“அவை அவ்வளவு பிரமாதமாய் இருந்திருக்கின்றன!”
“காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதை நான் எப்போதுமே அனுபவித்திருக்கிறேன், ஆனால் சமீப ஆண்டுகளில் அவை அவ்வளவு பிரமாதமாய் இருந்திருப்பதால் அவற்றை விவரிப்பதற்கு பெயருரிச் சொற்களைக் கண்டுபிடிப்பது கடினமாயுள்ளது. அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 8, 1994 விழித்தெழு! வெளியீடுகளில், “மதம் போரை ஆதரிக்கையில்,” “சரஜெவோ—1914 முதல் 1994 வரை” ஆகிய தலைப்புகளில் அளிக்கப்பட்டிருந்த தகவலுக்காக நான் என் போற்றுதலைத் தெரிவிக்க விரும்பினேன். பாஸ்னிய-செர்பிய-க்ரோயேஷிய உள்நாட்டுப் போர் ஒரு சிக்கலான, துக்ககரமான சூழ்நிலையாய் இருக்கிறது, ஆனால் ஒரு க்ரோயேஷியப் பெண்ணாக, அது என் இதயத்தை உருக வைக்கிறது. அந்தப் போரின் வரலாற்றையும், வெகு காலத்துக்கு முன்னதாக, அதாவது 1054-ல் ஆரம்பித்த அதன் ஆழமான வேர்களையும் பற்றி நீங்கள் படிப்படியாய் விவரித்த விதத்தையும் நான் குறிப்பாகப் போற்றினேன். இந்நாட்டு மக்களின் இனத் தொகுதிகளுக்கிடையே பேரளவான பிரிவுகளுக்கும் பகைமைக்கும் வழிநடத்தியிருக்கும் மதத்தின் பங்கையும் அதன் இரக்கமற்ற முயற்சிகளையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியது. விசனகரமாக, இயல்பாகவே நல்ல மக்களாய் இருக்கும் இவர்களில் மோசமானதை மட்டுமே இன்றைய உலகம் காணமுடிகிறது. புரிந்துகொள்ள கடினமாயிருக்கும் ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும்படிச் செய்ததற்காக மீண்டும் என் நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். [ஒப்பமிடப்பட்டது] M. K.”
கவனமான ஆராய்ச்சிக்காகவும் நோக்கமுள்ள அறிக்கைக்காகவும் விழித்தெழு! நற்பெயரை நிலையாகப் பெற்றுள்ளது. ஆனால் இது, இந்தப் பூமியைத் தமது ராஜ்ய ஆளுகைக்கு உட்படுத்தும் கடவுளுடைய வாக்கின் அடிப்படையில் அமைந்த ஒரு சமாதானமுள்ள எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளிக்கும் ஒரு பத்திரிகையாகவும் உள்ளது.
நீங்கள் இப்பத்திரிகையைத் தொடர்ச்சியாக வாசிக்க விரும்புவீர்களானால், தயவுசெய்து உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்புகொள்ளுங்கள், அல்லது இவ்வெளியீட்டின் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Right: Culver Pictures