இயேசு அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
ஐக்கிய மாகாணங்களில் வாழும் 84 வயது பெண்மணி ஒருவர், 448 பக்கங்களைக்கொண்ட எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற படங்களுள்ள, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரிக்கும் புத்தகத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் பைபிளை அநேகம் முறை முழுமையாக வாசித்திருக்கிறேன். பைபிளில் வாசிப்பதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள மிகப் பெரிய மனிதர் புத்தகம் எனக்கு உதவியிருக்கிறது.” அந்தப் புத்தகம், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பைபிள் பதிவுகளை அவருக்குத் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகிறது.
அவர் இவ்வாறு எழுதினார்: “அந்தப் புத்தகத்தை வாசிப்பதில் எனக்கு சலிப்பே ஏற்படுவதில்லை. நான் அதை ஏழு முறை வாசித்துவிட்டேன், இப்போது மறுபடியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இயேசுவின் அற்புதமான குணாதிசயங்கள் என் இதய உணர்ச்சிகளைத் தூண்டின. பூமியில் இயேசுவின் கடைசி வாரத்தைப் பற்றிய அதிகாரங்களை நான் வாசிக்கும்போது, முக்கியமாக அவரது கடைசி ஒருசில மணிநேரங்களின்போதும் கழுமரத்தில் அவர் இறந்தபோதும் அவர் மோசமாக நடத்தப்பட்ட விதத்தை அறிந்து வேதனைப்படுகிறேன். அப்படியிருந்தும், அவர் நமது பரலோக தகப்பனாகிய யெகோவாவை மகிமைப்படுத்தினார்.”
நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவத்தையும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் அளிக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுவைப் பற்றி இன்னும் அதிகத்தைக் கற்றுக்கொள்ள அது உங்களுக்கு உதவும். இப்புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெறவோ ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கவோ நீங்கள் விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.