே நெருங்கி இருப்பேன்.

ஏ. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

[பைபிள் எழுத்தாளரான] ஆசாப் எப்படி உணர்ந்தார் என்று நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்களோ அதேபோல் நான்கூட பல முறை உணர்ந்திருக்கிறேன். பள்ளியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இந்தக் கட்டுரை இன்னும் கூடுதலான பலத்தை எனக்கு அளித்தது.

ஏ. எஸ்., ஜப்பான்

உண்மைதான், உலகப்பிரகாரமான பார்ட்டிகளில் பங்குபெற ‘அனுமதிக்கவில்லை’ என்றால் சில இளைஞர்கள் எதையோ இழந்துவிட்டதாக அல்லது அவர்களிடமிருந்து எதையோ அபகரித்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் எல்லாரும் அவ்வாறு நினைப்பதில்லையே! என்னைப் பொருத்தமட்டும், உலகப்பிரகாரமான பார்ட்டிகளில் நடக்கும் பல விஷயங்கள் அருவருப்படையச் செய்கின்றன. என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களும் அவ்வாறே உணருகின்றனர். எங்களிடமிருந்து எதையோ அபகரித்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை; இன்னும் பலரும் அதேபோல் நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!

கே. எச்., ஐக்கிய மாகாணங்கள்

ப்ரூவரி கல்ச் “ப்ரூவரி கல்ச்சில் ஆவிக்குரிய மலர்கள் பூத்தன” (ஜூலை 22, 1996) என்ற கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்தேன் என்பதை சொல்வதற்காகவே நான் இதை எழுதுகிறேன். சில வருடங்களுக்கு முன், நான் அந்த இடத்தில் 21 மாதங்கள் இருந்தேன். அந்நாட்களின் இனிய நினைவுகள் பலவற்றை என் நெஞ்சத்திரையில் நிழலாடவிட்டது இந்தக் கட்டுரை. நான் வீட்டைவிட்டு தூரத்தில் இருந்தது அதுவே முதல் தடவை. நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில குடும்பங்கள், குறிப்பாக, ஸ்மித் குடும்பத்தார், ஜ்ரிஃப்ஃபின் குடும்பத்தார், ப்யூ குடும்பத்தார் என இவர்களெல்லாரும் எனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், அத்தைகளாகவும், மாமாக்களாகவும் இருந்து ஆதரவளித்தார்கள். நான் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவளாக ஆவதற்கு அவர்கள் எனக்கு உதவினார்கள். இந்தக் கட்டுரையைப் படித்தபோது, மறுபடியும் அவர்களோடு இருக்கமாட்டோமா என்ற ஏக்கத்தை தந்தது. அவர்கள் எல்லாரையும் ஆழ்ந்த அன்போடும் நன்றியோடும் நினைத்துப்பார்க்கிறேன்.

பி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்

மரவள்ளி இலைகள் “மரவள்ளி இலைகள்—கோடிக்கணக்கானோருக்கு அன்றாட உணவு” (ஜூலை 8, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு எனது நன்றி. மரவள்ளி பல நூற்றாண்டுகளாகவே எங்களது முக்கிய உணவாக இருந்துவருவதால் இதற்கு ஆப்பிரிக்காவில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், நைஜீரியாவில் எங்களுக்கு இந்த இலைகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஏனெனில் இதன் கிழங்குகளே எங்களுக்கு விருப்பமான உணவு வகைகளான, காரி, ஃபுஃபு போன்றவையாய் சமைக்கப்படுகின்றன. உலகின் மற்றப்பகுதிகளில் இதன் இலைகள் வெறும் மருந்தாக மாத்திரம் இன்றி, சுவைமிக்க உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறியவந்தது ஆர்வத்தைத் தூண்டியது. மரவள்ளிக் கிழங்கை படைத்த யெகோவாவுக்கு நன்றி சொல்வோமாக!

ஜே. எஸ். இ., நைஜீரியா

முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டார் “அவர் ஏன் தனது முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டார்” (ஜூலை 22, 1996) என்ற கட்டுரையைப் படித்ததால் எவ்வளவு உற்சாகமடைந்தேன் என்பதை கட்டாயம் உங்களிடம் சொல்லவேண்டும். 13 வருடங்களுக்கு மேலாக சுவிசேஷக ஊழியத்தை முழுநேரமாக செய்துவந்துள்ளேன். நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்து வரும் இந்த உலகில் முன்னுரிமைகளை வைப்பது எல்லா நேரங்களிலும் அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு வருடமும் முழுநேர ஊழியத்தில் நிலைத்திருப்பது பெரும் சவாலாக ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு முழுநேர ஊழியனாக ஆகவேண்டும் என்பதற்காக, சரணாலயத்தின் வார்டனாக இருந்து மனநிறைவை அளித்த வேலையை ஜெரமி உதறித்தள்ளினார் என்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன். இப்படி சிந்தித்தது, என் வாழ்க்கையிலும் ஊழியத்திற்கு முன்னுரிமை அளிக்க நான் எடுக்கும் முயற்சிகள் வீண்போகாது என்ற நம்பிக்கையை அளித்தது.

என். கே., ஐக்கிய மாகாணங்கள்

கருப்பையை வெளிப்படுத்தும் ஜன்னல் நான் கர்ப்பமாக இருப்பது கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியவந்தது. மருத்துவ சிகிச்சையின்போது தவறு நடந்துவிட்டதால், குழந்தை பிறக்கும்போது ஏதாவது குறைபாடு இருப்பதற்கான ஆபத்து இருக்கிறது. “கருப்பையை வெளிப்படுத்தும் ஜன்னல்” (ஆகஸ்ட் 8, 1996) என்ற உங்களது கட்டுரை என் குழந்தையை கருச்சிதைவு செய்யாமல் இருக்க எனக்கு உதவியது. நான் கருவுற்றிருப்பதை அறிந்துகொண்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு இந்தப் பத்திரிகை கிடைத்தது.

எம். கே., ஐக்கிய மாகாணங்கள்

டிஸ்லெக்ஸியா “டிஸ்லெக்ஸியாவின் மனமுறிவை மேற்கொள்ளுதல்” (ஆகஸ்ட் 8, 1996) என்ற உங்களது கட்டுரைக்காக ரொம்ப ரொம்ப நன்றி. இவ்வளவு காலமாக, எனக்கு ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பது மாத்திரம் தெரியும்; ஆனால் அது என்ன கோளாறு என்று எனக்குத் தெரியவே தெரியாது. எனக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதை சமீபத்தில்தான் கவனப் பற்றாக்குறை கோளாறு நிபுணர் ஒருவர் கண்டுபிடித்தார். இப்போது விரல் வைத்து படிக்க கற்றுவருகிறேன்.

பி. கே., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்