அவள் வாழ்க்கையை மாற்றிய ஒரு நாள்
அ.ஐ.மா., அரிஜோனாவிலுள்ள ஓர் இளம் பெண், தான் சர்ச்சுக்குச் செல்பவளாக இருந்ததாகவும், ஆனால் மதம் ஏமாற்றமளிப்பதாக உணர்ந்ததாகவும் சொன்னாள். கடைசியாக அவள் ஜெபத்தில் கடவுளிடம் பின்வருமாறு சொன்னாள்: “நான் இனி எந்தச் சர்ச்சுக்கும் செல்லப் போவதில்லை. எனக்குத் தெரிந்தவரையில் நான் என்னுடைய வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தி, ஒரு நல்ல நபராக இருக்க முயற்சி செய்வேன்.”
பின்னால் என்ன நடந்தது என்பதை அந்தப் பெண் விளக்கினாள்: “என்னுடைய அத்தை டெலிபோன் செய்து, யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ மாநாட்டு தினத்தையொட்டி தான் அந்த இடத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்னுடைய வீட்டில் அந்த இரவு தங்கமுடியுமா என்று கேட்டார்கள். மேலும் அவர்கள், ‘எங்களோடு வர நீ விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். என்னுடைய பதில் எனக்கு நினைவிலிருக்கிறது: ‘ஓ வரேன். அதைவிட மேலான எதுவும் செய்வதற்கு எனக்கு இல்லையே.’ மதத்தில் என்னுடைய ஆர்வம் ஏறக்குறைய செத்துவிட்டிருந்தது.
“யெகோவாவின் சாட்சிகளிடம் எச்சரிக்கையாயிருக்கும்படி நான் எப்போதும் சொல்லப்பட்டிருந்தேன். ஆகவே மாநாட்டின்போது மிகவும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. என்றபோதிலும், கடவுளுடைய ஆதி நோக்கமானது ஒரு பரதீஸிய பூமியைக் கொண்டிருப்பதாக இருந்தது, கடவுளுடைய நோக்கம் இன்னும் மாறிவிடவில்லை என்பதாக அங்குசொல்லப்பட்ட காரியங்களைப் பற்றியதில் எந்த மர்மமும் இருக்கவில்லை. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து, இப்படிப்பட்ட ஐக்கியத்தின் ஓர் ஆவியை வெளிப்படுத்துவதை நான் கவனித்துக்கொண்டு இந்தக் கனிவான எண்ணத்தோடு அங்கு அமர்ந்திருந்தேன். நான் என்னுடைய தலையைத் தாழ்த்தி அமைதியாக கடவுளிடம் பின்வருமாறு கேட்டேன்: ‘இதுதான் சத்தியமா? இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேனா?’
“அந்த நாள் அங்கிருந்து புறப்படுகையில், ஜனங்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு பிரகாசமான புன்முறுவலோடு பிரியாவிடை பெற்றுக்கொண்டபோது அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கையைப் பற்றியும் யெகோவா யார் என்பதைப் பற்றியும் தங்களுக்கு அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் அவர்களுடைய மனதிலோ அல்லது இருதயத்திலோ எந்தச் சந்தேகமுமில்லை என்பதை அவர்களின் முகங்களில் என்னால் பார்க்க முடிந்தது. அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்குச் செல்ல ஆரம்பித்து அப்போது முதற்கொண்டு அங்கு செல்வதை நிறுத்தாமல் இருக்கிறேன். 1988-ல் அதைத் தொடர்ந்து வந்த விசேஷ மாநாட்டு தினத்தில், யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் பகிரங்கமாக அடையாளப்படுத்தி இந்த அழகான குடும்பத்தின் ஒரு பாகமாக ஆனேன்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி நீங்கள் அதிகத்தை அறிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் அவர்களோடு தொடர்புகொள்ளுங்கள், அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள அருகாமையிலுள்ள விலாசத்துக்கு எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படம்]
இங்கே ரஷ்யாவில் காணப்படுவது போல யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய கூட்டங்களில் கனிவான குடும்ப உணர்வு வியாபித்திருக்கிறது