சோம்பேறியின் வழியைத் தவிர்த்திடுங்கள்
சோம்பேறித்தனம் என்பது முயற்சி அல்லது வேலையின் மேல் விருப்பமில்லாமை அல்லது வெறுப்பு என்பதாக விளக்கப்படுகிறது; சோம்பியிருத்தல்; வேலை செய்ய மனமில்லாமை; மந்தமாயிருத்தல்; அசதியாயிருத்தல். அட்செல் (ʽa·tsalʹ) என்ற எபிரெய வினைச்சொல்லின் பொருள் “அசதியாயிருத்த”லாகும். (நியாயாதிபதிகள் 18:9) இந்த வினைச்சொல்லோடு சம்பந்தப்பட்ட பெயர்ச்சொல், “சோம்பேறி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 6:6) ஒக்நேரோஸ் (o·kne·rosʹ) என்ற கிரேக்க வார்த்தை “அசதியாயிருத்தலை, மந்தமாயிருத்தலை,” அர்த்தப்படுத்துகிறது. (மத்தேயு 25:26; ரோமர் 12:11, Int) மற்றொரு பதமாகிய நாத்ரோஸ் (no·throsʹ) “அசதி, ஊக்கமின்மையை,” அர்த்தப்படுத்துகிறது.—எபிரெயர் 5:11; 6:11.
மிகப் பெரிய வேலையாட்களாக, யெகோவாவும் அவருடைய குமாரனும் சோம்பேறித்தனத்தை வெறுக்கிறார்கள். இயேசு சொன்னார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்.” (யோவான் 5:17) கடவுளுடைய வார்த்தை முழுவதிலுமாக சோம்பேறி எச்சரிக்கப்படுகிறான், சோம்பேறித்தனம் கண்டனம் செய்யப்படுகிறது.
சோம்பேறியின் சிந்தனை
ஒரு சோம்பேறியின் வருணனை நீதிமொழிகள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, அவன் ஒரு வேலையை ஆரம்பிக்காதிருப்பதற்கு தன்னை நியாயப்படுத்த தன் சொந்த மனதில் தடையரண்களை வேகமாக எழுப்புகிறான். “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்.” (நீதிமொழிகள் 15:19) அவன் தன்னுடைய வேலையை, பிரயாணம் பண்ண கடினமாயிருக்கும் முள்வேலிகளால் நிறைந்த ஒரு சாலையாக கருதுகிறான். பின்னர் அவன் மந்தமாயிருப்பதற்கு கேலிக்கிடமான சாக்குப்போக்குகளை இவ்விதமாகச் சொல்கிறான்: “வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன்,” உண்மையில் இல்லாத ஓர் ஆபத்து வேலையின் இடத்திலிருப்பதாக அவன் சொல்கிறான். (நீதிமொழிகள் 22:13) பொதுவாக சோம்பேறித்தனம், கோழைத்தனத்தோடு, துணிவில்லா தயக்கத்தோடு சேர்ந்தே வருகிறது. (மத்தேயு 25:26, அடிக்குறிப்பு; 2 தீமோத்தேயு 1:7) மற்றவர்களால் புத்திமதி கூறப்பட்டு தூண்டுவிக்கப்பட்டாலும்கூட ‘கதவு கீல் முளையில் ஆடுகிறது போல’ எழுந்திருக்க முடியாதவன் போல அவன் தன் படுக்கையின் மீது திரும்பிப் படுக்கிறான். சோம்பேறி தான் சாப்பிடவும்கூட சோம்பலாயிருக்கிறான். அவன் “தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.” (நீதிமொழிகள் 26:14, 15; 19:24) அவன் தன்னை அவ்விதமாக வஞ்சித்துக் கொண்டிருப்பதால், தான் சரியானதையே செய்வதாக தன் சொந்த இருதயத்தில் நினைத்துக்கொள்கிறான்.
இப்படிப்பட்ட ஓர் ஆள் போலியான மற்றும் கற்பனையான நியாயத்தில் திருப்திப்பட்டுக்கொள்கிறான். வேலை தன் உடல்நலத்தைக் கெடுத்துவிடுமென்றோ அல்லது தான் அதிக களைப்பாயிருப்பதாகவோ அவன் நினைத்துக்கொள்ளக்கூடும். ‘உலகம் தன் பிழைப்புக்கு கடன்பட்டிருப்பதாக’ அவன் நினைக்கக்கூடும். அல்லது, “நாளை” வரையாக அவன் ஒரு வேலையை தள்ளிப்போடக்கூடும். (நீதிமொழிகள் 20:4) அவன் செய்திருக்கும் ஒரு சிறிய காரியம், மற்ற எவரையும் போல தன் பங்கை செய்து முடித்துவிட்டதாக நினைக்கும்படி செய்விக்கக்கூடும். கடினமாக உழைக்கும் எல்லாராலும் இப்படிப்பட்ட எந்த விவாதத்துக்கும் அறிவுப்பூர்வமான ஒரு பதிலைக் கொடுக்க முடிந்தாலும், அவன் “தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவனாக” இருக்கிறான். தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு, அதையே தன்னையும் செய்யும்படியாக உற்சாகப்படுத்த முயற்சி செய்யும் இவர்களே முட்டாள்கள் என்பதாக அவன் நினைக்கிறான்.—நீதிமொழிகள் 26:13-16.
சோம்பேறி “உண்ணவும் உடுக்கவும்” “போதுமென்றி”ருக்கிறவனாக அல்லது திருப்தியுள்ளவனாக இல்லை. (1 தீமோத்தேயு 6:6-8) மாறாக, அவன் பொதுவாக உணவுக்கும் அல்லது உடைக்கும் அப்பால் காரியங்களை இச்சிக்கிறவனாக இருக்கிறான். “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” (நீதிமொழிகள் 13:4) அவன் தன் உடன்மானிடரிடமாக கரிசனையோ அல்லது மரியாதையோ இல்லாதவனாய் இருக்கிறான். ஆனால் வேறொருவன் தன் வேலையை செய்ய அனுமதிக்க, அவன் இச்சிக்கிற காரியங்களை மற்றொரு நபர் அவனுக்கு பெற்றுத்தருவதையும்கூட அனுமதிக்க மனமுள்ளவனாய் இருக்கிறான்.—நீதிமொழிகள் 20:4.
சோம்பேறித்தனத்துக்கு வெகுமதி
சோம்பேறி, தான் பின்னால் சுறுசுறுப்பாகிவிடுவான் என்று நினைத்தாலும், அவன் சோம்பேறித்தனத்துக்கு வெகுமதி திடீரென்று விரைந்து சென்று அவனைப் பிடித்துவிட, அது மிகவும் பிந்திவிடுகிறது. ஏனென்றால் அவனுக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப் போலவும் வரும்.”—நீதிமொழிகள் 6:9-11.
சொல்லர்த்தமாகவோ அல்லது அடையாள அர்த்தத்திலோ எடுத்துக்கொண்டாலும் சரி, சோம்பேறியின் நிலையைப் பற்றிய வருணனை உண்மையாக இருக்கிறது: “சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்து போனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” “மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.”—நீதிமொழிகள் 24:30, 31; பிரசங்கி 10:18.
சோம்பேறியை வேலைக்கு அமர்த்துகிற எவனும் அல்லது அவனை பிரதிநிதித்துவம் செய்யும் எவனும் ஏமாற்றமடைந்து, எரிச்சலடைந்து நஷ்டமடைவது நிச்சயம், ஏனென்றால் “பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.”—நீதிமொழிகள் 10:26.
மந்தமாயிருப்பவர்களின் சோம்பேறித்தனம் கடைசியில் அவனுக்கு பயங்கரமான விளைவுகளை கொண்டு வரும், ஏனென்றால், “சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.” அவன் ஆசைப்படுகிற காரியங்கள் அவனுக்கு தகுதியில்லாததாக அல்லது தவறானவைகளாக இருக்கின்றன. அவைகளைப் பெற்றுக்கொள்ள முற்படுகையில் அவன் நாசமடையக்கூடும். எவ்விதத்திலும், சோம்பேறித்தனத்தோடு அவன் ஆசை, ஜீவனின் ஊற்றுமூலராக கடவுளிடமிருந்து அவனை விலகிச் செல்ல செய்கிறது.—நீதிமொழிகள் 21:25.
சோம்பேறியாக இருக்கும் கிறிஸ்தவன் எழுச்சியூட்டி தூண்டுதலளிக்கும் ஆவியின் கனியை வளர்த்துக்கொண்டில்லை (அப்போஸ்தலர் 18:25), ஆனால் அவன் உண்மையில் தன்னை தொந்தரவுக்குள்ளாக்கிக் கொள்கிறான். அவன் மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்கிறான். அவன் சீக்கிரத்தில் “யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்கார”னாய் ‘ஒழுங்கற்று’ சுற்றித் திரிகிறவனாகக்கூடும்.—2 தெசலோனிக்கேயர் 3:11.
கிறிஸ்தவ சபையில் எவ்வாறு நோக்கப்படுகிறது
பூர்வ கிறிஸ்தவ சபையில், தேவையிலிருப்பவர்களுக்கு விசேஷமாக விதவைகளுக்குப் பொருளுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இளம் விதவைகளில் சிலர் கிறிஸ்தவ ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவதற்கு விதவைகளாகத் தங்களுக்கிருந்த சுயாதீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆசையாயிருப்பதைக் காண்பித்திருப்பதாக தெரிகிறது. (1 கொரிந்தியர் 7:34-ஐ ஒப்பிடவும்.) சிலருக்கு பொருளுதவி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் இதன் காரணமாக அவர்கள் பெற்றுக்கொண்ட அதிகமான சுயாதீனத்தையும் கூடுதலான நேரத்தையும் சரிவர பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வேலையில்லாதவர்களாய் சோம்பித்திரிய ஆரம்பித்தார்கள். அவர்கள் வீண்பேச்சு பேசுகிறவர்களாயும் மற்றவர்கள் விஷயங்களில் தலையிட்டு தகாத காரியங்களைப் பேசுகிறவர்களுமானார்கள். இந்தக் காரணத்துக்காகவே இப்படிப்பட்ட ஆட்களை உதவிப்பட்டியலில் சேர்க்காமல் அவர்கள் விவாகம் செய்து கொண்டு தங்கள் சக்திகளையும் பெலத்தையும் பிள்ளைகளை வளர்ப்பதிலும் வீட்டை நிர்வகிப்பதிலும் பயன்படுத்த அனுமதிக்குமாறு அப்போஸ்தலனாகிய பவுல் கண்காணியான தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டார்.—1 தீமோத்தேயு 5:9-16.
கிறிஸ்தவ சபையில் பொருளுதவியின் சம்பந்தமாக பைபிள் விதி வருமாறு: “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாது.” (2 தெசலோனிக்கேயர் 3:10) குடும்பத் தலைவன் தன் குடும்பத்துக்கு தேவையானதை அளிக்க வேண்டும், மனைவி “சோம்பலின் அப்பத்தைப்” புசிக்கக்கூடாது.—நீதிமொழிகள் 31:27; 1 தீமோத்தேயு 5:8.
படிப்பிலும் ஊழியத்திலும் சோம்பலைத் தவிர்த்திடுங்கள்
படித்து, கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்வதன் சம்பந்தமாகவும் கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுவதன் சம்பந்தமாகவும் சோம்பலுக்கு எதிராக புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் முன்னேற்றஞ் செய்யாத ஒரு சில எபிரெய கிறிஸ்தவர்களைக் கடிந்துகொண்டு பின்வருமாறு சுட்டிக்காட்டினார்: “நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.” (எபிரெயர் 5:11, 12) அவர் மேலுமாக புத்தி சொல்கிறார்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்.”—ரோமர் 12:11. (g91 6/8)