இளைஞரை சென்றெட்ட குருமார்களின் முயற்சி
“மெக்கில் குருவர்க்க பல்கலைக்கழகம் . . . தோலாலான கோட்டுக்களை அணிந்த, நரைத்த கூந்தலையுடைய பங்க்குகள் குழுவால் தாக்கப்பட்டுள்ளது,” என்று மான்ட்ரீல், கனடாவின் அரசிதழ் என்ற ஆங்கில செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஆயினும் அந்த “பங்க்குகள்” வழக்கமான வகையைச் சாராதவர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தின் குருவர்க்கத்தினர் என்றழைக்கப்பட்ட குருமார் வர்க்க அங்கத்தினர்கள். “ஆன்மீக ஒளிவொளியூட்டுதலை நாடும் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேரடியாகச் செயலாற்றும் இறைமையியல் வல்லுநர்களின் புதிய கொந்தளிக்கும் தொகுதி,” என்று செய்தித்தாள் அழைத்த தொகுதியின் பாகமானவர்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்களுடைய சேவையை விளம்பரம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட போஸ்டருக்காக, குருவர்க்கத்தினர் “பங்க்குகள்” போல அலங்கரித்துக்கொண்டிருந்தனர். ராபர்ட்ட கிளேர் என்னும் பெயர் கொண்ட பிரஸ்பிட்டேரியன் ஊழியர் ஒருவர் விளக்கினார்: “ஜனங்கள் எங்களைப்பற்றி கொண்டுள்ள, தங்களைக்காட்டிலும்-பரிசுத்தமானோர் என்னும் நியாயம் தீர்க்கப்பட்ட முத்திரையை உடைத்தெறிவதற்காக ஒரு பங்க் போஸ்டரை உருவாக்க முடிவுசெய்தோம்.”
ஆயினும், முன்பிருந்ததைக்காட்டிலும் அநேக மாணவர்கள் கல்லூரியில் மதத்தைப்பற்றி படிக்க விரும்புவதை அவர் கவனித்தார். அநேக மாணவர்கள் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டு, பதில்களுக்காக ஆசிரியர்களையும் குருவர்க்கத்தினரையும் எதிர்நோக்கியிருக்கிறார்கள். சமுதாயத்தின்மீது மதம் ஏன் இத்தகைய வல்லமையான செல்வாக்குச் செலுத்துகிறது, ஏன் இத்தனை அநேக மதங்கள் உள்ளன, உலகத்தில் இவை அதிக சச்சரவுகளை உண்டாக்குவதைப்போல் தோன்றுவது ஏன் என்று அறிய ஆர்வமாக இருந்த மாணவன் ஒருவனை செய்தித்தாள் பேட்டி கண்டது. அவன் இயேசு கிறிஸ்துவின் உண்மையான அடையாளத்திற்காகவும் இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய வினாவோடும் போராடிக்கொண்டிருந்தான்.
இந்தக் குருவர்க்கத்தினர் பைபிளை உபயோகித்து மாணவர்களின் அத்தகைய ஆழமான கேள்விக்கானக் கடவுளின் பதில்களைக் கண்டடைய உதவுகிறார்களா? அரிதாகவே என்று தோன்றுகிறது. இந்தப் புரட்சி விரும்பும் இறைமையியல் வல்லுநர்கள், மதமாறுதல் செய்யக்கூடாது என்று தங்களுக்கிடையே முடிவுசெய்தார்கள், அதை “ஆடு-திருடுதல்” என்று கருதினார்கள்.
நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்தபோதிலும், இத்தகைய குருமார்கள், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பயன்படுத்திய போதிக்கும் முறைகளிலிருந்து வெகுவாக விலகிப்போனார்கள். தொடக்க காலத்து கிறிஸ்தவர்கள் “ஆடு-திருடுதல்” பற்றி கவலைப்படவில்லை. உண்மையாகச் சத்தியத்தைத் தேடுவோருக்குக் கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பதையும் அவர்களுக்கு உதவுவதையும் நிறுத்தவில்லை. (லூக்கா 24:44, 45; அப்போஸ்தலர் 20:20) பார்க்கப்போனால், யெகோவா தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து இவர்களைப்பற்றிய திருத்தமான அறிவு, நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தேவை. (யோவான் 17:3) எல்லா மனுஷரும் ‘சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்து’ இரட்சிக்கப்படவேண்டும் என்பது கடவுளுடைய சித்தம்.—1 தீமோத்தேயு 2:3, 4.
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை, தங்களுடைய பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட விரும்புவோருடன் இலவச வீட்டு பைபிள் படிப்பு நடத்துவதையும் உள்ளடக்கியுள்ளது. உங்களுடைய சமுதாயத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்ய சந்தோஷப்படுவர்.