உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/8 பக். 18-25
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • வினாடிவினாக்களுக்கான விடைகள்
விழித்தெழு!—1997
g97 4/8 பக். 18-25

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாக்களுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 25-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. ஆலய பணிமுட்டுகளிலும் பிரதான ஆசாரியன் அணிந்த உடைகளிலும் பெரும்பாலும் என்ன வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டன? (யாத்திராகமம் 36:35)

2. ராஜாவாகிய அகாஸ்வேருவின் மிக நெருங்கிய ஆலோசகர்களாக சேவைசெய்து, ராணியாகிய வஸ்திக்கு எதிராக தீர்ப்பளிப்பதில் உடன்பட்ட பெர்சிய பிரபுக்கள் எத்தனை பேர்? (எஸ்தர் 1:13-15)

3. மெல்கிசெதேக் ராஜாவாகவும் ஆசாரியராகவும் சேவைசெய்த பூர்வ நகரம் எது? (ஆதியாகமம் 14:18)

4. இயேசு தூக்கிலிடப்பட்ட கழுமரத்தைக் குறிப்பிடுவதற்கு லத்தீன் பைபிள் மொழிபெயர்ப்புகளில் என்ன வகையான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (மத்தேயு 10:38, NW அடிக்குறிப்பைக் காண்க)

5. மோசேயின் மாமனார் யார்? (எண்ணாகமம் 10:29)

6. எந்த யூதனும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் சம்பந்தமாக என்ன உரிமைபாராட்ட முடியாது என்று இயேசு சொன்னார்? (யோவான் 7:19)

7. உருவகமாக சொல்லப்போனால், பெரிய குயவருடைய கைகளில் மனிதன் என்னவாக இருக்கிறான்? (ஏசாயா 64:8)

8. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் எவ்வளவு அடிக்கடி நுழைந்தார்? (எபிரெயர் 9:7)

9. மனிதர்கள் நட்டு நீர்ப்பாய்ச்சினாலும், எதற்கான புகழ் கடவுளுக்கே சேருகிறது? (1 கொரிந்தியர் 3:7)

10. தம் பிதாவின் சித்தத்தைச் செய்வது தமக்கு எதைப் போன்றது என்று இயேசு சொன்னார்? (யோவான் 4:32, 34)

11. மத அடிப்படையிலானது என நினைத்துக்கொண்டு, சாப்பிடுவதற்கு முன்பாக பரிசேயர்கள் தங்கள் கைகளில் எதுவரை கழுவினர்? (மாற்கு 7:3, NW)

12. எந்த ஸ்தானத்தைப் பெறுவதற்கு ஒருவர் “எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்க” வேண்டுமென்று இயேசு சொன்னார்? (மாற்கு 10:44)

13. காணக்கூடியது உண்மையானதல்ல என்று பவுல் எதை சொன்னார்? (ரோமர் 8:24)

14. தொகுதியாக செல்லும் விலங்குகள் கூட்டம் என்னவென்று அழைக்கப்படுகிறது? (ஆதியாகமம் 32:16)

15. “இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ” என்று இயேசுவிடம் கேட்ட சீஷன் யார்? (லூக்கா 24:18)

16. ‘துர்க்குணத்திலே குழந்தைகளாயிருக்கிற’ அதேசமயத்தில் எதில் ‘தேறினவர்களாயிருக்கும்படி’ பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார்? (1 கொரிந்தியர் 14:20, NW)

17. நெகேமியா எருசலேமின் மதில்களைத் திரும்ப கட்டி முடித்த யூத மாதம் எது? (நெகேமியா 6:15)

18. ஏறக்குறைய 200 ஆண்டுகளாக இஸ்ரவேலின் வட ராஜ்யத்திற்கு தலைநகரமாக விளங்கிய நகரம் எது? (2 இராஜாக்கள் 3:1)

19. யோவேல் தீர்க்கதரிசியின் தந்தை யார்? (யோவேல் 1:1)

20. ஒருவர் நட்டு, பின்பு தன் உணவை சமைப்பதற்காகவும் தான் குளிர் காய்வதற்காகவும் தனக்கு ஒரு கடவுளை உண்டாக்குவதற்காகவும் பயன்படுத்துவாரென ஏசாயா சொல்கிற மரவகை எது? (ஏசாயா 44:14-17, NW)

21. பாபேல் கோபுரத்தைப் பற்றிய பைபிள் பதிவைத் தொடர்ந்து வரும் பதிவு எது? (ஆதியாகமம் 11:10)

22. மேசியா தோன்றுவதற்கு முன்பு எந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதி உடனடியாக வரும்? (தானியேல் 9:25)

23. நல்ல ராஜாவாகிய எசேக்கியாவின் தாய் யார்? (2 இராஜாக்கள் 18:2; 2 நாளாகமம் 29:1)

24. ‘விக்கிரகங்களை அருவருக்கும்’ ஒருவர், கோயில்களை என்ன செய்யமாட்டார்? (ரோமர் 2:22)

25. இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட ஒருவர் எதன் அடிப்படையில் தனிப்பட்ட விதமாக நியாயந்தீர்க்கப்படுவார்? (வெளிப்படுத்துதல் 20:12, 13)

26. யாக்கோபு சொல்கிறபடி, யாருக்கு கரிசனைகாட்டுவது உண்மை வணக்கத்தின் அடையாளமாக இருக்கிறது? (யாக்கோபு 1:27)

வினாடிவினாக்களுக்கான விடைகள்

1. இரத்தாம்பரமும் சிவப்பும்

2. ஏழு

3. சாலேம்

4. க்ருக்ஸ் (Crux)

5. ரெகுவேல்

6. அதன்படி தான் நடப்பதாக

7. களிமண்

8. வருஷத்திற்கு ஒருதரம்

9. அதை விளையச் செய்வது

10. போஜனம்

11. முழங்கை

12. இயேசுவின் சீஷர்களில் முதன்மையானவராக

13. நம்பிக்கை

14. மந்தை

15. கிலெயோப்பா

16. ‘புரிந்துகொள்ளும் திறன்’

17. எலூல்

18. சமாரியா

19. பெத்துவேல்

20. புன்னைவகை

21. “சேமுடைய வம்சவரலாறு”

22. ‘அறுபத்திரண்டு வாரம்’

23. ஆபி அல்லது அபியாள்

24. அவற்றை கொள்ளையிடும்படி

25. அவர்களுடைய கிரியைகள்

26. திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்