“விழித்தெழு!-விலிருந்து இன்னும் நல்ல தகவலைப் பெறுவாய்”
போதைமருந்துக்கு அடிமையாதல் பற்றி தனது உளவியல் ஆசிரியையிடமிருந்த ஒருசில தகவல்களுக்காகக் கேட்டபோது, பாரி, இத்தாலியில் ஒரு கல்லூரி வகுப்பில் படிக்கும் பாஸ்க்வாலே என்ற ஓர் இளம் யெகோவாவின் சாட்சிக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது. ஆனாலும், முன்பெல்லாம் இவ்வாசிரியை யெகோவாவின் சாட்சிகளிடமாக தப்பெண்ணம் கொண்டிருந்தவர். அவரது மனோபாவத்தை மாற்றியிருந்தது எது?
பாஸ்க்வாலே இவ்வாறு விளக்கினார்: “ஒரு வகுப்பின் முடிவில், அவ்வாசிரியை, முதுநிலை ஆய்வுக்கட்டுரை ஒன்றுக்காகத் தான் தயாரித்துக் கொண்டிருந்த சிறார் துர்ப்பிரயோகம் சம்பந்தப்பட்ட தகவலைக் கண்டறிவதில் உதவிக்காக அவரது மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். ‘பாலியல் கல்வி—அதை யார் அளிக்க வேண்டும்?’ (பிப்ரவரி 22, 1992 [ஆங்கிலம்]) போன்றவற்றையும், இது சம்பந்தமான பிற விஷயங்களையும் பற்றி விளக்கிய விழித்தெழு! இதழ்கள் சிலவற்றை நான் நினைவுகூர்ந்தேன். என்றபோதிலும், சாட்சிகளிடமாக என் ஆசிரியைக்கிருந்த தப்பெண்ணத்தை அறிந்தவனாய், அப் பத்திரிகைகளை அவருக்கு அளிக்கும்படி என்னோடு படித்த ஒரு மாணவியைக் கேட்டுக்கொண்டேன்.”
ஒரு சில நாட்களுக்குப் பிறகு, போதை மருந்துக்கு அடிமையாதல் சம்பந்தமாக தனக்கு வேண்டியிருந்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி தன் ஆசிரியையிடம் தான் கேட்டபோது நடந்ததை பாஸ்க்வாலே இவ்வாறு விளக்குகிறார்: “உடனே அவர் பதிலளிக்கவில்லை. மாறாக, அவர் எழுந்து என் கையைக் குலுக்க வந்தார். முன்பெல்லாம், குறைந்த தகவல் உடையவையென்றும், சிறுபிள்ளைக்குரியவையென்றும் தான் கருதியதால், யெகோவாவின் சாட்சிகளுடைய பத்திரிகைகளை ஏற்றுக்கொள்ள தனக்கு விருப்பம் இருந்ததில்லை என்று கூறினார். என்றபோதிலும், அவற்றை வாசித்த பிறகு, தன் மனதை அவர் மாற்றிக்கொண்டார். ஒரு சமூக நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், அப் பத்திரிகைகளில் அடங்கியிருந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாய் இருப்பதைத் தான் கண்டறிந்ததாக அவர் கூறினார். விழித்தெழு!-விலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்புகளை தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்போவதாக அவர் கூறினார்.”
போதை மருந்துக்கு அடிமையாதல் பற்றிய தகவல்களுக்காக பாஸ்க்வாலே கேட்டுக்கொண்டதைப் பற்றியென்ன? “நான் அவற்றை அதிக விருப்பத்துடன் உனக்குக் கொடுப்பேன்” என்று அவர் கூறினார், “ஆனால், விழித்தெழு!-விலிருந்து இன்னும் நல்ல தகவலைப் பெறுவாய். தகுந்த விஷயங்களைப் பற்றி விளக்கும் ஒரு பத்திரிகை அது; பல்கலைக்கழகப் படிப்பு வரையிலும்கூட அது பயனுள்ளது.”
சமீபத்திய பிரச்சினைகளைப் பற்றி விழித்தெழு! பரிசீலித்து, அன்றாட வாழ்வில் பெரிய, அல்லது சிறிய சவால்களை எதிர்ப்படுவோருக்கு நடைமுறையான உதவி அளிக்க முயலுகிறது. பைபிள் அளிக்கவிருக்கும் உதவியைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், விழித்தெழு!-வை விநியோகிக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள்; அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.