உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 3/8 பக். 13-16
  • ஆஸ்துமாவை புரிந்துகொள்ளுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆஸ்துமாவை புரிந்துகொள்ளுதல்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆஸ்துமா என்றால் என்ன?
  • ஆஸ்துமாவை உண்டுபண்ணுவது எது?
  • தாக்குதல்களை எவ்விதம் தவிர்ப்பது
  • உங்களுடைய குழந்தை ஆஸ்துமா நோயாளியா?
  • ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருக்குமானால் . . .
  • ஆஸ்துமா நோயாளியின் சிகிச்சை
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1999
  • அறிகுறிகளைப் புரிந்துகொண்டு செயற்படுதல்
    விழித்தெழு!—1996
  • கவலைப்படாதீர்கள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 3/8 பக். 13-16

ஆஸ்துமாவை புரிந்துகொள்ளுதல்

ஆஸ்துமா ஓர் உலகளாவிய துயரமாயிருக்கிறது. இங்கு நியு ஸிலாந்தில் பத்தில் ஒரு நபர் இதனால் துயரமனுபவிக்கிறார் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் முதியவர்களும் சரியொப்பாகவே நகர வாசிகளும் நாட்டுப்புற மக்களும், கைகளினால் வேலை செய்யும் தொழிலாளிகளும் அலுவலக வேலையாட்களும் இந்தத் துன்பமனுபவிப்பவர்களில் ஒருவராக இருக்கிறார்கள்.

உண்மையில், இதனால் துன்பப்படாதவர்கள் ஆஸ்துமாவைப்பற்றி குறைவாகவே அறிந்திருக்கிறார்கள். ஆஸ்துமா நோயாளிகள்கூட அவர்களுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அடிக்கடி புரியாதவர்களாயிருக்கிறார்கள். இது கவலையை உண்டுபண்ணுகிறது. கவலை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. ஒருவேளை நியு ஸிலாந்திலுள்ள அனுபவங்களின் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையிலான பின்வரும் குறிப்புகள் அறியாமையை ஓரளவு குறைக்க உதவலாம்.

ஆஸ்துமா என்றால் என்ன?

ஒரு வகையான ஆஸ்துமா தாக்குதலில், வேதனையனுபவிப்பவர் நெஞ்சில் இறுக்கத்தை உணருகிறார். ஊசு மூச்சினாலும் இருமலினாலும் மூச்சு விடுவதற்கு போரடுகிறார். இந்த அனுபவம் அச்சுறுத்துகிறது! ஆஸ்துமா பாதிப்பு கடுமையானதாக அல்லது முற்றிலும் சாந்தமான ஒன்றாகவும் இருக்கலாம். தாக்குதல்கள் எத்தனை தடவை நிகழ்கிறது என்பதும், அதைப்போலவே நோய் அறிகுறிகளும் வித்தியாசப்படலாம். அவை கடினத்தன்மையில் வேறுபட்டாலும், சில நபர்கள் எப்பொழுதுமே நோய்குறிகளை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இந்த மகிழ்ச்சியற்ற உணர்வுகளுக்கு எது காரணமாயிருக்கிறது? நீங்கள் ஒருவேளை தெரிந்திருக்கிறதுபோல, காற்று நம்முடைய நுரையீரலினுள் காற்றுக் குழாய்கள் மூலமாக செலுத்தப்படுகிறது. அநேக ஆஸ்துமா நோயாளிகளில், அயற்பொருள் நுழைவின் எதிர் விளைவுகள் இந்தக் குழாய்களில் அதிகமான கூருணர்ச்சியை உண்டுபண்ணுகின்றன. இந்தக் காற்றுக் குழாய்களின் சுவரிலுள்ள தசைகள் சுருங்கலாம், இந்தக் குழாயின் மெல்லிய தோலின் உள்வரிப்பூச்சு வீங்கலாம், மற்றும் குழாய் சுவரிலுள்ள சுரப்பிகள் அதிகமான சளியை உற்பத்தி செய்யலாம். விளைவு? இந்தக் குழாய்கள் குறுகுகின்றன. நோயாளி ஏன் சுவாசிப்பதில் கஷ்டமனுபவிக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை!

ஆஸ்துமாவை உண்டுபண்ணுவது எது?

ஓர் ஆஸ்துமா தாக்குதலை எது விசைப்படுத்துகிறது? ஒருவேளை நோய் விளைவிக்கக்கூடிய ஒரு நுண்மம், உணர்ச்சிவேகத்தின் நிலைகுலைவு அல்லது ஒரு கடின அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாகும். என்றபோதிலும், இந்த வியாதி ஒருவரில் ஒருமுறை விசைப்படுத்தப்பட்டதென்றால், காற்றுக் குழாய்களில் அதிக கூருணர்ச்சியை உண்டுபண்ணும் பற்பல காப்பு மூலங்கள் அல்லது குறிப்பிட்ட பொருட்கள் இருக்கலாம். இவற்றிற்கு காற்றுக் குழாய்கள் ஒருமுறை கூருணர்ச்சி கொண்ட பின், வேறு அம்சங்கள், அதிக தட்ப-வெப்ப மாற்றங்கள், ஈரத்தன்மையில் வித்தியாசம், உணர்ச்சி வேகத்தின் நிலைகுலைவு, அல்லது உடற்பயிற்சி போன்ற இவ்விதமான பல காரணங்களும்கூட தாக்குதல்களை உண்டாக்கலாம்.

ஆஸ்துமா பாதிப்பை தூண்டக்கூடிய காப்பு மூலங்களில் சிலவற்றை மருத்துவர்கள் அடையாளப்படுத்த இயலும், ஆனால் அவை எல்லாவற்றையும் கண்டிபிடிக்க எப்போதுமே சாத்தியமாயிருப்பதில்லை. மேலும் அவற்றை கண்டுபிடித்தாலும், அவற்றை தவிர்க்க முடிவதில்லை. ஆஸ்துமாவின் காரணங்களையும் இதை சமாளிப்பதற்கான சிறந்த வழியையும் கண்டுபிடிப்பதற்காக முழுமையாக ஆராய்ச்சி செய்வது நேரத்தை எடுக்கலாம். வேதனைப்படுபவரின் மற்றும் மருத்துவரின் பாகத்திலும் இது அதிக பொறுமையை உட்படுத்தலாம். ஆனால் இவ்வித நேரம் செலவழித்தல் நோய்க்குறிகளை கட்டுப்படுத்துவதற்கு அதிக திறமையில் விளைவடையலாம்.

தாக்குதல்களை எவ்விதம் தவிர்ப்பது

அநேக காரியங்கள் நுரையீரலை எரிச்சலூட்டும். மேலும் ஆஸ்துமாவினால் துன்பப்படுபவரில் ஒரு தாக்குதலை உண்டுபண்ண முடியும். பின்வருபவற்றுடன் தொடர்பைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

புகையிலை புகை: புகை பிடிக்காதீர்கள், மற்றும் புகையினால் நிறைந்திருக்கும் அறைகளை தவிருங்கள். கட்டாயமாக புகைக்கவேண்டும் என்று விரும்பும் ஆஸ்துமா நோயளிகளின் பேரில் மருத்துவர்கள் எளிதில் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள். மேலும், ஆஸ்துமாவினால் துன்புறும் ஒருவரின் நண்பர்கள் அந்த நபரின் முன்னிலையில் புகைபிடிக்கக்கூடாது. இந்த நபர் ஒரு பாதிப்பின் துன்பத்தை உடனடியாக அனுபவிக்காவிட்டாலும், மணிநேரங்களுக்குப் பின்பு புகையின் விளைவுகளின் காரணமாக கொடிய ஆபத்திற்குள் இருப்பார்.

தூசு: தூசியால் சூழ்ந்த பகுதிகளையும் தூசியை தட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேலை ஏராளமான தூசியோடு தொடர்பைக் கொண்டுவருமானால் இதை மாற்றிக்கொள்வதைப்பற்றி கவலையோடு சிந்தனை செய்யுங்கள். சில ஆஸ்துமா நோயாளிகள் அவர்களுடைய நோய்குறிகள் இரவில் அல்லது படுக்கை அறையில் மட்டுமே ஏற்படுவதாக காண்கிறார்கள். இது வீட்டு தூசியினாலோ அல்லது அந்த நுண்ணிய வீட்டு தூசு பூச்சுகளினாலோ இருக்கக்கூடுமா? அநேக சந்தர்ப்பங்களில் இவ்வாறிருக்கிறது; எனவே, ஆஸ்துமா நோயாளிகள் படுக்கை அறையை கூடிய மட்டும் தூசியிலிருந்து விடுபட்டிருக்க பார்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிக்காக விசேஷமாக திட்டமிடப்பட்டுள்ள வீட்டை சுத்தம் செய்வதற்கு ஆலோசனைகள் சில பின்வருமாறு.

படுக்கை அறையை அனுதினமும் சுத்தம் செய்யுங்கள்.

ஒவ்வொரு வாரமும், படுக்கை மெத்தை, போர்வை மற்றும் தரையை முழுமையாக சுத்தப்படுத்தி தூசகற்றவும். மரத்திலான கடினமான தரைகள் கம்பளம் அல்லது விரிப்புகளைப் பார்க்கிலும் சிறந்தது. மற்றும் திரைச்சீலைகளைப் பார்க்கிலும் ஒளியை விடுவதில் வேறுபடும் பலகணித்திரை சிறந்தது.

தட்டுமுட்டு பொருட்கள், கதவுகளின் மேற்பாகங்கள், பலகணி ஓரங்கள் மற்றும் பலகணி அடிக்கட்டை இவைகளை ஓர் ஈரம் தோய்ந்த அல்லது எண்ணெய் துணியைக் கொண்டு தூசு தட்டுங்கள்.

அறை முழுமையாக காற்றோட்டமுள்ளதாக இருக்க வேண்டும். மேலும் காற்று செலுத்தப்பட்ட பின்பு, ஒரு நபர் ஓய்வெடுப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்பு கதவுகளும் பலகணிகளும் மூடப்பட வேண்டும்.

மெத்தைகள், போர்வைகள் மற்றும் தலையணைகள் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவை உண்டாக்கும் பொருட்களாக இருக்கக்கூடாது, மேலும் அவை அடிக்கடி சூரிய வெளிச்சத்தால் ஒழுங்காக காற்றடிக்கப்பட வேண்டும்.a

கூடுதலான ஒரு காரியம். செல்லப் பிராணிகளை படுக்கையறையினுள் அனுமதிக்காதீர்கள். மேலும் உங்களுடைய செல்ல பிராணியின் காரணமாக நீங்கள் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவினால் கஷ்டப்படுகிறீர்கள் என்பதற்கு ஏதாவதொரு அத்தாட்சி இருக்குமானால், அந்தப் பிராணிக்கு வேறொரு வீட்டைக் கண்டுபிடியுங்கள்—அல்லது, குறைந்தபட்சம், எப்பொழுதும் அதை வீட்டிற்கு வெளியே வைத்திருங்கள்.

தட்பவெப்ப அளவும் ஈரத்தன்மையும்: திடீர் தட்பவெப்ப நிலை மாற்றங்களும் வெப்பம் அல்லது குளிரின் உச்சநிலைகளும் ஒரு பாதிப்பை உண்டுபண்ண முடியும். இலேசான வெப்பமும் ஈரமுமான காற்றே சிறந்தது. எனவே, நீங்கள் ஆஸ்துமாவினால் துன்பப்படும்போது கூடுமானவரையில் மூடுபனி கலந்த அல்லது உறைநிலை குளிரான சீதோஷ்ண நிலையின்போது அவ்வளவு வெளியே செல்லாதீர்கள். உஷ்ணமான, காய்ந்த மைய சூடாக்குதலுள்ள இடங்களைத் தவிருங்கள். தட்பவெப்பநிலை மாற்றங்கள் இரவில் உங்களை பாதித்தால், குளிர் மாதங்களின்போது வெப்பநிலையை கட்டுப்படுத்தும் சூடூட்டுங் கருவியை உங்கள் அறையில் உபயோகியுங்கள். நோய்குறிகளை ஈரத்தன்மை கொண்டு வருகிறதென்றால், ஈரத்தை கட்டுப்படுத்தும் கருவியை உபயோகித்து பாருங்கள்.

உணர்ச்சி வேகத்தின் அழுத்தமும் சோர்வும்: இவைகளில் இரண்டிலொன்று ஆஸ்துமா பாதிப்பை உண்டாக்குவதற்கு காரணமாயிருக்கலாம். நாம் எப்பொழுதுமே உணர்ச்சி வேகத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் அநேக ஆஸ்துமா நோயாளிகள் இந்தப் பகுதியில் பைபிள் நியமங்கள் அவர்களுக்கு உதவுகின்றன என்று கண்டிருக்கிறார்கள். பைபிள் நமக்கு சொல்லுகிறது: “ஒரு அமைதலான இருதயம் உடலுக்கு ஜீவன்.” (நீதிமொழிகள் 14:30, NW) மேலும், ஆஸ்துமாவினால் துன்பமனுபவிப்பவர்களில் ஞானமுள்ளவர்கள் தங்களுடைய சரீர வரம்புகளை தெரிந்துகொண்டு, களைப்படைவதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் அந்நிலையுங்கூட ஒரு தாக்குதலை கிளப்பிவிடக்கூடும்.

உணவு: உணவின் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவுகள் ஆஸ்துமா பாதிப்புக்கு காரணமாயிருக்கலாம். விசேஷமாக, குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு ஆஸ்துமா துவங்கியிருந்த பிள்ளைகளில் அல்லது வயது வந்தவர்களில் அப்படி இருக்கும். பால், முட்டை மற்றும் தானியங்கள் போன்ற சாதாரண உணவுகள்கூட காரணமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் விசேஷமாக, இது சர்க்கரை போன்ற பரவலாக உபயோகிக்கப்படும் பொருளாக இருக்குமென்றால், குற்றவாளியை தீர்மானிப்பதற்கு ஏராளமான துப்பறியும் வேலை தேவையாயிருக்கலாம். மேலும், நிச்சயமாகவே ஓர் உணவைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கக்கூடும். வயதுவந்த நோயாளிகள் மதுபானங்களை, விசேஷமாக, காரணக்கூறுகளை அதிகப்படுத்தும் சாத்தியமுள்ள பீயர் மற்றும் திராட்ச மது போன்றவற்றை தவிர்ப்பதைக் குறித்து ஆலோசனை கூறப்படுகிறார்கள்.

உடற்பயிற்சி: சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு கடும் முயற்சியின் காரணமாக ஏற்படுகிறது, வழக்கமாக உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்பு தாக்குதல் நடைபெறுகிறது. இது உங்களுடைய அனுபமாயிருக்குமானால், சக்தியின் திடீர் வெளியேற்றத்தை உட்படுத்தும் “ஸ்குவாஷ்” போன்ற உடற்பயிற்சிகளை தவிர்த்து, நீச்சல், மிதிவண்டி போன்ற அதிக மெல்ல நடைபெறுகிற உடற்பயிற்சியின் முறையை பயன்படுத்தி பாருங்கள். ஒருவேளை ஓர் ஊக்கமான நடவடிக்கைக்கு முன்பு, ஒரு பிரான்கோடைலேட்டர் (மூச்சுக் குழாய்களில் இறுக்கத்தை விடுவிப்பதற்கான ஒரு மருந்து) உபயோகிப்பது உதவி செய்யலாம். உடற்பயிற்சியை தாங்கும் சக்தியை உங்களில் அதிகரிக்கும்படியாக, உடம்பு பிடித்துவிடுதல், தூய காற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளில் மருத்துவம் செய்யும் மருத்துவர் ஒருவர் ஒரு திட்டத்தின் மூலமாக உங்களுக்கு உதவிசெய்யலாம். சுவாசிப்பதில் தடையின்றி இது அதிகமான நடவடிக்கைகளில் பங்குகொள்ள உங்களுக்கு உதவும்.

தொற்று: அடிக்கடி, ஒரு ஜலதோஷம் அல்லது இன்புளுவன்சா போன்ற சிறிய மூச்சு விடுதலிலுள்ள தொற்று ஆஸ்துமா பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அல்லது நோய்குறிகளை அதிக மோசமாக்குகிறது. ஒரு தொற்று தோன்றியிருக்கும்போது வழக்கமாக ஆஸ்துமாவிற்கான நோய்தணிப்பு மருத்துவம் எப்பொழுதும் பயனுள்ளதாக இல்லை.

மகரந்தங்களோடு வாழ்தல்: பனிக்கால மாதங்கள் மூச்சுவிடுதல் நோயுடையவர்களுக்கு அநேக பிரச்னைகளை உண்டாக்குகையில், அநேகர் பருவக் காலத்துக்குரிய ஆஸ்துமா என்றழைக்கப்படுவதிலிருந்து துன்பப்படுகின்றனர். மிகநுட்பமான சிறிய மகரந்த துகள்கள் கோடக்கால காற்றில் மிதப்பது ஆஸ்துமாவினால் துன்பமனுபவிப்பவர்களுக்கு சொல்லமுடியாத ஆழ்துயர் நிலையும் உடல் நலமின்மையும் உண்டாக்கக்கூடும். இந்த மகரந்தத்தின் ஊற்று மூலங்களை அகற்றுவது கூடியகாரியமல்ல, ஆனால் சில சாதாரண அறிவு அளவு முறைகள் உதவி செய்யலாம். உதாரணமாக, புதிதாக வெட்டப்பட்ட புல் தரைகளையும், மகரந்த காலங்களில் காட்டுப் பகுதி அல்லது நாட்டுப்புறங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மற்றும் காற்று கட்டுப்படுத்தப்பட்ட பயனுள்ள கருவியை சாத்தியமானால் பயன்படுத்துங்கள்.

பூஞ்சக்காளானோடு வாழ்தல்: ஆயிரக்கணக்கான பூஞ்சக்காளான்கள், அல்லது காளான்கள் நம்முடைய சுற்றுப்புறத்தில் குடியிருக்கின்றன. பூஞ்சக்காளான்கள் அல்லது காளான்களின் சிதல் விதைகள் (இனப் பெருக்கம் செய்யும் திண்மங்கள்) காய்கறிகள் அல்லது மிருகப் பொருட்களின் மேல் வளருகின்றன. இவைகள் கோதுமை, புல்லரிசி, சோளம், புல்லுகள் மற்றும் இலைகள் இவைகளின் மேல் அதிகமாக இருக்கின்றன. ஒரே ஒரு சிறிய எண்ணிக்கை மட்டுமே ஆஸ்துமாவினால் துன்புறுகிறவர்களுக்கு பிரச்னைகளை உண்டுபண்ணுகின்றன என்று காட்டும் சமயத்தில், நியு ஸிலாந்தில் ஒரு படிப்பு சிதல் விதைகள் ஒரு பெரிய அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவுக்கு காரணக்கூறாக இருக்கலாம் என்று ஆலோசனை கூறுகின்றது. எனவே, காற்றுதாங்கிய சிதல் விதைகளை அகற்றுவது சாத்தியமில்லாத சமயத்தில், பின்வரும் படிகள் உதவி செய்யலாம்:

ஈரஞ் சொறிந்த நாட்பட்ட அடித்தளங்களையும் கட்டிடங்களையும் தவிர்க்கவும்.

இலைகளை அல்லது காய்ந்த புல்லை பெருக்கி தள்ளவோ அல்லது எரிக்கவோ கூடாது.

பூஞ்சக்காளான் படிந்த எந்தப் பொருளையும் தொற்று நீக்குங்கள் அல்லது அழித்துவிடுங்கள்.

வீட்டிற்குள் செடிகளை வைக்கக்கூடது அல்லது ஒரு கலப்பு உர குவியலை தோட்டத்தில் சேமித்து வைக்காதீர்கள்.

பூஞ்சக்காளானினால் தொற்றப்பட்ட வீட்டின் பகுதிகளில் நச்சுத்தொடர்பின் விளைவை அகற்ற வேண்டும்.

உங்களுடைய குழந்தை ஆஸ்துமா நோயாளியா?

அப்படியென்றால், உங்களுடைய ஆதரவு அவனுக்குத் தேவை. நீங்கள், அவனுடைய ஆசிரியர்களும்கூட, அவனுடைய பிரச்னையைப் புரிந்து இதை எதிர்த்து சமாளிக்க அவனுக்கு உதவுவது அவசியம். அவன் சமாளிப்பதைக் காட்டிலும் அதிகம் செய்வதற்கு குழந்தை வற்புறுத்தப்படக்கூடது, அதே சமயத்தில் அவன் தன்னுடைய ஆஸ்துமாவை சாக்காக வைத்து அவனுக்கு நன்மையான காரியங்களைச் செய்வதிலிருந்து பின்வாங்குவதற்கு அனுமதிக்கவும்கூடது.

ஆஸ்துமா தாக்குதலுள்ள அநேக பிள்ளைகள் தங்கள் நோய்குறிகளிலிருந்து விடுபட்டிருக்கும் சமயங்களில், பல விளையாட்டுகளை விளையாட முடிந்தாலும்கூட, அவனுடைய சரீர நடவடிக்கைகள் போட்டியிடும் விளையாட்டுகளிலிருந்து விடுபட்டதாக இருக்கவேண்டும். ஆகிலும், தீராத ஆஸ்துமா நோயுள்ள பிள்ளை வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையை மட்டுமே அனுபவிக்கக்கூடும். வயது வந்தவர்கள் அதிக கடின முயற்சிக்கு அவனை வற்புறுத்தாமலிருப்பதற்கு கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மருத்துவத்தை புத்திக்கூர்மையுடன் உபயோகப்படுத்துதல், உடற்கல்வி போன்ற இவ்விதமான நடவடிக்கைகளை அனுபவிக்க அவனுக்கு உதவிசெய்யலாம், மற்றும் மூச்சுக் குழாயை விரிவாக்கும் பிரான்கோடைலேட்டரை எப்பொழுது, எவ்வாறு உபயோகிப்பது என்பதை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.

சில பிள்ளைகள் தொடர்ந்து சுவாசிப்பதற்கு கஷ்டப்படுபவர்களாகவும் அடிக்கடி ஊசு மூச்சுடையவர்களாகவும் ஆஸ்துமாவினால் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் குழந்தைகள் அடிக்கடி கவலையுள்ளவர்களாகவும் விறைப்பாகவும் இருக்கிறார்கள். பெற்றோரும் ஆசிரியர்களும் இவர்களைப் பற்றி அதிகளவு கவலைப்படுகிறார்கள். இந்தப் பிள்ளைகள் அடிக்கடி பள்ளிக்குச் செல்வதில்லை, விளையாட்டுகளில் சேர முடிவதில்லை.

இப்பேர்ப்பட்ட ஒரு குழந்தைக்கு பெற்றோர் அதிகப்படியாக சாக்குப்போக்கு சொல்லி பாதுகாக்க முற்படலாம். எப்போதுமே வாக்குவாதமும் கலவரமும் இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து இந்தக் குழந்தை வருவானானால், அவன் ஆதரவு, அன்பு, புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் அவனுக்கு உச்ச அளவில் தேவைப்படும் உற்சாகம் ஆகியவற்றில் குறைவுபடலாம். ஆஸ்துமாவைக் குறித்து ஆரோக்கியமான, நம்பிக்கையான அணுகுதலை உடைய பெற்றோர், பிள்ளையின் கவலையை குறைக்க உதவக்கூடியவர்களாய் இருக்கிறார்கள், அதன் மூலம் இந்த வியாதியின் கடினத்தன்மையை குறைக்கிறார்கள்.

ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருக்குமானால் . . .

ஓர் அமைதலான இடத்திற்கு அவனை கொண்டுச் சென்று அவனுக்கு தைரியமூட்டுங்கள். அவன் நின்றுகொண்டிருக்கலாம் அல்லது முன்னால் சாய்ந்து உட்காரலாம், பாதிப்பின் சமயத்தில் இது அதிக வசதியான நிலையாகும், மற்றும் அவன் தன்னுடைய மூச்சுக்குழாயை விரிவாக்கும் சாதனத்தை உடனடியாக உபயோகிக்க வேண்டும். மூச்சுக்குழாயை விரிவாக்கும் மருந்து உறிஞ்சுதலாக இருந்தால், இது விரைவாக வேலைச் செய்யலாம், மருந்தை வாய் வழியாக எடுப்பதைக் காட்டிலும் இது அதிக பயனுள்ளதாக இருக்கிறது. இந்தப் பாதிப்பு கடுமையான ஒன்றாக இருக்குமானால்—விசேஷமாக அவதிப்படுவோர் சரியாக பேசமுடியாமல் இருக்குமானால்—அவர் மருத்துவரிடம் கூடிய விரைவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதற்கிடையில், மூச்சுத் திணறலினாலும் துடிப்பினாலும் நோயாளி ஏராளமான ஈரத்தன்மையை இந்தப் பாதிப்பின்போது இழக்கிறார். ஆகையால், குடிப்பதற்கு ஏராளமாக அவருக்குக் கொடுக்கவும்.

ஆஸ்துமா நோயாளியின் சிகிச்சை

ஆஸ்துமா நோயாளிக்கு உதவுவதில், உடம்பு பிடித்து விடுதல் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை, விசேஷமாக (உந்து சவ்வு உபயோகித்து) சரியாக எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்றும் குறைந்த சுவாசத்தில் எவ்வாறு எளிதாக உணரவேண்டும் என்றும் அவருக்கு காட்டுவதற்கு ஒரு முக்கியமான உபகரணமாயிருக்கிறது. இந்த இயற்கை சிகிச்சையளிக்கும் மருத்துவர் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, அவருக்கு எவ்வாறு இளைப்பாறுவது, உடலின் சரியான நிலை மற்றும் உடற்பயிற்சிகளைகூட கற்றுக்கொடுக்க முடியும். சிகிச்சைகள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு தனிநபர் காரியத்திலும் எது சிறந்தது என்று ஆலோசனை கொடுப்பதற்கு ஒரு மருத்துவரே அதிக தகுதியுடையவராயிருக்கிறார்.

சிகிச்சைகள் சோடியம் குரோமோலின் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் மற்றும் மூச்சுக்குழய் விரிவாக்கும் பற்பல கருவிகளின் உபயோகம் ஆகியவற்றை உட்படுத்துகிறது. நிச்சயமாகவே, மருந்துகளின் உபயோகத்தால் பக்க விளைவுகளுக்கு சாத்தியமிருக்கிறது. ஒரு மருத்துவர் வேறு சிகிச்சைகளை சிபாரிசு செய்யக்கூடும்.

ஆஸ்துமா சிக்கலானது. உறவினர்களும் நண்பர்களும் ஏதாவது உதவியாயிருக்க போகிறார்கள் என்றால் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைப் போன்ற காரியங்களை சொல்லுவதை தவிர்க்கவேண்டும்: ‘இதிலிருந்து கொஞ்சம் உங்கள் எண்ணத்தை எடுத்துவிடுங்கள்’ அல்லது ‘எனக்குப் பார்ப்பதற்கு நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்.’ தங்களுடைய வியாதியை புரிந்துகொள்வதற்கு கற்றுக்கொள்ளும் ஆஸ்துமாவினால் துன்புறுவோர், கடவுளுடைய புதிய உலகத்தில் மனிதவர்க்கம் எல்லா நோய்களிலுமிருந்து குணமாக்கப்படும் முன்புங்கூட, அவர்கள் ஆஸ்துமாவை விசைப்படுத்தும் காரியங்களைத் தவிர்ப்பதில் நன்றாக தேறினவர்களாகவும், மற்றும் அவர்களுடைய அழுத்தம், கவலை மற்றும் அசெளகரியம் அதிகளவில் குறைக்கப்படவும் தெரிந்துகொள்ளுவதனால் ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். (ஏசாயா 33:22, 24)—ஆஸ்துமாவினால் துன்புறும் ஒருவரால் அளிக்கப்பட்டது.

(g90 3⁄22)

[அடிக்குறிப்புகள்]

a சில சமயங்களில் ஆஸ்துமா நோயாளி இந்த வீட்டு வேலைகளை நிறைவேற்றுவதற்கு மிக வியாதியாக இருக்கலாம். உதவிக்கான ஆலோசனைகளுக்காக, பிப்ரவரி 22, 1982 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் தயவுசெய்து இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்: “ஆரோக்கியமில்லாதபோதிலும் ஒரு சுத்தமான வீடு.”

[பக்கம் 15-ன் படம்/வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தளர்ந்த தசை

சளி சவ்வு

தடையில்லாத காற்றுவழி

இயல்பான நிலை

சுருங்கிய தசை

வீக்கமடைந்த சளி சவ்வு

தடைபட்ட காற்றுவழி

சளி

ஆஸ்துமாவின் பாதிப்பு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்