இறந்தோர் உயிரோடிருப்போருக்கு உண்மையில் உதவமுடியுமா?
அ.ஐ.ம.-வைச் சோர்ந்த கெண்டகியில் அமைந்துள்ள லூயிவில்லில் இருக்கும் நல்லாலோசனை மாதா கத்தோலிக்க சர்ச் பக்கமாக 1994-ன் வசந்தகாலத்தில் போயிருந்த மக்கள் அந்த முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள், ஏனென்றால் இங்குக் காணப்படும் வாசகத்தை அவர்கள் அங்கு வாசிக்கக்கூடும்: உங்களுடைய இறந்துபோன அன்பார்ந்தவர்களிடம் ஜெபம்செய்யுங்கள். அவர்களால் உதவிசெய்ய முடியும்.”
இறந்தவர்கள் உயிரோடிருப்பவர்களுக்கு உதவிசெய்ய முடியும் என்று பைபிள் போதிக்கிறதா? இறந்தவர்கள் இறந்ததைப்போல தோற்றமளித்து, ஆனால் வேறு ரூபத்தில் தொடர்ந்து வாழ்கின்றனரா? அவர்கள் வேறெங்காவது உண்மையில் வாழ்கின்றனரா, அவர்களால் நமக்கு உதவிசெய்ய முடியுமா?
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியில் இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது இலவசமாக உங்கள் வீட்டில் பைபிள் படிப்பு நடத்தப்படும்படியோ விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.