விழித்தெழு! மெய்யான தீர்வுகளை அளிக்கிறது
வின்டன், ஐயோவா, அ.ஐ.மா.-லிருந்து ஒரு வாசகர் விழித்தெழு! பத்திரிகையைக் குறித்து அதைத் தான் விரும்புகிறார். “அன்புள்ள ஆசிரியரே” என்று வாழ்த்துதல் கூறி ஆரம்பித்து, அவள் இவ்வாறு சொன்னாள்:
“விழித்தெழு! பத்திரிகையில் உள்ள காலத்துக்கேற்ற கட்டுரைகளுக்கு என் போற்றுதலைத் தெரிவிக்க நான் எழுதுகிறேன். நான் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு இதழும் என்னைக் கவருகிறது, இப்பத்திரிகையில் உள்ள கட்டுரைகளின் நல்ல தரத்தைக் குறித்து நான் எப்போதும் நினைப்பூட்டப்படுகிறேன்.
“அநேக பத்திரிகைகள் வாசிப்பதற்கு அல்லது மேலோட்டமாக பார்ப்பதற்கு அதிக சோர்வூட்டுவதாய் உள்ளன, ஏனென்றால் இன்று உலகில் அவ்வளவு அதிகமான கெட்ட செய்திகள் இருக்கின்றன. மறுபட்சத்தில், நம் அனைவருக்கும் முக்கியத்துவமுள்ளதாயும் அக்கறைக்குரியதாயும் இருக்கும் தற்போதைய பொருள்களைக் குறித்து விழித்தெழு! எப்போதும் பேசுவதால், அதன் அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்ததாய் உள்ளது. பைபிளின் வாக்குகளின் பேரில் நம்பிக்கை வைப்பதற்கு உற்சாகப்படுத்துவதன் மூலம் சர்வலோகப் பிரச்னைகளுக்கு மெய்யான, நிரந்தரமான தீர்வைப் பற்றிய நம்பிக்கையை விழித்தெழு! அளிக்கிறது என்பதைக் குறித்து வாசகர்கள் எப்போதும் நிச்சயமாயிருக்கலாம். அதிகாரப்பூர்வமான வார்த்தையாக பைபிளிடம் கவனத்தைத் திருப்புகிறது, மனிதர்களின் வித்தியாசப்பட்ட அல்லது மனதில் தானாக எழும்பும் கருத்துக்களின் பேரில் அல்ல.
“அநேக வருடங்களாக விழித்தெழு! பத்திரிகையை வாசித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். எதிர்காலத்தைக் குறித்து உடன்பாடான மனநிலையைக் காத்துக்கொண்டு, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நேர்மையான அணுகுமுறையைக் கொடுப்பது தான் நம் அனைவருக்கும் அதிக பயனுள்ள வாசிப்பாக இருக்கும். முக்கியமானது எது என்பதைக் காண உங்களுடைய வாசகர்களுக்கு உதவுகிறதைக் குறித்து நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.”
விழித்தெழு! இதழ் ஒன்று உங்கள் வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தயவு செய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410401, Mah., India, என்ற முகவரிக்கு எழுதுங்கள் அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.