உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 5/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “பாவத்தில் வாழ்வது” ஒரு பாவமில்லையா?
  • வாசிப்பதற்கான திறமையையும் எழுதுவதற்கான திறமையையும் இழப்பது
  • சிந்திப்பதற்குக் குடியுங்கள்
  • பூச்சிக்கொல்லி எச்சரிக்கை
  • பிள்ளைகளுக்கான டிவி நிகழ்ச்சிகள்—மிகவும் வன்முறை நிரம்பியது
  • அதிசயத்தக்க மரம்
  • மிகவும் ஒல்லியாக இருக்கமுடியுமா?
  • பாம்புக்கடி—என்ன செய்யக்கூடாது
  • கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை
  • இயற்கையான புன்முறுவல் தொற்றும் தன்மையுள்ளது
  • சோதிடர்கள் தோல்வி
  • இயேசுவைப் பார்க்க ஜோதிடர்கள் வருகிறார்கள்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசுவும் வானசாஸ்திரிகளும்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • இயேசுவும் வானசாஸ்திரிகளும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • சோதிடம்—உங்கள் எதிர்காலத்தைக் காட்டுமா?
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 5/8 பக். 28-29

உலகை கவனித்தல்

“பாவத்தில் வாழ்வது” ஒரு பாவமில்லையா?

இங்கிலாந்து சர்ச்சின் சமூக கடமை வாரியம், “பாவத்தில் வாழ்வது” இனிமேலும் பாவமில்லை என்பதாக சர்ச்சுக்கு சமீபத்தில் ஆலோசனை கொடுத்ததாக கார்டியன் வீக்லி சொல்லிற்று. அறிக்கையின்படி, “ஒத்த பாலின புணர்ச்சியிலீடுபடும் ஆண்களையும் பெண்களையும் உட்பட, திருமணமாகாத தம்பதிகளிடமிருந்து சபையினர் கற்றுக்கொண்டு, ‘குடும்பத்தின் பொற்காலத்தை’ திரும்பிப்பார்ப்பதன் கவர்ச்சியை எதிர்க்கவேண்டும்,” என்பதாகவும்கூட வாரியம் சர்ச்சுக்கு ஆலோசனை தெரிவித்தது. “இது சர்ச்சை ஒரு பரிகாசப்பொருளாக்கி, அநேக உண்மையுள்ள கிறிஸ்தவர்களிடையே கடுந்துயரத்தை உண்டுபண்ணுகிறது,” என்று பிலிப் ஹாக்கிங் என்ற பாதிரி பிரதிபலித்ததாக கார்டியன் மேற்கோள் காண்பிக்கிறது.

வாசிப்பதற்கான திறமையையும் எழுதுவதற்கான திறமையையும் இழப்பது

பழக்கம் விட்டுப்போனதன் காரணமாக, ஜெர்மனியில் கிட்டத்தட்ட 30 லட்சம் நபர்கள் வாசிப்பதற்கான திறமையையும் எழுதுவதற்கான திறமையையும் இழுந்துவிட்டிருக்கின்றனர். வாசிக்கும் ஸ்தாபனத்தின் செயலாளரான யோஹானஸ் ரிங், மின்னணுவியல் சாதனத்தால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பிரச்சினையை இன்னும் மோசமாக்குகிறது என்பதாக விளக்கினார். படிப்பின்மையை எதிர்த்துப் போராடும் உலக மாநாடு ஒன்றிலே, இந்த வகையான படிப்பின்மை அதிகரித்திருப்பதற்கு தொலைக்காட்சி, கம்ப்யூட்டர்கள், வீடியோ விளையாட்டுகள் ஆகியவற்றின் பரவலான உபயோகம் ஓரளவுக்கு காரணமாயிருக்கிறது என்று ரிங் குறிப்பிட்டதாக ஃப்ராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜெமைன் ட்ஸைட்டுங் அறிக்கை செய்கிறது.

சிந்திப்பதற்குக் குடியுங்கள்

மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் உள்ளதா? ஒருவேளை நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கவேண்டிய தேவையிருக்கலாம் என்பதாக ஏஷியாவீக் கருத்து தெரிவிக்கிறது. அதிகமாக தண்ணீர் குடிப்பது மந்தமான தன்மைக்கு எதிராக போராட மாணவர்களுக்கு உதவுகிறது என்று ஹாங்காங்கின் பள்ளிச்சிறுவர் சிலரின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமீபத்தில் ஆலோசனை கொடுக்கப்பட்டது என்பதாக அந்தப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. பிள்ளைகள் ஒரு நாளைக்கு 8-லிருந்து 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்பதாக பெற்றோருக்கு சொல்லப்பட்டது. கற்றுக்கொண்டிருக்கும் மூளை என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுத்துக்கூறுவதாய், உடல் வறட்சி குறைவாக கற்றுக்கொள்வதற்கு வழிநடத்தலாம் என்பதைத் தெரிவிக்கும் ஆராய்ச்சிகளை அந்த அறிக்கை சுட்டிக்காண்பித்தது. உண்மையில் திரவத்தை வெளியேற்றும்படி உடம்பைத் தூண்டும் குளிர்பானங்கள், காபி, டீ, அல்லது பழரசங்களையும்கூட குடிப்பதைப் பார்க்கிலும் தூய்மையான, சுத்தமான தண்ணீரைக் குடிப்பது மேலானது என்பதாக ஏஷியாவீக் குறிப்பிடுகிறது.

பூச்சிக்கொல்லி எச்சரிக்கை

பர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின்படி, பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டிருக்கும் பழங்களையும் காய்கறிகளையும்விட வீட்டுப்பொருட்களின் மூலமாக அமெரிக்கர்கள் பூச்சிக்கொல்லியின் பாதிப்புக்கு அதிகமாக ஆளாகிறார்கள். கரப்பான்பூச்சி தெளிப்பான்கள், ஈக்கள் ஒட்டிக்கொள்வதற்காக தொங்கவிடப்படும் காகிதங்கள், தெள்ளுப்பூச்சி ஸ்ப்ரேகள், அந்துருண்டைகள், ஆகியவையும் இவற்றைப்போன்ற பொருட்களும் விஷமுள்ள இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விஷச்சாவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நீண்டகால உடல்நல ஆபத்துகளையும் அநேகம் அளிக்கின்றன. UC பர்கெலே வெல்னஸ் லெட்டர், பாதுகாப்பான மாற்றுப்பொருட்களை சிபாரிசு செய்கிறது: பூச்சிவலைகளை பழுது பாருங்கள் அல்லது புதிதாகப் பொருத்துங்கள், பூச்சிகள் நுழைவதைத் தடுப்பதற்கு தரையிலும் சுவர்களிலும் உள்ள விரிசல்களை அடையுங்கள்; உணவுப்பொருட்களையும் குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வையுங்கள்; ஈ அடிப்பதற்கான சாதனங்களைப் பயன்படுத்துங்கள்; உணவுத் துணுக்குகளைப் பெருக்கி எடுங்கள்; தரைவிரிப்புகளை நீராவியால் சுத்தம் செய்யுங்கள்; கம்பளித்துணிகளை அடிக்கடி சுத்தம் செய்து மூடமுடிந்த பைகளில் போட்டு வையுங்கள். கரப்பான்கள் தொடர்ந்து இருக்குமானால், பிசுபிசுப்பான பொறிகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள் அல்லது பீரோக்களுக்கு பின்னால் போரிக் அமிலத்தைத் தெளியுங்கள், ஆனால் இந்தப் பொருட்களிடம் நெருங்குவதிலிருந்து பிள்ளைகளையும் செல்லப் பிராணிகளையும் பாதுகாத்திடுங்கள் என்பதாக வெல்னஸ் லெட்டர் ஆலோசனை கொடுக்கிறது.

பிள்ளைகளுக்கான டிவி நிகழ்ச்சிகள்—மிகவும் வன்முறை நிரம்பியது

பிள்ளைகளுக்கென்று தயாரிக்கப்படும் அநேக நிகழ்ச்சிகளில் “படுமோசமான தீவிர வன்முறை” அதிகமிருப்பதாக அமெரிக்க நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஒரு ஆராய்ச்சி முடிவுசெய்திருக்கிறது. தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னலின்படி, லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, “வன்முறைக்கென்றே வன்முறையை” பெற்றிருக்கும் அநேக புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர்களைத் தேர்ந்தெடுத்தது. நிகழ்ச்சிகள் பொதுவாக சனிக்கிழமை காலைவேளைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அந்தச் சமயத்தில் பிள்ளைகள் பள்ளிகளில் இருப்பதுமில்லை, அவர்களுடைய பெற்றோர்கள் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதுமில்லை. இந்த வகையான நிகழ்ச்சி புதிதானதில்லை என்றாலும், “இந்தக் காட்சிகளின் பொல்லாங்கும், தொடர்ச்சியான சண்டைகளும், இன்று அதிகரித்துவருவதாகத் தோன்றும் ஓரளவு சமீபத்திய பாணியை உருவாக்குகிறது,” என்பதாக அந்த ஆராய்ச்சி கண்டது.

அதிசயத்தக்க மரம்

விலையுயர்ந்த இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமலேயே குடி நீரை சுத்தமாக்கும் விதைகளை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். வட இந்தியாவிலுள்ள மொரிங்கா ஆலிஃபெரா மரத்தின் பொடியாக்கப்பட்ட விதைகள், பாக்டீரியா மற்றும் வைரஸை கவர்ந்திழுத்து அவற்றோடு ஒட்டிக்கொள்கின்றன. இவை மேற்பரப்பிலிருந்து எடுத்துப்போடப்படலாம் அல்லது அடுக்குகளில் வடிகட்டி எடுக்கப்படலாம் என்பதாக லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பலவித உபயோகங்களைக் கொண்டுள்ள இந்த விதைகள் சமையல் எண்ணெய், சோப்புகள், ஒப்பனைப்பொருட்கள், விளக்கு எரிபொருள், தோல் வியாதிகளுக்கான ஒரு களிம்பு ஆகியவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம். இந்த மரத்தைப் பயிரிடுவது சுலபம், அது வறட்சியைத் தாங்கும், ஒரு காற்றுத்தடுப்பாக சேவிக்கும், மேலுமாக எரிபொருளையும் காகிதம் தயாரிப்பதற்கான கூழையும்கூட அது அளிக்கிறது. இதன் காரணமாக, அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதனால் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் லட்சக்கணக்கான மரணங்களைத் தடுப்பதற்கு உதவும் விதைகளை விளைவிக்க இந்த மரங்களை நடும்படி ஆராய்ச்சியாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

மிகவும் ஒல்லியாக இருக்கமுடியுமா?

தோற்றத்தால் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தில், மிகவும் ஒல்லியாக இருப்பது உண்மையில் முடியாத காரியமென்று அநேகர் ஊகிக்கின்றனர். குண்டாக இருப்பதன் ஆரோக்கிய சம்பந்தமான ஆபத்துக்களை உறுதிசெய்யும் ஒரு சமீபத்திய ஆராய்ச்சி, இந்தப் பொதுவான கருத்தை ஆதரிப்பதாக ஒருவேளை தோன்றலாம், ஆனால் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆசிரியையான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோ-ஆன் மான்ஸன், மிகவும் ஒல்லியாயிருப்பதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது அறியப்பட வேண்டுமென்று விரும்பினார். “பற்றாத உணவுச்சத்து, மிதமிஞ்சிய உடற்பயிற்சி, அல்லது புகைத்தல் ஆகியவற்றின்மூலம் நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்,” என்பதாக அவர் சொல்வதாக தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கோள் காண்பிக்கிறது. மிதமிஞ்சிய பத்தியத்தின் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கும் பல மருத்துவர்களைக் குறிப்பிடுவதாய், ஜர்னல், அளவுக்கதிகமாய் ஒல்லியாயிருப்பதன்—ஒருவேளை ஒருவருடைய உயரத்திற்கேற்ற சராசரி எடையையும்விட 20 சதவீதம் குறைவாயிருப்பதன்—சில ஆபத்துகளைப் பட்டியலிடுகிறது. இவை, பசியின்மை, எலும்பு மெலிதல், ஹார்மோன் தகர்வு, விழுதல், எலும்புமுறிவுகள், காயம் ஆறுவதில் தாமதம் ஆகியவையாகும்.

பாம்புக்கடி—என்ன செய்யக்கூடாது

பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் காரியத்திற்கு வரும்போது, வல்லுநர்கள் எப்போதுமே ஒத்துப்போவதில்லை. எனினும், FDA கன்ஸ்யூமர் பத்திரிகையின்படி, அநேக ஐ.மா. தொழில்முறை மருத்துவர்கள் “என்ன செய்யக் கூடாது என்ற தங்களுடைய கருத்துகளில் கிட்டத்தட்ட ஏகமனதுள்ளவர்களாக இருக்கின்றனர்.” ஒரு மருத்துவமனைக்கு 30-லிருந்து 40 நிமிடங்களுக்குள்ளாக செல்லக்கூடிய ஒரு தூரத்தில் நீங்கள் தங்கியிருந்தால், இதுதான் ஆலோசனை: கடித்த இடத்தில் ஐஸ்கட்டியை வைக்காதீர்கள், குருதித் தடுப்புக் கருவிகளையோ அல்லது மின்சார அதிர்ச்சி வைத்தியத்தையோ பயன்படுத்தாதீர்கள், புண்ணின்மீது வெட்டுகளை உண்டுபண்ணாதீர்கள். பாம்பு விஷமுள்ளதாக தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் பரிந்துரை என்னவென்றால், எல்லா பாம்புக்கடிகளும் அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நிலையாக கருதப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுபோகப்பட வேண்டும். மிகச் சிறந்த தடுப்பு நடவடிக்கை, “பாம்புகளைத் தொல்லைகொடுக்காது விட்டுவிடுவதாகும். ஒரு பாம்பைக் கொன்றுபோட முயற்சி செய்வதன் காரணமாகவோ அல்லது அதை அருகிலிருந்து பார்ப்பதற்கு முயல்வதன் காரணமாகவோதான் அநேக ஜனங்கள் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்,” என்பதாக FDA கன்ஸ்யூமர் சொல்கிறது.

கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை

உலகத்திலேயே மிகப் பிரபல விளையாட்டான கால்பந்தாட்டத்தில், வீரர்கள் தங்கள் தலையால் பந்தைத் தட்டலாம். எனினும், அடிக்கடி அவ்வாறு தட்டுவது மூளைக்கு சேதத்தை உண்டுபண்ணலாம் என்பதாக ஷோர்னல் டோ பராசில் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின்படி, கால்பந்தாட்ட வீரர்கள் தலையில் பந்தைத் தட்டுவதன் காரணமாக ஞாபக மறதியினாலும் மூளையின் ஆற்றல் குறைவாலும் பாதிக்கப்படலாம். ஒப்பிடுகையில் சேதம் குறைவானதாக இருந்தாலும், அதன் இயல்பில், தலையில் அடிக்கடி பலத்த அடி பெறும் குத்துச்சண்டை வீரர்கள் சிலரைத் தாக்கும் சேதத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. பௌலோ நைமெயர் ஃபில்யோ என்ற நரம்பியல் மருத்துவர், பந்து மிகவும் உயரத்திலிருந்து வேகமாக கீழே விழும்போதோ அல்லது அது மிகவும் ஈரமாயிருப்பதன் காரணமாக கனமாயிருக்கும்போதோ தங்கள் தலையால் அந்தப் பந்தைத் தட்டுவதை ஆட்டக்காரர்கள் தவிர்க்க வேண்டும் என்பதாக ஆலோசனைக் கொடுக்கிறார். மிதமிஞ்சிய அளவில் பந்தைத் தலையால் தட்டுவது ஆட்டக்காரர்களுடைய கண்பார்வையையும் சேதப்படுத்தும் என்பதாக சில வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இயற்கையான புன்முறுவல் தொற்றும் தன்மையுள்ளது

டாம்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யாரி ஹியடேனேன் மற்றும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்களில் மருத்துவ ஆய்வு செய்யும் ஸ்தாபனத்தைச் சேர்ந்த டாக்டர் வேக்கோ ஆகிய இரண்டு ஃபின்னிஷ் ஆராய்ச்சியாளர்களின்படி, இரண்டு விதமான புன்முறுவல் இருக்கின்றன. ஒரு விதமான புன்முறுவல் வல்லுநர்களால் சமூகப் புன்முறுவல் என்பதாக அறியப்படுகிறது. இது வெறுமனே கடமை உணர்ச்சியின் காரணமாக மட்டுமே உந்துவிக்கப்படுகிறது, கன்னங்களின் தசைகளை மாத்திரமே உள்ளடக்குகிறது. மறுபக்கத்தில், இயற்கையான புன்முறுவல் இன்பத்தின் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது, மேலுமாக அது கன்னங்களின் தசைகளை மாத்திரம் அல்ல, ஆனால் கண்களைச் சுற்றியுள்ள தசைகளையும் செயல்படச் செய்கிறது. பின்லாந்திலிருந்து வந்த ஒரு சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை, இயற்கையான புன்முறுவல் தொற்றும்தன்மையுள்ளது என்பதாகக் குறிப்பிடுகிறது. மிக நுணுக்கமான தசை அசைவுகளையும் கண்டுபிடித்து பதிவு செய்ததன் மூலம், இயற்கையான புன்முறுவலுடன் இருக்கும் எவராவது ஒருவருடைய புகைப்படத்தை வெறுமனே பார்ப்பதுதானே, ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட நபர்களைப் புன்னகைக்க தூண்டியது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். சமூக புன்முறுவலை வெளிக்காட்டின ஜனங்களுடைய புகைப்படங்களைப் பார்த்தபோது அந்த நபர்களில் இந்தப் பிரதிபலிப்பு கவனிக்கப்படவில்லை.

சோதிடர்கள் தோல்வி

டை சிட் என்ற ஜெர்மானிய செய்தித்தாளின்படி, நெதர்லாந்தில் 44 சோதிடர்கள் சமீபத்தில் நாஸ்திகர்களின் ஆலந்து நாட்டுக்குரிய சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு பரீட்சைக்கு தங்களை மனமுவந்து கீழ்ப்படுத்தினர். சோதிடர்களுக்கு இரண்டு பட்டியல்கள் கொடுக்கப்பட்டன. ஒன்றில் ஏழு நபர்களுடைய பிறந்த இடமும் பிறந்த தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவதில் அந்த ஏழு நபர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஏராளமான தனிப்பட்ட தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. சோதிடத்தில் அவர்களுக்கிருந்த பெயரளவிலான திறமைகளைப் பயன்படுத்தி, முதல் பட்டியலில் இருந்த ஒவ்வொரு நபரையும் இரண்டாவது பட்டியலில் கொடுக்கப்பட்டிருந்த ஏற்ற வருணனையோடு இணைக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் எந்தளவுக்கு வெற்றிகரமாக செய்தார்கள்? அவர்களில் பாதியளவானோர் ஒரே ஒரு சரியான பதிலையும்கூட பெறவில்லை, மேலுமாக அவர்கள் எவராலேயும் மூன்றுக்கும் அதிகமாய் சரியாக இணைக்கமுடியவில்லை. முந்திய பரீட்சைகளும் இதேபோன்ற விளைவுகளை உண்டுபண்ணின, ஆனால் தவறான தகவல் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதாக சோதிடர்கள் வாதாடினர். எனினும் இது உண்மையாயிருந்தால், பரீட்சைக்குரிய நிபந்தனைகள் சோதிடர்களாலேயே ஏற்படுத்தப்பட்டன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்