உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 11/8 பக். 27-29
  • அந்தத் தும்மலை நிறுத்துவதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அந்தத் தும்மலை நிறுத்துவதா?
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தும்மலின் காரணம்
  • பிறர்பேரில் கரிசனை
  • தும்மலைக் கட்டுப்படுத்த முடியுமா?
  • “உன்னை ஆசீர்வதிப்பாராக!”
  • தயவுசெய்து உங்கள் கைக்குட்டையை மறக்க வேண்டாம்
  • நுரையீரல்கள் ஓர் அதிசய வடிவமைப்பு
    விழித்தெழு!—1992
  • மூடநம்பிக்கை—சாம்ராஜ்ய எல்லை எதுவரை?
    விழித்தெழு!—1999
  • அநேகர் ஏன் அலர்ஜியால் அவதிப்படுகிறார்கள்?
    விழித்தெழு!—2004
  • குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 11/8 பக். 27-29

அந்தத் தும்மலை நிறுத்துவதா?

சில சமயங்களில் நாம் எல்லாருமே ஒரு தும்மலைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம். ஒருவேளை அது நமது திருமண நிகழ்ச்சியின் சமயமாக, நமது உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள தயாராக நாம் எழுந்திருக்கும் சமயமாக இருக்கலாம். அல்லது ஒரு கூட்டத்தின் போதோ வேறொரு முக்கியமான நிகழ்ச்சியின் போதோ, ஒரு சவ அடக்க ஆராதனையின்போதோ அப்படிச் செய்ய நினைக்கலாம்.

நிச்சயமாகவே, ஓர் உள்ளார்ந்த தும்மல் மிகவும் மகிழ்வுடன் அனுபவிக்கப்படுவதாகத் தோன்றும் பல சமயங்கள் இருக்கின்றன. மேலும் தளர்த்தப்பட்ட சுகமான ஓர் உணர்வு தொடர்கிறது. ஆனால், பிரச்னை பல தடவைகளில் ஒரு விரும்பப்படாத தும்மலை எப்படிக் கையாளுவது என்பதே.

எல்லா தும்மல்களுமே ஒரே வகையானவை அல்ல. சிலர், அதிக தொலைவிலும் கேட்கும் ஓர் இன்பமான தும்மல் என்று சொல்லப்படக்கூடிய அதி உரத்த தும்மலைக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் இன்னும் மென்மையான தும்மலைக் கொண்டுள்ளனர். அடுத்து, திரும்பத்திரும்ப தும்முவது: மூன்று, நான்கு, ஐந்து அல்லது இன்னுமதிக தும்மல்கள் தொடர்ச்சியாக ஏற்படுவது. மிக அரிய நிலைமைகளில் மணிக்கணக்காக, நாட்கள், வாரங்கள் அல்லது மாதக்கணக்காகவும்கூட விழித்திருக்கும்போது சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு ஒரு முறை ஓயாது தும்முகின்றனர்.

நம்மைத் தும்மச் செய்வது என்ன? ஒரு தும்மலைக் கட்டுப்படுத்த ஏதாவது நிச்சயமான வழி இருக்கிறதா? தும்மல் சுழற்சி ஒருமுறை ஆரம்பித்துவிட்டப் பின்னர் அதை வலுக்கட்டாயமாக நிறுத்துவதில் ஆபத்துகள் இருக்கின்றனவா? மேலும் தும்மலைத் தவிர்க்க ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாமா?

தும்மலின் காரணம்

எல்லாருமே சில சமயங்களில் தும்முவதாகத் தோன்றுகிறது—முதியோரும் இளைஞரும், பெரியவர்களும் பிள்ளைகளும். மிருகங்களுங்கூட தும்முவதாக அறியப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நாசி துவாரங்களை உறுத்தும் (தூசி அல்லது மகரந்தம் போன்ற) ஓர் அந்நிய பொருள் காரணமாக இருக்கலாம். ஆனால் நமது உணர்ச்சிகளும் கூட ஒரு தும்மல் அலையைக் கொண்டுவரக்கூடும். பிரகாசிக்கும் சூரிய ஒளி தும்மலை விளைவிக்கப் போதுமானதாயிருப்பதாய் நம்மில் சிலர் காணலாம். இதற்குக் காரணம் கண் நரம்புகள் நாசியிலுள்ள நரம்பு முனைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகும்.

கூருணர்வுடைய நரம்பு முனைகள், மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் ஓர் உறுத்தும் பொருளுக்கு எதிராகப் பிரதிபலிக்கின்றன. விரும்பப்படாத பொருளின் விலக்குதலுக்குத் துணையாக ஒரு நீர் போன்ற திரவத்தைக் கொடுக்க அது நாசிக்குக் கட்டளையிடுகிறது. மேலும் நுரையீரல் முழுதும் காற்று உட்சுவாசிக்கப்படுவதற்கு நுரையீரலுக்கும் பின்பு, காற்று பாதையைத் தடை செய்து, காற்று வெளியேறுவதைத் தடுக்கக் குரல்வளை அதிர்வு நாளங்களுக்கும் மூளை செய்திகளைக் கடத்துகிறது. மார்புச் சுவர் மற்றும் வயிற்றிலுள்ள தசைகள் இறுகும்படியாகச் சொல்லப்படுகின்றன. இவ்வாறு நுரையீரலில் உள்ள காற்று அழுத்தப்படுகிறது. இறுதியாக குரல்வளை அதிர்வு நாளங்கள் தளரும்படி கட்டளையிடப்பட்டு, அழுத்தப்பட்ட காற்று, பொதுவாக அந்த விரும்பப்படாத உறுத்தும் பொருளை நீர்போன்ற திரவத்தோடு அகற்றிவிட விரைவாக செயல்படுகிறது. இவையனைத்தும் நினைவார்ந்த முயற்சியின்றி அதைப்பற்றி வாசிப்பதைவிட மிக விரைவாக நடைபெறுகிறது.

பல சமயங்களில் தொடர்ச்சியான தும்மல், வைக்கோல் ஜுரம் (hay fever) எனப்படும் ஒரு பொதுவான அலர்ஜியின் அல்லது ஒவ்வாமையின் அறிகுறியாக இருக்கிறது. தாவர மகரந்தம் உறுத்தலை ஏற்படுத்துகிறது, மேலும் வைக்கோல் ஜுரம் எனும் பெயர், வைக்கோல் அல்லது புதிதாக வெட்டப்பட்ட புல்லைக் குற்றவாளியாக குறிப்புக் காட்டினாலும், எப்போதுமே அவ்வாறு இல்லாது இருக்கலாம். அவதியுறுவோர் ஏராளமான பல்வகை மகரந்தங்களுக்கு அல்லது ஒருவேளை வெறுமென ஒன்றுக்கோ அலர்ஜியாக இருக்கலாம். எனவே, வைக்கோல் ஜுரத்தால் அவதியுறுகிறவர்கள் பலத்த உலர் காற்று நாட்கணக்காக வீசும் பருவ காலத்துக்கு ஏன் பயப்படுகிறார்கள் எனப் புரிந்து கொள்வது எளிதாயிருக்கிறது. ஒருமுறை நாசி துவாரங்கள் உறுத்தப்பட்டுவிட்டால், தொடர்ச்சியாக தும்மல் ஆரம்பித்து, வழக்கமாக உறுத்தலை உண்டுபண்ணாத மிக நுண்ணிய தூசி பாதிக்கப்பட்டவரை இன்னொரு தும்மும் சுழற்சிக்கு ஆரம்பித்து வைப்பதாகத் தோன்றுகிறது.

பிறர்பேரில் கரிசனை

கடுமையான தலைநீர்க்கோப்பின் விளைவாக, நாசித் துவாரங்கள் அடைபட்டிருக்கும்போது, அவதிப்படுகிறவர்களுக்குத் தும்மல் சிறிது நிவாரணத்தை கொடுக்க முடியும். இவ்விதமாக, நாசியிலிருந்து சளி அகற்றப்படும்போது, சுவாசித்தல் எளிதாகிறது. ஆனால், ஒரு தும்மல் மறைக்கப்படாதபோது, அருகிலுள்ள ஜனம் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?

ஒரு ஜலதோஷம் பரவக்கூடிய எல்லா வழிகளையும் முழுவதுமாக புரிந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் இன்னும் சொல்லமுடியவில்லை. இருப்பினும், ஓர் உறுதியான கருத்து என்னவெனில், ஒரு தும்மலால் காற்றிலே சிதறியிருக்கும் நுண் கிருமிகளை ஒருவர் சுவாசிப்பதன் மூலம் ஜலதோஷத்தைப் பெறக்கூடும் என்பது. குறிப்பாக சுத்தமான காற்று குறைந்தளவு உள்ள ஓர் அனலான அறையின் நெருக்கமான எல்லைப்பரப்பு, அல்லது ஒரு நெருக்கமான ரயில் அல்லது பேருந்தில் இது நிகழலாம். சளிக்காய்ச்சல், தட்டையம்மை, புட்டாளம்மை, கபவாதம், நியுமோனியா கூடிய ரோகம், கக்குவான் இருமல் உள்ளிட்ட பிற நோய்கள் தும்மலின் மூலம் பரவுவதாக நம்பப்படுகிறது.

தும்மலின் வெளித்தள்ளும் வேகத்தின் மீதான ஓர் ஆராய்ச்சி நுண்கிருமிகளைக் கொண்ட திரவத்தின் சிறுதுளிகள் நாசியிலிருந்தும், வாயிலிருந்தும், மணிக்கு 100 மைலுக்கும் அதிக வேகமாக வெளியேற்றப்படுகின்றன; மேலும் அவை ஏறத்தாழ 12 அடிகள் தொலைவிலுள்ள பரப்புகளில் ஒட்டிக்கொள்ள முடியும் எனக் காட்டுகிறது. பிற சிறுதுளிகள், காற்றில் சில நேரம் மிதக்கின்றன, அவை கடந்துசெல்லும் அப்பாவி மக்களால் சுவாசிக்கப்படுகிறது.

தும்மலைக் கட்டுப்படுத்த முடியுமா?

வெற்றியின் வித்தியாசப்பட்ட அளவுகளில் பல வழிகள் முயற்சி செய்யப்பட்டுவருகின்றன. ஒரு விரலை மேல் உதட்டின் மேல், நாசிக்குக் கீழே உறுதியாக அழுத்துவதன் மூலம் சிலர் தும்மலை நிறுத்திவிட்டதாக அல்லது அதன் “வெடிப்பைக்” குறைத்து விட்டதாக உரிமைபாராட்டுகின்றனர். அவ்விடத்தில் கடினமான அழுத்தம் தும்மல் சுழற்சி அல்லது செயல்பாட்டில் உட்பட்ட சில நரம்புகளைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது. வேறொரு வழி, ஒரு தும்மல் வருவது போல், நீங்கள் உணரும்போது, ஒரு கைக்குட்டையில் உங்கள் சளியைச் சிந்துவதாக இருக்கலாம்.

தொடர்ச்சியாக ஏற்படும் தும்மல் அல்லது ஒரு நாட்பட்ட பாதிப்புக்கு உட்சுவாசிக்கப்படுபவை சில வேளைகளில் நிவாரணம் அளிக்கின்றன; உட்சுவாசிக்கப்படுவது, வெறுமென வெந்நீரிலிருந்து வரும் நீராவியாகக்கூட இருக்கலாம். ஜுரத்தால் அவதியுறுபவர்கள் ஒரு சூடான துவலைக் குளியல் எடுத்துக்கொள்ளும்போது அல்லது நீராவி நிறைந்த ஓர் அறையில் குளிக்கும்போது, தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள் என்பதை அது விளக்குவதாயிருக்கிறது.

வித்தியாசமான பல உத்திகளும் வழிகளும் ஆண்டுகளினூடே சொல்லப்பட்டுவந்திருக்கின்றன; சில நியாயமானவை, பிற ஆபத்தானவை, நாசியின் உட்புறம் உணர்ச்சியற்றுப் போகச் செய்யும் களிம்புகள் சிறிது வெற்றியுடன் முயற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கின்றன. மற்றவை, தூக்கமருந்துகள், ஊசிகள், சொட்டுமருந்துகள், மாத்திரைகள், மருந்துநீர் வசியத்துயில் முறை மருத்துவம், நாசியின் சவ்வுகளை உணர்ச்சியற்றுப் போகச் செய்தல், பூண்டு முகர்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இன்னும் அதிக குறிப்புகள், துணிக்கொக்கியை மூக்கின்மேல் போட்டுக்கொள்வதிலிருந்து தலைகீழாக நிற்பது, மொழியின் எழுத்துக்களை பின்னிருந்து சொல்வது, முகத்தைப் பன்றிக்கொழுப்பால் தேய்ப்பது வரை செல்கிறது.

ஓர் எச்சரிப்பு: ஒரு தும்மலைக் கட்டுப்படுத்த அல்லது நிறுத்த யோசனை செய்வது எல்லா சமயத்திலும் நல்லதல்ல. ஒரு பலமான தும்மலை வலுக்கட்டாயமாகத் தடுப்பது மூக்கில் இரத்தம் வடிவதையும் ஏற்படுத்தக்கூடும். மேலும் தீங்கிழைக்கும் பாக்டீரியாவை எலும்பு உட்புழைக்குள் செலுத்தலாம். அது நோயைப் பரவச்செய்யும். அரிய சமயங்களில் மூக்கிலும், அதைச் சுற்றிலுமுள்ள எலும்புகள் முறிந்திருக்கின்றன. மேலும் நடு காதில் உள்ள எலும்பு இடம்பெயர்ந்திருக்கிறது.

“உன்னை ஆசீர்வதிப்பாராக!”

அநேக நாடுகளில், தும்மும் ஒருவருடைய அருகில் நிற்பவர்கள் அவரிடம் “உன்னை ஆசீர்வதிப்பாராக” என சொல்வது ஒரு வழக்கம். இப்படிப்பட்ட ஒரு வழக்கம் எங்கிருந்து வந்தது?

R. பிராஷ் என்பவரின் அது எவ்விதம் ஆரம்பித்தது? என்ற புத்தகத்தின்படி, சில பழங்காலத்தவர், ஒரு மனிதன் தும்மும்போது அவன் மரணத்தின் மிக அருகில் இருக்கிறான் என நம்பினர். பிராஷ் தொடர்ந்து குறிப்பிடுகிறார்: “அந்தப் பயம் தவறான ஆனால் பரவலாக நிலவிய எண்ணத்தின்பேரில் சார்ந்திருந்தது. மனிதனுடைய ஆத்துமா வாழ்க்கையின் சாராம்சமாக கருதப்பட்டுவந்தது. மரித்த மனிதர் ஒருபோதும் சுவாசிப்பதில்லை என்ற உண்மை அவனது ஆத்துமா சுவாசமாக இருக்க வேண்டும் என்ற தவறான அனுமானத்திற்கு வழிநடத்தியது. . . . எனவே, ஆரம்ப நாட்களிலிருந்து மக்கள் ஒரு தும்மலுக்கு பயத்துடன், தும்முபவருக்குக் கடவுள் உதவி செய்து அவரை ஆசீர்வதித்து, அவரது உயிரைப் பாதுகாப்பாரென ஓர் உணர்ச்சிமிக்க விருப்பத்துடன் பிரபிலிக்கக் கற்றுக்கொண்டது ஆச்சரியமாயில்லை. எவ்வாறோ, வரலாற்றின் இடைக்காலத்தில் இந்த வழக்கத்தின் ஆரம்ப தோற்றம் மறக்கப்பட்டுவிட்டிருக்க வேண்டும், ஏனென்றால், தும்மிய எவரிடமும் “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுவதை அறிமுகப்படுத்தியதற்காக மகா போப் கிரெகரி தான் பாராட்டப்பட்டார்.”

தயவுசெய்து உங்கள் கைக்குட்டையை மறக்க வேண்டாம்

குற்றச்செயலுக்கு தும்மல் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவது உங்களை வியப்புறச்செய்யலாம். ஆம், சட்டத்தை மீறுபவர்கள் தும்மலை தீய விளைவுகளுக்காக பிரயோகிக்க அல்லது துர்ப்பிரயோகிக்க வழிகளை வகுத்திருக்கின்றனர். ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள சில திருடர்கள் தும்மல் திருடர்கள் என அழைக்கப்படலாயினர். ஓர் அந்நியனுடைய முகத்தில் அவர்கள் மூக்குப்பொடியைத் தூவி விடுவார்கள். பின்பு அவர் கடுமையான தும்மல் அலையால் கவனம் சிதறுண்டு அலைக்கழிக்கப்படும்போது, திருடர்கள் அவரிடமுள்ள மதிப்புமிக்க பொருட்களைத் திருடிவிடுவார்கள்.

நம்மில் அநேகர் முகமுழுவதும் மூக்குப்பொடியால் தூவப்பட்ட தும்மலை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டோம். ஆனால், ஒரு திடீர் தும்மலினால் அல்லது நீடித்த தும்மலின் பாதிப்பால் மேற்கொள்ளப்பட்டாலும், ஓர் அக்கறையுள்ள நபர் எப்போதும் ஒரு கைக்குட்டையையோ அல்லது கெட்டியான இழைத்தாளையோ அவரது நாசியையும் வாயையும் மறைக்க உபயோகிப்பார். இது நல்ல பழக்கத்தின் வெளிக்காட்டு மட்டுமின்றி, ஒருகாரணமுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமாகும். எதிர்பாராமல் அந்தப் பக்கமாக வருபவரால் உட்சுவாசிக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் கிருமி நிறைந்த சிறுதுளிகளைக் காற்றில் சிதறச் செய்வதற்கு எதிராக உதவும். கிருமிகள் பரவுதலைக் கட்டுப்படுத்த நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்வதன் மூலம், பிறரை நோயிலிருந்து காக்க நாம் முயற்சிசெய்வதையும் அயலான் பேரிலுள்ள அன்பு நம்மைத் தூண்டும்.

ஒரு தும்மலைக் கட்டுப்படுத்துவது ஞானமான அல்லது முடிகிற காரியமாய் இல்லாதிருக்கலாம். ஆனால் உங்கள் கரிசனையை—அந்தத் தும்மலைக் கட்டுப்படுத்த ஒரு கைக்குட்டையை நீங்கள் உபயோகிப்பதை—பிறர் எவ்வளவாய்ப் போற்றுவார்கள்! (g90 6/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்