குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆறுதல்
கடந்த ஜூலை 17-ல் TWA விமானம் 800, அட்லான்டிக் பெருங்கடலில் நொறுங்கி விழுந்தபோது அதிலிருந்த 230 பேரும் இறந்துபோனார்கள். இவர்களுள் பென்சில்வேனியாவைச் சேர்ந்த, சுமார் 5,000 குடிமக்களை கொண்டுள்ள மான்ட்டுர்ஸ்வில் என்னும் சிறிய நகரத்தைச் சேர்ந்த பிரெஞ்சு மொழி பயிலும் 16 மேல்நிலைப் பள்ளி மாணாக்கரும், வயதுவந்த ஐந்து துணைக்காவலர்களும் (chaperones) அடங்குவர். ஆகஸ்ட் 17-ம் தேதி நகரில் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது; அதில் பேசியவர்களுள் நியூ யார்க் நகரின் மேயர் ரூடால்ஃப் ஜூலியனியும் ஒருவர். நியூ யார்க் நகரின் மக்கள் தொகையில் இதே சதவிகித அளவு ஆட்கள் இறந்திருந்தால், 35,000 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதாக அவர் குறிப்பிட்டார்!
மாணாக்கர் பலரின் சவ அடக்கங்களில் பேசும்படி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டான் சாண்லர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் பைபிளின் வாக்குறுதியை வெளிப்படுத்துதல் 21:4-லிருந்து மேற்கோள் காட்டினார்; கடவுளுடைய புதிய ஒழுங்கு முறையில், “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று அது சொல்லுகிறது. அத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு அவர் பிரசங்கி 9:11-ஐ (NW) சுட்டிக்காட்டினார், “காலமும் எதிர்பாரா சம்பவமும்” நம் அனைவருக்கும் நேரிடுவதைப் பற்றி அது சொல்கிறது. அவர்களுடைய உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அத்தகைய ஆறுதலளிக்கும் குறிப்புகளை சொல்லக்கேட்ட பலர் ஆச்சரியமடைந்தார்கள்.
மேற்கொண்டும் உதவி அளிப்பதற்காக, உயர்நிலைப் பள்ளியில் ஒரு மேசையைப் போட்டு அதில் நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் என்ற 32 பக்க சிற்றேடு, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதி போன்ற பிரசுரங்களை சாண்லர் வைத்தார். பைபிள் பிரசுரத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகளை ஏற்றுக்கொண்டு, இவை அளித்த ஆறுதலுக்காக பலர் நன்றி தெரிவித்தனர்.
நீங்களும்கூட தேவையான ஆறுதலை மேற்குறிப்பிட்ட சிற்றேட்டிலிருந்தும் துண்டுப்பிரதியிலிருந்தும் பெறலாம். இவற்றின் பிரதிகள் ஒவ்வொன்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது ஒரு இலவச பைபிள் படிப்பை கொண்டிருக்க விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
நன்றி: Williamsport Sun-Gazette
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Corey Sipkin/Sipa Press