உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 11/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1991
விழித்தெழு!—1991
g91 11/8 பக். 2

பக்கம் இரண்டு

உலக தலைவர்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் அக்கறையுடைய குடிமக்களும் காணும் குப்பைக்கூளப் பிரச்னை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய வளரும் ஓர் ஆபத்தான பிரச்னையாக இருப்பதைக் காண்கின்றனர். இது “90-களின் ஆபத்தான பிரச்னை” என்பதாக அழைக்கப்பட்டிருக்கிறது. பூகோளத்தைப் பாதிக்கும் இந்த நிலைகுறித்து எச்சரிப்பதற்கென பத்திரிகைகள் ஏராளமான இடத்தை ஒதுக்குகின்றனர். நியுஸ் வீக் பத்திரிக்கையின் அட்டைப்பக்க தலையங்கம் “உயிரோடு புதைக்கப்படுதல்” என்றிருந்தது. “குப்பைக் குவியல்: ஒரு சுற்றுச்சூழல் பேராபத்துப் பிரச்னை நம் வீட்டு வாசலை எட்டுகிறது,” என்று அந்தப் பத்திரிகை அறிவித்தது. ‘டன் டன்னாகக் குப்பைக்கூளம், அதைக் கொட்டுவதற்கு இடம் இல்லை,” என்பதுதான் யு.எஸ்.நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் பத்திரிகையின் குப்பைக்கூளத்தின் பேரிலான கட்டுரையின் தலைப்பு “குப்பை, குப்பை, எவ்விடத்திலும் குப்பை கூளம் குவிந்து வழிகிறது, ஆனால் மாற்றுவழிகளோ மிகச் சில,” என்று டைம் பத்திரிகை கொட்டை எழுத்துக்களில் அறிவித்தது. ”மேற்கத்திய நாடுகளின் குப்பைக்கூளம்—மூன்றாம் உலகிற்கு வளர்ந்துவரும் ஒரு சுமை,” என்று பாரீஸின் இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் தலைப்பு கொடுத்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்