‘உலகில் வாழும் ஒவ்வொருவரும் இப்பிரசுரத்தை வாசிக்க வேண்டும்’
அ.ஐ.மா.-வைச் சேர்ந்த அலபாமாவில் வாழும் ஒரு வாசகர் விழித்தெழு!-வுக்கான இதயப்பூர்வமான போற்றுதலைத் தெரிவித்து எழுதினார்:
“விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்திருந்த, ‘மரண தறுவாயில் வெற்றியடைதல்’ (மே 8, 1993 [ஆங்கிலம்]) என்ற தலைப்பைக் கொண்ட பழைய இதழ் ஒன்றை இப்போதுதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதைக் கீழே வைக்கவே எனக்கு மனமில்லை. அது தகவல் நிறைந்ததாயும், தத்ரூபமாயும், கல்வி புகட்டுவதாயும் இருந்தது.
“உலகில் வாழும் ஒவ்வொருவரும் இப் பிரசுரத்தை வாசிப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றவர்களாய் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்!”
பிறருக்கு அறிவொளியூட்டுவதற்காக விழித்தெழு! 78 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது. அதன் கட்டுரைகள் மதத்தையும் அறிவியலையும், அதே சமயத்தில் பல மக்களின் மனங்களிலுள்ள சமூக, உணர்ச்சிப்பூர்வ, குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கலந்தாராய்கிறது.
நீங்கள் விழித்தெழு! பத்திரிகையைப் பெற விரும்பினால், அல்லது பைபிள் கல்வியின் மதிப்பைப் பற்றி உங்களோடு கலந்தாலோசிக்கும்படி எவரேனும் உங்கள் வீட்டிற்கு வர விரும்பினால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள, உங்களுக்கு அருகிலுள்ள முகவரிக்கு எழுதுங்கள்.