நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தேதி
இயேசு மரிப்பதற்கு முந்தின மாலையில், புளிப்பில்லா அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் தம்முடைய அப்போஸ்தலர்களோடு பகிர்ந்துகொண்டு சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.” —லூக்கா 22:19, NW.
இவ்வருடம் இந்த ஆசரிப்பு ஏப்ரல் 14-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வருகிறது.
இயேசுவினுடைய கட்டளையின் விளைவாக, உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் ஆர்வம் காட்டக்கூடிய நபர்களும் இந்த விசேஷ இரவிலே இந்த நினைவு ஆசரிப்பை இயேசு கட்டளையிட்டபடியே மீண்டும் ஆசரிக்க கூடிவருவார்கள். எங்களோடு கூடிவரும்படி உங்களையும் மிக கனிவுடன் அழைக்கிறோம். கூட்டத்தின் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.