பள்ளித் திட்டவேலைகளுக்கு மதிப்புமிக்க உதவி
“நான் இதுவரை வாசித்த பத்திரிகைகளிலேயே, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! மட்டுமே மிகச் சிறந்த தகவலளிக்கக்கூடிய, வாசித்துப் புரிந்துகொள்ள மிகவும் எளிதான, காலத்துக்கு மிகவும் ஏற்ற, மிக்க உற்சாகமளிக்கும் பத்திரிகைகளாக இருக்கின்றன என்பது நிச்சயம்,” என ஒரு பருவவயது வாசகி எழுதினார். “என்னுடைய பள்ளித் திட்டவேலைகள் பெரும்பாலானவற்றிற்குத் தேவையான தகவல் இந்தப் பத்திரிகைகளில் இருந்து கிடைத்திருக்கிறது. என்னுடைய பள்ளியில் ஏதோவொரு விஷயத்தைப்பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது, அதன் தலைப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள உற்சாகமளிக்கவும் உதவிசெய்யவும் அதே விஷயத்தைப் பற்றிய ஒரு கட்டுரை வெளிவரும்.”
அவர் விளக்கினார், “எடுத்துக்காட்டாக, நாங்கள் பங்குகொள்ள வேண்டியிருந்த ஒரு அறிவியல் கண்காட்சிக்கான அறிவியல் திட்டவேலைக்கு ஒரு தலைப்புத் தேவைப்பட்டது. அந்தத் திட்டவேலைக்கு மூன்று போஸ்டர்களும், ஒரு அறிக்கையும், ஒரு மாதிரியும் தேவைப்பட்டன. ஆகவே, செப்டம்பர் 8, 1989 ஆங்கில விழித்தெழு!-வில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்த கண்ணாடி அறை விளைவு என்ற பொருளை நான் விளக்க தீர்மானித்தேன். என்னுடைய போஸ்டர்களுக்கு அதில் கொடுக்கப்பட்டிருந்த படங்களையும் எனது அறிக்கைக்கு அதில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்த தகவலையும் ஆதாரமாக வைத்துக்கொண்டேன். என் உயிரியல் ஆசிரியர் அதற்காக எனக்கு ஏ கிரேடு கொடுத்தார். சூழலியல் மற்றும் பாதுகாப்புப் பிரிவுக்கான முதலிட பரிசும் எனக்குக் கிடைத்தது!”
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகை பிரதி உங்களுடைய வீட்டிற்கு அனுப்பப்படும்படி விரும்பினாலோ, அல்லது இலவச பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்க நீங்கள் விரும்பினாலோ, Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410401, Mah., India, என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.