நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு நிகழ்ச்சி
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” லூக்கா 22:19-ல் காணப்படும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள், அவர் தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலை ஆரம்பித்து வைத்த சமயத்தில் பேசப்பட்டன. இயேசுவின் மரணம்தானே, பரதீஸிய நிலைமைகளில் நித்திய ஜீவனைப் பெறும் வாய்ப்பை மனிதவர்க்கத்துக்குத் திறந்து வைத்தது. ஆகவே அவருடைய மரணம் நாம் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஆண்டு நீங்கள் அதை நினைவுகூருவீர்களா?
முக்கியமான இச்சம்பவத்தை நினைவுகூருவதில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்துகொள்ள இந்த அழைப்பிதழை அவர்களிடமிருந்து தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த ஆசரிப்பு பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-க்கு ஒத்த தேதியில் சூரிய மறைவிற்குப் பிறகு நடைபெறும். நீங்கள் மறந்துவிடாதபடிக்கு தேதியை உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இது 1992, ஏப்ரல் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை இருக்கும். இந்த அழைப்பிதழை உங்களுக்குக் கொடுக்கும் நபர் சரியான கூடும் இடத்தையும், நேரத்தையும் உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும்.