உலகத்தைக் கவனித்தல்
நாகரீகமான முட்டாள்!
“இந்நாட்களில் எழுத்துக்கள் கொண்ட T-ஷர்ட்டுகள் நடைமுறைப்பாணியில் இருக்கிறது,” என்று இந்தியா டுடே குறிப்பிடுகிறது. ஆனால் கல்கத்தாவிலுள்ள ஓர் இளம் பெண்மணி இந்த விதத்தில் நாகரீகமாக இருக்க முயற்சி செய்வது வினைமையான இடர்ப்பாடுகளுடையதாக இருக்கும் என்பதை கண்டுணர்ந்தாள். “தளர்ச்சியாய் தொங்குகிற காற்சட்டையோடு, கண்ணைப் பறிக்கும் T-ஷர்ட்டை அணிந்தவளாக” அவள் உலாவச் சென்று வருகையில், சில சீனப் பையன்கள் அவளைச் சுட்டிக் காட்டி கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பதை கவனித்தாள். அவள் அவர்களை வினவியபோது அவள் T-ஷர்ட்-ல் எழுதப்பட்டிருந்த செய்தி சீன மொழியில் பின்வருமாறு வாசித்தது என்று அவள் சொல்லப்பட்டாள்: “நான் வழுக்கைத்தலையான தேங்காய்த் தலையுள்ள குரங்கு வகையைச் சேர்ந்தவள். எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு மொழியின் எழுத்துக்களையுடைய சட்டையை அணிந்திருந்ததால் மிகப் பெரிய முட்டாளாக இருக்கும் என்னை இதை வாசிக்க தெரிந்தவர் எவரும் கேலி செய்வர்.”
ஓட்டுநர்கள் கவனிக்கவும்
இருப்புப்பாதையும் சாலையும் சந்திக்கும் இடங்களில் இரயில்களை முந்திக்கொண்டு செல்ல முயற்சி செய்யும் கார்கள் ஒவ்வொரு பயணத்தின் போதும் சாதாரணமான காட்சியாக இருப்பதாக இரயில் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். புள்ளி விவரங்கள் இதை உறுதிசெய்வதாக தெரிகிறது. 1989-ல் ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலுமாக இருப்புப் பாதையும் சாலையும் சந்திக்கும் இடங்களில் 5,766 மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் கொல்லப்பட்டவர்கள் 798 பேரும் காயமடைந்தவர்கள் 2,588 பேரும் ஆவர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கார் ஓட்டுநர்கள் வாயில்களையும் இரயில் வந்துகொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் மின்னுகிற விளக்குகளையும் அசட்டை செய்துவிட்டிருந்தார்கள். ஓட்டுநர்கள், இருப்புப்பாதையும் சாலையும் சந்திக்குமிடத்தில் இரயிலை முந்திக்கொண்டு முன் செல்ல ஏன் முயற்சி செய்கிறார்கள்? பெரும்பாலும் அவர்கள் ஒரு காரைப் போன்று இரயில் செயலாற்ற எதிர்பார்க்கிற காரணத்தால் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு செய்ய முடியாது. ஒரு சராசரி சரக்கு இரயிலில், தொடர்வண்டியின் இயக்கு பொறி மாத்திரமே 160 டன்கள் எடையுள்ளதாக இருக்கிறது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கையில் ப்ரேக் போடப்பட்ட பின்பு இரயில் நிற்பதற்குள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்றுவிடுகிறது. கார் ஓட்டுநர்கள் நினைவில் கொள்ள வேண்டியது: இரயில்தானே எப்போதும் வெற்றிபெறுகிறது.
புகைபிடிக்கும் தகப்பன்மார்
புகைபிடிக்கும் தாய் தன்னுடைய பிறவாத குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடிய தீங்கு நன்கு அறியப்பட்டுள்ளது. ஆனால் புகைபிடிக்கும் தகப்பன்மாரைப் பற்றியதென்ன? “கருத்தரிப்புக் காலம் முழுவதுமாக தாய் தொடர்ந்து புகைபிடிப்பாளேயானால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு சமமான பொறுப்பை புகைபிடிக்கும் தகப்பனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று தென் ஆப்பிரிக்க மருத்துவ பத்திரிகை எச்சரிக்கிறது. “புகைபிடிப்பதை நிறுத்துவதற்கு ஒரு தாய்க்கு தன் கணவனின் ஆதரவு தேவையாக இருக்கிறது, முதிர் கருவானது நிச்சயமாகவே தகப்பனின் சிகரெட் புகையின் பாதிப்புகளுக்கு தடைசெய்யப்பட்டதாக இல்லை.” குழந்தைப் பிறந்த பிறகு, மற்றவர்கள் புகைத்து வெளிவிடும் புகையை உள்ளிழுப்பதால் ஏற்படக்கூடிய தீங்கைக் குறித்துங்கூட பத்திரிகை எச்சரிக்கிறது. தங்கள் வீட்டில் சிகரெட்டு புகையின் பாதிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பிள்ளைகள் சராசரியைவிட அதிகமாக “உடல்நலக்கேட்டின் காரணமாக பள்ளிக்கு வர இயலாமல் இருப்பதற்கும்,” “அவர்கள்தாமே புகைபிடிக்கிறவர்களாக ஆவதற்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.”
இழிச்சொற்களைப் பேசும் மின்னியக்க வாய்
அது கடைசியான வார்த்தை என்றழைக்கப்படுகிறது. பாக்கட்-அளவிலான இது பீப் ஒலி எழுப்பும் ஒரு கருவி போன்ற தோற்றமுள்ள செயல்திட்டம் வரையப்பட்ட மின்னியக்க குரல்வளையாகும். தாக்குதலான காரியங்களைச் சொல்வதற்கு அதிகமாக வெட்கப்படுகிறவர்களாக இருப்பவர்களுக்காக அது வடிவமைக்கப்பட்டது. அது செயல்படுத்தப்படுகையில், ஒன்றன் பின் ஒன்றாக ஆபாசமான வார்த்தைகளை உமிழ்கிறது. “இது நாங்கள் வைத்திருப்பவற்றுள் மிகப் பிரபலமான ஓர் உருப்படி,” என்றார் ஒரு கடையின் சொந்தக்காரர். “இது வருத்தத்திற்குரியது, ஆனால் அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.” ஆரம்பத்தில் அது இரண்டு பதிப்புகளில் வெளியானது. “செத்துத் தொலை” மற்றும் “நீ ஒரு முட்டாள்” போன்ற காரியங்களைச் சொன்ன கடுமைக் குறைந்தவை வியாபார ரீதியில் தோல்விகண்டது.
இந்தியாவின் உதிரி-பாகங்கள் வியாபாரம்
“இந்தியா இப்பொழுது நோயாளிக்கு உறவினராயில்லாத உயிரோடிருக்கும் தானம் செய்கிறவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் மிக அதிகமான எண்ணிக்கையான சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு ஒருவேளை கேள்விக்குரிய பெருமையுடையதாக இருக்கிறது,” என்று இந்தியா டுடே குறிப்பிடுகிறது. உயிரோடிருக்கும் தானம் செய்கிறவர்களிடமிருந்து இப்பொழுது 2,000-க்கும் மேலான சிறுநீரகங்கள் தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான விற்பனைக்கு பின்னாலிருப்பது கடனும் வறுமையுமாகும். “நாங்கள் நம்பிக்கை இழந்து இருந்தோம், எனக்கிருந்த மற்ற ஒரே தெரிவு, கள்ளச்சாராய வியாபாரியாக அல்லது குற்றச்செயலில் ஈடுபடும் உள்ளூர் ஆசாமியாக ஆவதே,” என்று மூன்று பிள்ளைகளின் தந்தை விளக்கினார். அவரும் அவருடைய மனைவியும் ஒவ்வொரு சிறுநீரகத்தை விற்றனர். “நாங்கள் கண்ணியமான முறையை தெரிந்து கொண்டோம்,” என்று அவர் சொன்னார். உடல் உறுப்புகளுக்கு அதிகமான விலை கொடுக்கப்படுவதால், உயிருடனிருக்கும் தானம் செய்கிறவர்களிடமிருந்து விழிவெண்படலம் மற்றும் தோலின் விற்பனையும்கூட அதிகரித்திருக்கிறது. “மனித உடல் உறுப்புக்களின் கள்ள வியாபாரம் தேசத்தில் மிகப் பெரிய மருத்துவ ஒழுக்கநெறி பிரச்னையாகிவிட்டிருக்கிறது,” என்றார் ஒரு பிரபல மருத்துவர்.
எகிப்தின் தண்ணீர் கண்டுபிடிப்பு
தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட எல்லா தேசங்களிலும் எகிப்து குறிப்பிடத்தக்கதாகும். தண்ணீருக்கு அதனுடைய ஒரே முக்கிய ஊற்றுமூலமான நைல் நதி, நீரோட்டத்துக்கு எதிராக உள்ள தேசங்களின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு உட்பட்டு இருக்கிறது. எகிப்தின் 5 1/2 கோடி மக்கள் தொகையானது, ஒவ்வொரு ஒன்பது மாதங்களுக்கும் 10 லட்சம் என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே தேசம் உணவு சப்ளையில் 65 சதவீதத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இப்பொழுது துணைக்கோளின் தொலைத்தூர உணர்வு திறமானது, எகிப்தின் மேற்கத்திய பாலைவனத்துக்குக் கீழே மிகப் பெரிய சந்தேகத்திற்கிடமற்ற நிலத்தடி தண்ணீர் சப்ளை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. “விஞ்ஞானிகள், முழு ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக கருதியதைவிட அதிகமான நிலத்தடி நீரை இது கொண்டிருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்,” என்று உவோர்ல்ட் ப்ரஸ் ரிவ்யூ குறிப்பிடுகிறது. “ஒரு சோதனை முறையில் துளையிட்டது, ஒரு கிணற்றில், ‘80,000 ஹெக்டர் நிலத்தை 200 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய’ போதுமான தண்ணீர் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர உணர்வுதிறன் மையத்தின் எகிப்திய இயக்குநராகிய டாக்டர் ஃபரூக் அல்பாஸ் சொல்கிறார்.” (g91 3/8)