அணு ஆற்றல் கழிவு கொல்லுகிற குப்பை
வீட்டுக் குப்பைக் குவியல் இந்த உலகிலிருந்து உயிர்வாழ்வைத் திடீரெனத் தாக்கி மூச்சுத் திணறக் கொன்றுவிடும் ஒரே அச்சுறுத்தலாக இல்லை. அதைவிட பெரியதும் அதிக நச்சுத்தன்மைவாய்ந்ததுமான ஒரு கழிவுப் பிரச்னையின் பக்கத்தில் இது இருக்கும் இடம் தெரியாததாகி விடுகிறது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும், மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் மனிதன் முதன்முதலில் அதன் ஆற்றலைப் பயன்படுத்த கற்றான்; அதுமுதல், விஞ்ஞானிகள் இந்த இயக்குமுறை உண்டாக்கும் உயர் கதிரியக்க அணு ஆற்றல் கழிவை அப்புறப்படுத்துவதற்கான வழிகளைக் குறித்து ஒரே குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்தச் சாவுக்கேதுவான நச்சுக் கழிவிலிருந்து மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் லட்சக்கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது. உண்மைதான், ஒரு பெருத்த உத்தரவாதம், ஏனென்றால் கதிரியக்கக் கழிவுகள் உயிருள்ள அனைத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்ததாயிருக்க முடியும்.
பல பத்தாண்டுகளாக, இந்தக் கழிவுகளில் பெருமளவு வெறுமென குப்பைக் குழிகளிலும் கசிவுத் தொட்டிகளிலும் புதைக்கப்பட்டன; ஆபத்தான வஸ்துக்கள் சக்தியில் குறைந்து தீங்கற்றதாகிவிடும் என்று நம்பப்பட்டது—அதன் பாதிப்புகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாய் நிரூபித்த ஓர் ஊகம் என்பதை நாம் கவனிப்போம். நிலத்தடியில் இராட்சத தொட்டிகளில் லட்சக்கணக்கான காலன்கள் உயர் அளவு கதிரியக்கக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன; மற்ற வகை கழிவுகள் பீப்பாய்களில் மூடி வெளியில் வைக்கப்பட்டது, இது அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்ததாக நிரூபித்த இன்னொரு வகையாக இருந்தது.
இந்த அணு ஆற்றல் கழிவு அந்தளவுக்கு நச்சுத்தன்மையும் உயிருக்கு ஆபத்தானதுமாய் இருப்பதால், அவற்றை விண்வெளியில் எரித்துத் தள்ளுவது முதல் துருவப் பனி உச்சிகளின் கீழ் புதைப்பது வரையான எல்லா வாய்ப்புகளையும் விஞ்ஞானிகள் சிந்தனைக்கு எடுத்தனர். இந்தக் கழிவுகளைப் பெட்டியில் அடைத்து வட பசிபிக் மகா சமுத்திரத்தில் அப்புறப்படுத்துவது குறித்த ஆய்வுகள் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அவ்விடத்தில் சமுத்திரத் தரைக்குக் கீழ் 30 மீட்டர் அவற்றைப் புதைப்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இந்தக் கோளத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பொருளை நிலத்தின் மீதோ, நீரிலோ, அல்லது சமுத்திர நீரூக்குக் கீழோ அப்புறப்படுத்தப் போகிறோம். நம்மிடம் இருப்பதெல்லாம் அவ்வளவுதான்,” என்றார் உட்ஸ் ஹோல் சமுத்திரவியல் நிறுவனத்தின் துணைத் தலைவர்.
தற்போதைக்கு, ஒரு பாதுகாப்பானதும் அதிக நிரந்தரமானதுமாய் இருக்கும் ஓர் அப்புறப்படுத்தும் முறை கண்டுபிடிக்கும் வரை ஓர் இடை நிறுத்தத் தீர்வாக முழுவதும் அடைக்கப்பட்ட கட்டிடத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் நீர்த்தேக்கங்களில் இந்தக் கதிரியக்கப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கானடாவிலுள்ள ஒன்டாரியோ 16 அணு ஆற்றல் சார்ந்த ஆய்வுக்கல அமைவுகளைக் கொண்டிருக்கின்றன, இவை ஏற்கெனவே 7,000 டன்கள் கதிரியக்கக் கழிவுகளை உண்டாக்கியிருக்க, இப்பொழுது அப்படிப்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. தன்னுடைய கழிவுகளை என்ன செய்வது என்ற அதே சிக்கலான பிரச்னையை பிரிட்டனும் எதிர்ப்படுகிறது. தற்போது, உயர் அளவு நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு தரைக்கு மேல் வைக்கப்பட்டிருக்கிறது, கசிவு ஏற்படாத நிலத்தடி பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் வரை இந்த முறை தொடரும். ஃபிரான்சு, ஜெர்மனி, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுங்கூட தங்கள் கழிவுகளை அப்புறப்படுத்தும் பிரச்னையை மேற்கொள்ள முயலுகின்றனர்.
“ஐக்கிய மாகாணங்களில் அதிகாரப்பூர்வமான கொள்கை என்னவென்றால், ‘பூமியில் ஓர் ஆழமான கிடங்கில்,’ வறண்ட, நிலையான மற்றும் பாழடைந்த ஓர் இடத்தில் புதைத்திடுவதே பாதுகாப்பான ஒரு முறை. ஆனால் அப்படிப்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக நிரூபிக்கிறது.” உண்மையிலேயே கடினம்தான்! விஞ்ஞானிகளின் கருத்துபடி, கழிவுகளை 10,000 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியாக ஒரு வறண்ட, நிலையான இடமாக இருக்க வேண்டும். இந்த அணு ஆற்றல் கழிவுகளில் சில வகை 2,50,000 ஆண்டுகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாய் இருக்கும் என்றாலும், 1,00,000 ஆண்டுகளில் புவியியல் மாற்றங்கள் அவ்வளவாய் இருக்கும் ஆதலால், “அதைவிட அதிக காலத்துக்குத் திட்டமிடுவதில் அர்த்தமில்லை,” என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். “ஏறக்குறைய ஓர் 1,000 ஆண்டு திட்டத்தைக் குறித்துப் பேசும் எந்த ஒரு மாதிரி திட்டத்தையும் நான் அறியவில்லை,” என்றார் ஒரு பிரபல கதிரியக்க நிபுணர். “உடல்நல ஆபத்து குறித்து எதிர்காலத்தில் 10,000 ஆண்டுகளுக்குப் பேசுவது கடின”மாயிருந்தது என்று அவர் கூட்டினார்.
பேரழிவு!
விஞ்ஞானிகள் அணுவின் இரகசியங்களை வெளிப்படுத்திய போது, அவர்கள் மேற்கொள்ள தயாராயிராத ஒரு புதிய செய்தியை அவிழ்த்துவிட்டனர்—பின்தொடரவிருந்த கொடிய நச்சுப்படும் கொடுங்கனவு. ஆபத்து குறித்து எச்சரித்த பின்னரும், அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே அந்த எச்சரிப்புகளை அசட்டை செய்தனர். அணு ஆயுதங்கள் தேசங்களின் முதல் முக்கிய இடத்தைப் பெற்றிட, அவற்றை உற்பத்திச் செய்வதற்குரிய திறமையும் பொருளும் இருக்க, மக்களுடைய உடல் ஆரோக்கியமும், வாழ்க்கையும், சுற்றுச் சூழலும் கைவிடப்பட்டது. சாவுக்கேதுவான கழிவுகளைப் பாதுகாப்புடன் வைத்திடுவதில் கவலீனமான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, ஓர் அணு ஆயுத உற்பத்திச்சாலையில் “75,000 கோடி லிட்டர் நச்சுக் கழிவுகள், கசிவு ஏற்படாத வகையில் உட்புறம் பாதுகாக்கப்படாத குழிகளிலும் நீர்த்தேக்கங்களிலும் ஊற்றப்பட்டன, இவை மான்ஹாட்டன் நகரை 12 அடி மீட்டர் ஆழத்திற்கு மூழ்கடித்திடும் அளவுக்கு இருந்தன,” என்று மார்ச் 1989 யு.எஸ். நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் எழுதியது. “நச்சுக் கசிவு ஏறக்குறைய 260 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு நிலத்தடித் தண்ணீரை நச்சுப்படுத்திவிட்டது. ஏறக்குறைய 17 கோடி லிட்டர் உயர் அளவு கதிரியக்கக் கிளைகள் நிலத்தடி தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொட்டிகளிலிருந்து கசிந்திருக்கும் புளுட்டோனியத்திலிருந்து 50-க்கும் அதிகமான நாகசாகியளவான அணுகுண்டுகள் தயாரிக்கப்படலாம்,” என்று பத்திரிகை கூறியது. இந்தப் பகுதியைத் துப்புரவு செய்வதற்கு 6.5 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.
அணு ஆற்றல் கழிவுகளைச் சேர்த்து வைப்பதற்காகக் கட்டப்பட்ட தொட்டிகள் கதிரியக்க வெப்பத்தினால் அதிக சூடானதால், அவை வெடிப்புவிட ஆரம்பித்தன. நிலத்தில் 20 லட்சம் லிட்டர் கதிரியக்கக் கழிவுகள் கசிந்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது. குடிதண்ணீரை கதிரியக்க ஸ்ட்ரோன்டியம்-90 அசுத்தப்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் வரம்பைவிட அளவில் ஆயிரம் மடங்கு அதிகமாக நச்சுப்படுத்தியிருக்கிறது. மற்றொரு அணு ஆற்றல் தொழிற்சாலையில், “4.2 கோடி லிட்டர் யுரேனியம் இருக்கும் கழிவு குழிகளிலிருந்து கதிரியக்கப் பொருட்கள் ஒரு நிலத்தடி நீர்த்தேக்கத்திற்குள் கசிந்து, அந்த இடத்துக்குத் தெற்கே 0.8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த கிணறுகளை நச்சுப்படுத்தியிருக்கிறது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. உவாஷிங்டன் மாநிலத்தில், பல்லாயிரக் கோடி காலன் நச்சுத் தண்ணீர் தரையில் ஊற்றப்பட்டது என்றும், கதிரியக்க டிரிட்டியம் நீரோடையாய் கொலம்பியா ஆற்றில் கலக்கிறது என்றும் அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்தது.
இடாஹோவில் கதிரியக்கக் கழிவு நிர்வாகக் கட்டிடத் தொகுதியிலிருக்கும் கழிவுக் குழிகளிலிருந்து புளுட்டோனியம் கசிந்திருப்பதாக தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. “அவை பாறைப் படுகை வழியாக தெற்கு இடாஹோவிலுள்ள ஆயிரக்கணக்கான குடிமக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பெரிய நிலத்தடி நீர்த்தேக்கத்தினிடமாய்ச் செல்கிறது.” இந்த நச்சுக்கூறு ஏற்கெனவே 70 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவிட்டது, இது அந்த நீர்த்தேக்கத்திற்கு கிட்டத்தட்ட பாதி தூரம் என்று அந்தத் தினசரி சொன்னது.
ஆறுகளிலும் நீரோடைகளிலும் காற்றிலும் கலந்துவிட்டிருக்கும் இந்தப் புளுட்டோனியம் உயிருக்கு எந்தளவுக்கு ஆபத்தானது? “புளுட்டோனியம் 2,50,000 ஆண்டுகளுக்குக் கதிரியக்கத் திறனுடையதாயிருக்கிறது,” என்றும் “மற்றும் மிக நுண்ணிய பகுதிகள் சுவாசிக்கப்பட்டாலும் அல்லது விழுங்கப்பட்டாலும் நச்சுத்தன்மை கொண்டவையாய் இருக்கக்கூடும்” என்றும் தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. “ஒரு தூசியளவான புளுட்டோனியம் சுவாசிக்கப்பட்டால்கூட புற்றுநோய் ஏற்படக்கூடும்,” என்று நியுஸ்வீக் பத்திரிகை கூறியது.
அணு ஆற்றல் கழிவுகளின் உடனடியான மற்றும் நீண்ட காலத்துக்குப் பின்னான பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பது இன்னும் அறியப்படவில்லை. அவை அறியப்படாமலும் போகலாம். என்றபோதிலும், ஓர் அணு ஆற்றல் நிலையத்திற்குப் பல மைல் தூரத்தில் அமைந்த சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்தவர்களில் 162 புற்றுநோய் நோயாளிகள் இருந்ததாய் அறிக்கை செய்யப்பட்டது. அங்கு மக்கள் தண்ணீர் குடிப்பதற்கு பயப்படுகின்றனர், அவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். “அவர்களில் 6 முதல் 200 புற்றுநோயாளிகள் கூடுதலாக இருப்பர்,” என்று பல்கலைக்கழக மருத்துவரும் அந்தத் தொழிலாளர் மருத்துவருமாக இருப்பவர் சொன்னார். “அவர்கள் எல்லாமே பயத்தில் வாழ்கிறார்கள். தங்களுடைய சுற்றுச்சூழல் மீதும் வாழ்க்கை மீதும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக உணருகின்றனர்.”
அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு யெகோவாவின் ஓர் உண்மையுள்ள தீர்க்கதரிசி இப்படியாகச் சொன்னான்: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23, தி.மொ.) இந்த வார்த்தைகள் உண்மை என்று சரித்திரம் நிச்சயமாகவே நிரூபித்திருக்கிறது—குறிப்பிடத்தக்கவிதத்தில் இந்தக் கடைசி நாட்களில். வளர்ந்துவரும் இந்தக் குப்பைக்கூளத்தின் ஆபத்தான பிரச்னை, தான் எடுத்துவைக்கும் காலடிகளைத் தானே வழிநடத்துவதில் மனிதன் கண்டிருக்கும் தோல்விகளில் இது ஒன்று மட்டுமே.
என்றபோதிலும், சோர்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறை விரைவில் நீக்கப்பட்டு சிருஷ்டிகரால் ஒரு புதிய உலகம் நிலைநாட்டப்படும். மனிதன் இந்தப் பூமிக்குச் செய்துகொண்டிருப்பதை அவர் இன்னும் அதிகக் காலம் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார், ஆனால் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுத்”திடுவார். (வெளிப்படுத்துதல் 11:18) அதற்குப் பின்னர், சிருஷ்டிகரின் வழிநடத்துதலின்கீழ், பூமியை எவ்வாறு கவனிப்பது, அதன் வளங்களை எவ்வாறு ஞானமாகப் பயன்படுத்துவது என்பதை மனிதர் கற்றறிவர்.—சங்கீதம் 37:34; 2 பேதுரு 3:10–13. (g90 9/22)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
அணு ஆற்றல் கழிவு 2,50,000 ஆண்டுகளுக்குக் கொடிய ஆபத்தாக நிலைக்கக்கூடும்
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
“ஒரு தூசியளவான புளுட்டோனியம் சுவாசிக்கப்பட்டாலும் அது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும்”