மற்றொரு இனத்தைச் சேர்ந்த மக்களை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
“ஐரோப்பாவில் இருக்கும் ஆற்றல் வாய்ந்த மொட்டைத் தலையர்களைப் போன்று அமெரிக்காவில் இருக்கும் மொட்டைத் தலையர்கள் வேலை செய்பவர்களின் வகுப்பைச் சேர்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள். எங்களுடைய ஆரிய இனத்தை அழிக்கும் முதலாளி, தொழிலாளி கழிசடை மக்களை நாங்கள் எதிர்க்கிறோம். . . . சுரண்டி வாழும் யூத இனம் எங்களுடைய பிரச்னையின் மையமாக இருக்கிறது.”
சிக்காகோவைச் சேர்ந்த மொட்டைத் தலையர்கள் கூட்டத்திலிருந்து வந்த ஒரு துண்டுப்பிரதி இவ்வாறு சொல்கிறது. இந்த வாலிபர்கள் தங்கள் தலைகளைச் சவரம் செய்து கொண்டு, வேறுபடுத்திக் காட்டும் சுவஸ்திகா பூத்தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட முரடரின் உடை அணிந்து கொள்கின்றனர். அவர்கள் வன்முறையை மிக உயர்வாகப் புகழ்கின்றனர், ‘வெள்ளையர் ஆதிக்க’ இசையைக் கேட்கின்றனர், மற்றும் யூதர்கள். கறுப்பர்கள், மற்ற சிறுபான்மையோர் ஆகியோரை இழிவாகக் கருதுகின்றனர்.
காதல் காவிய வன்முறை என்றழைக்கப்பட்ட ஒரு கும்பலின் தலைவன், தன்னுடைய தொகுதி “போருக்காக நிற்கிறது” என்று ஒரு வெள்ளை இன தலைவர்கள் அடங்கிய கூட்டத்திடம் சொன்னான்: “நான் ஒரு வன்முறையான ஆள். நான் வெள்ளை இனத்தை நேசிக்கிறேன், நீங்கள் ஏதோவொன்றை நேசித்தால், நீங்கள் பூமியில் அதிக கொடிய நபராக இருக்கிறீர்கள்.”
பல இயக்கங்கள் நாளடைவில் மறைந்து போவதால், மொட்டை தலையர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் மட்டுக்கு மீறித் தீவிரமானவையாய் இருக்கின்றன. இன்று வெகு சில ஆட்களே தங்கள் மதநிலைகளில் அந்த அளவு குருட்டுப் பிடிவாதமுடையவராகவும், வலிய தாக்கும் தன்மையுடையவராகவும் இருக்கின்றனர். என்றபோதிலும், அநேகர் வேறொரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் இரகசியமாகப் பகைமை கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்புவதும் இல்லை. மக்கள் அவர்களுடைய கண்களின் சாய்வு அல்லது அவர்களுடைய தோலின் நிறத்திற்கேற்ப உலகமுழுவதிலும் நியாயந்தீர்க்கப்படுகின்றனர். இதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? இனங்களுக்கு இடையே இயல்பாய் அமைந்துள்ள மனம் சம்பந்தப்பட்ட அல்லது உணர்ச்சி இயல்பு சார்ந்து வித்தியாசங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, இனத்தின்பேரில் பல்வேறு எண்ணங்கள் பல நூற்றாண்டுகளாக எவ்வாறு படிப்படியாக உருவாகியிருக்கிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். (g90 12/8)