உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 7/22 பக். 32
  • இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?
  • விழித்தெழு!—1994
விழித்தெழு!—1994
g94 7/22 பக். 32

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?

கொள்ளைகொள்ளும் அந்தக் கேள்விதான் யெகோவாவின் சாட்சிகளால் விநியோகிக்கப்படுகிற துண்டுப்பிரதியின் தலைப்பாக இருக்கிறது. வாஷிங்டன், D.C.-யில் வசிக்கும் ஒருவர் இந்தத் துண்டுப்பிரதியைக் கடந்த வருடம் பெற்றார். அது அவருடைய உற்சாகத்தைத் தூண்டியதாக சொன்னார். அவர் எழுதினார்:

“எங்கள் நாட்டின் தலைநகரில் வாழும் ஒருவருக்கு, இந்த உலகம் உண்மையில் முடிவை நோக்கி செல்கிறது என்பது தெளிவாய் இருக்கிறது. வட அயர்லாந்து, முன்னாள் யுகோஸ்லாவியா, சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசுகள், இவையெல்லாம் இன்று இந்த உலகத்தைப் பீடிக்கும் கொடுமைக்கும், கலகத்திற்கும் சாட்சிபகருகின்றன. சிறைகள் நிரம்பிவழிகிறது, எலும்புருக்கி நோய் மற்றும் பயங்கரமான கொள்ளை நோயின் (black plague) புதிய பெருவாரியான பாதிப்புகள், இவையெல்லாம் நீங்கள் உங்கள் துண்டுப்பிரதியில் குறிப்பிடும் குறிப்பை நிரூபிக்கின்றன.”

அந்த மனிதர் வேண்டிக்கொண்டார்: “உங்களுடைய விசேஷித்த நோக்கு நிலையைப் பற்றியும், நீங்கள் அளிக்கும் இலவச பைபிள் படிப்பு சம்பந்தமாயும் கூடுதலான தகவல்களைத் தயவுசெய்து அனுப்புங்கள்.”

யெகோவாவின் சாட்சிகள், மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதற்கு மக்களை வழிநடத்துகின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரதியின் ஒரு பிரதியை கொண்டிருக்க விரும்பினாலோ இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்க ஆசைப்பட்டாலோ Watchtower, H-58, Old Khandala Road, Lonavla, 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்குத் தயவுசெய்து எழுதவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்