ஆசிரியர் அதை அனுபவித்து மகிழ்ந்தார்
“கடந்த வருடம் என்னுடைய பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் உலகிலுள்ள மதங்களின் பரந்த வேற்றுமையை ஆராய்வதில் ஒருசில நாட்களை நாங்கள் செலவிட்டோம்.” என்று எழுதினார் அ.ம.ஐ.-விலுள்ள மிச்சிகனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த மாணவர், கடவுளுக்காக மனிதவர்க்கத்தில் தேடுதல் (mankind‘s search for god) என்ற புத்தகப் பிரதியொன்றை பள்ளிக்கூடத்திற்கு கொண்டுசென்றனர். அவர் விளக்கினார்:
“நான் முக்கியமாக, என்னுடைய ஆசிரியருக்கு அது ஆர்வமூட்டுவதாக இருக்கும் என்று நினைத்தேன். மாணவர்கள் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்துக்கொண்டிருக்கையில், அந்தப் புத்தகத்தை அவர் வாசிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், அந்த வகுப்புநேரம் முடிவதற்கு முன்பாக மாணவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதை என்னுடைய ஆசிரியர் நிறுத்தும்படி சொல்லிவிட்டு, முதல் அதிகாரம் முழுவதையும் எங்களுக்குச் சத்தமாக வாசித்துக் காண்பித்தபோது நான் எவ்வளவாக ஆச்சரியப்பட்டேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அதன்பேரில் குறிப்பெடுத்துக் கொள்ளும்படியும்கூட அவர் எங்களிடம் சொன்னார்.
“ஒருசில நாட்களுக்குப் பின்பு, வகுப்பறை போதனையில் அவர் மீண்டுமாக அந்த புத்தகத்தைப் பயன்படுத்தினார். மற்றொரு ரிப்போர்ட்டை தயாரிப்பதற்கு மாணவர்களை நியமித்து, கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் என்ற புத்தகத்தை ஆதாரமாக வைத்துப் பயன்படுத்தலாம் என்று அவர்களிடம் சொன்னார். அந்த வகுப்புநேரம் முழுவதும் அந்தப் புத்தகம் பயன்படுத்தப்பட்டது.”
கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் என்ற புத்தகப் பிரதி ஒன்றை அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பை நீங்கள் விருப்பினால், Watch Tower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவு செய்து எழுதுங்கள்.