ஹங்கேரியில் பைபிள் இலக்கியம் போற்றப்படுகிறது
ஹங்கேரியிலுள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகத்திற்கு போல்மோஜூயீவாரோஷிலிருந்து ஓர் ஆசிரியர் எழுதினார்: “நான் கண்ட ஒரு புத்தகம் என் கவனத்தைக் கவர்ந்தது. முடிந்தால், தயவுசெய்து எனக்கு ஒரு பிரதியை அனுப்பவும். அதன் தலைப்பு என்னுடைய பைபிள் கதை புத்தகம்.” இப் புத்தகத்தை வாசித்த பிறகு, புடாபெஸ்ட்டிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டார்: “தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 6-ம் வகுப்புக்கென்று என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் 20 பிரதிகளைத் தருவிக்க நாங்கள் விரும்புகிறோம்.”
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை வாசித்திருந்த, போலடோன்போக்லாரைச் சேர்ந்த ஒருவர் எழுதினார்: “அப் புத்தகம் சிந்தனையைத் தூண்டியது, அதில் கொடுக்கப்பட்டிருந்த பைபிள்-அடிப்படையிலான விடைகள் திருத்தமானவை. அப் புத்தகம் எனக்கு மிகவும் உதவியது, எனக்கிருந்த கேள்விகளுக்கான விடைகளையும் பெற்றேன். என் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்த விரும்புகிறேன். ஆகவே, முடிந்தால், தயவுசெய்து பைபிள் சம்பந்தமான பிரசுரங்களை எனக்கு அனுப்பவும்.”
பைபிள் அறிவை வளர்க்க விரும்புவோருக்கு உதவியளிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கின்றனர். மேற்கூறப்பட்ட புத்தகங்களில் ஏதாவதொன்றின் பிரதியைப் பெற நீங்கள் விரும்பினால், அல்லது உங்களுடன் பைபிளைக் கலந்தாலோசிக்க எவரேனும் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திக்க விரும்பினால், தயவுசெய்து, Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.