இத்தாலியின் பிஷப்புகள் கவலை கொள்வதேன்
இத்தாலியில் உள்ள விழித்தெழு! நிருபர்
நவம்பர் 1993-ல் இத்தாலிய பிஷப்புகளின் ஒரு மாநாடு யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அநேக மோசமான கருத்துக்களைத் தெரிவித்தது. அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லர் என்றும் அவர்களுடைய வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பு “முரட்டுத்தன மதமாற்றம்” என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், அனைத்து மத பிரமுகர்களும் இதை ஒத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, மிலான் மாகாண பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ வரலாற்றுத் துறையின் பேராசிரியராக இருக்கும் ஆட்டில்யோ ஆன்யோலெடோ, யெகோவாவின் சாட்சிகளை “உறுதிவாய்ந்த, ஆழ்ந்த கருத்துக்களைக்கொண்ட, பைபிள் அடிப்படையிலான, முற்றிலும் சட்டப்பூர்வமான ஒரு இயக்கத்தினர். அந்த இயக்கத்தில் கிறிஸ்தவமல்லாத ஒன்றும் இல்லை,” என்பதாக விவரிக்கிறார்.
அவர்களுடைய ‘முரட்டுத்தன மதமாற்றத்தைப்’ பற்றியென்ன? “‘முரட்டுத்தனம்’ என்ற பதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது,” என்று பேராசிரியர் ஆன்யோலெடோ விழித்தெழு!-விடம் கூறினார். “அப்படியென்றால், இயேசு கிறிஸ்து மதமாற்றியதும் ‘முரட்டுத்தனம்’ என்றுதான் அர்த்தப்படும்.”
யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக இந்தப் பிஷப்புகள் ஏன் இவ்வகையான தப்பெண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்? அவர்களுடைய எதிர்ப்பு “இன்று இத்தாலியில் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை மற்றும் வெற்றியின் காரணமாகவே உருவாகியிருக்கிறது,” என்பதாக பேராசிரியர் ஆன்யோலெடோ கருதுகிறார். இது “கத்தோலிக்க மதத்தில் ஏற்படும் நெருக்கடிக்கு இணையாக சம்பவிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
பிரசங்கிப்பதற்கான இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவர்களின் நற்பெயரைக் கெடுத்து, அவர்களைத் தடைசெய்யவே குருமார்கள் இன்று வகைதேடுகின்றனர். (மத்தேயு 28:19, 20; ஒப்பிடுக: மத்தேயு 5:11, 12.) எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் இத்தாலியில் இரண்டாவது பெரிய பிரிவாக இருந்து வருகின்றனர் என்றும், 2,00,000-க்கும் அதிகமான பேர் அடங்கியுள்ள அவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் செய்தித்தாள் லா ஸ்டாம்ப்பா அறிக்கை செய்கிறது.
இதற்கு எதிர்மாறாக, சமீப ஆண்டுகளில் கத்தோலிக்க சர்ச்சுக்கு ஆஜராவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. ஆகவே 1994-ன் தொடக்கத்தில், இரண்டாம் போப் ஜான் பால், யெகோவாவின் சாட்சிகள் செய்வதைப்போன்றே—சுறுசுறுப்பான சுவிசேஷகர்களாக இருக்கும்படியும், வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கும்படியும்கூட இத்தாலிய கத்தோலிக்கர்களைத் துரிதப்படுத்தினார்!a
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 15-ஐ காண்க.