அது அவரை இதமாக உணரச்செய்தது
இந்தியாவிலுள்ள பம்பாயில் வெளியாகும் தி டெய்லி செய்தித்தாளில் “சுயமாக நான்” என்று தலைப்பிடப்பட்ட பத்தியை தாரா பட்டேல் எழுதுகிறார். ஜனவரி 22, 1995 தேதியிட்ட விழித்தெழு! இதழில் வெளிவந்த “வாழ்க்கை சலிப்புத்தட்டுகிறதா? உங்களால் மாற்ற முடியும்!” என்ற கட்டுரையைப் பற்றி ஜனவரி மாதத்தில் அவர் எழுதினார். “உலகின் உயரிய நல்லொழுக்கப் பத்திரிகைகளில் இதுவும் ஒன்று என நினைத்து அதை மதிக்காமல் தள்ளிவிட மனம்சாய்ந்தபோதிலும், நான் இதன் சந்தாவைப் பெற்றேன்,” என்று விழித்தெழு! பத்திரிகையைப் பற்றி அவர் கூறினார்.
ஆயினும் அவர் மேலும் கூறினார்: “கட்டுரையில் ஆழமாக செல்லச்செல்ல, எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன், நிச்சயமாகவே, என் வாழ்க்கை சலிப்புத்தட்டுகிறது, பயங்கரமாக சலிப்புத்தட்டுகிறது. எவ்வளவு சலிப்பாக உள்ளது என்று கேட்கவும் தேவையில்லை! ஆகவே அதன் தீர்வு என்ன?” பிறகு அவர் விளக்கமான முடிவுரையில் விழுத்தெழு!-வை தொடர்ந்து மேற்கோள் காட்டினார்: “கற்றுக்கொண்டே இருங்கள். தனிப்பட்ட இலக்குகளை வைத்திருங்கள். படைப்புத் திறம்படைத்தவர்களாயிருங்கள். உங்கள் கைகளால் ஏதாகிலும் செய்யுங்கள். வாழ்க்கையில் நோக்கத்தைக் கொண்டிருங்கள். கடவுளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
“இவை அனைத்தும். மிதமிஞ்சிய நீதி போதனையோ இல்லையோ, இதைப்பற்றி சிந்திக்கும்போது, இது புலனுணர்வுக்கேற்ற அறிவுரைதான். எப்படியோ இந்த விழித்தெழு! பத்திரிகை இதமாக என்னை உணரச்செய்கிறது. நீங்கள் விரும்பினால் இதற்கு சந்தா எடுங்கள்.” பின்னர் தாரா பட்டேல் அதிகமான விவரத்தை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிலுள்ள விலாசத்தைக் கொடுத்தார்.
விழித்தெழு! பிரதி ஒன்றையும் அதனோடுகூட காவற்கோபுரம் என்ற அதன் துணைப் பத்திரிகையையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், தயவுசெய்து, Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்ட விலாசங்களில் ஏற்ற ஒன்றிற்கு எழுதுங்கள்.