உலகத்தைக் கவனித்தல்
துன்புறுத்தல் வெற்றிகொள்ளப்படுகிறது
1989, அக்டோபர் 1, காவற்கோபுரம் கட்டுரை பொரூண்டியில் யெகோவாவின் சாட்சிகளுடைய துன்புறுத்தலை அம்பலப்படுத்தியபோதிலும், தாக்குதல்களும் ஒடுக்குதலும் தணியாமல் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இருந்தபோதிலும், பொரூண்டியிலிருந்து மிகவும் அண்மையில் கிடைத்த அறிக்கைகள், சபைகளின் ஒரே ஒரு வட்டாரத்தில் சுறுசுறுப்பான சாட்சிகளின் எண்ணிக்கையில் 8.9 சதவிகித அதிகரிப்பைக் காண்பிக்கிறது. துன்புறுத்தல் மிகவும் கடுமையாய் இருந்த மற்றொரு வட்டாரத்தில், 4.2 சதவிகித அதிகரிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சாட்சிகள் ஒவ்வொரு மாதமும் வெளியரங்கமான பிரசங்க வேலையில் சராசரியாக 17-லிருந்து 18 மணிநேரங்கள் செலவழிக்கிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள உடன் விசுவாசிகள் சாட்சிகளுக்குத் தீங்கிழைக்கப்படுவதை எதிர்த்து பொரூண்டி அரசாங்கத்துக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்திருக்கிறார்கள். (g89 12/22)
கடுங்காற்றை மென்மையாக்குவது
1989 செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் சூறாவளிக்காற்று வடஅமெரிக்க கரையின் மீது மோதியபோது, மணிக்கு 135-மைல் வேகத்தில் வீசிய அதன் காற்று, கட்டிடங்களை நொறுக்கி, படகுகளை விளையாட்டுச் சாமான்களைப் போல தூக்கி வீசியது. புயல் காற்று வலிமையோடு தாக்கிய தென் கரோலினாவிலுள்ள சார்லஸ்டனிலிருந்த தங்களுடைய சகோதரர்களின் துயர்துடைப்புக்காக, சுற்றிலுமிருந்த யெகோவாவின் சாட்சிகள் வேகமாக ஒன்றுசேர்ந்தனர். 23-ம் தேதி காலைக்குள் 125 வாலண்டியர்கள், உடன்சாட்சிகளின் வீடுகளிலும் ராஜ்ய மன்றங்களிலும், சிதைவுகளையும் வீழ்ந்துபோன்ற மரங்களையும் அப்புறப்படுத்திக் கொண்டு ஏற்கெனவே வேலையில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர், மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி மற்றும் கல்லெண்ணய் ஆகியவை கொண்டுவரப்பட்டன. அடுத்த நாள் 14 பாரக்கட்டை வண்டிகள் சார்லஸ்டனுக்கு வந்துசேர்ந்தன. ஐந்து ராஜ்ய மன்றங்களில் உள்ளூர் சாட்சிகளுக்குத் தேவையான உணவு, பனிக்கட்டிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பொருள், தண்ணீர் இன்னும் மற்றப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டன. ஒருசில நாட்களுக்குள், இந்த உடனடித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக சாட்சிகளின் ஒரு தொகுதி 1,60,000 ரூபாய் நன்கொடை அளித்திருந்தார்கள். (g89 12/22)
சர்வ தேசீய ஜேப்படிகள்
லண்டனுக்குக் கோட காலம் வரும்போது ஜேப்படிகாரர்களும் வருகின்றனர். உலகிலேயே அதிக திறமையுள்ளவர்கள் என்பதாக அனைத்து நாட்டவராலும் அறியப்பட்டுள்ள அவர்களில் சுமார் நான்கு டஜன் ஆட்கள் நகரத்திற்கு பறந்துவந்து இரண்டுக்கும் குறைவான மாதங்களில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தையும் பண்டத்தையும் கொள்ளையடித்துவிடுகிறார்கள் என்பதாக தி ஸண்டே டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது. அவர்களுடைய தாயகமாகிய சில்லியின் பெயரில் லாஸ் சில்லியனோஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் முதலாவது இத்தாலியிலுள்ள மட்ரிட், ஸ்பய்ன் அல்லது மில்லனுக்குப் பயணம் செய்து இங்கிலாந்துக்குள் திருட்டுத்தனமாக நுழைவதற்காக கடவுச் சீட்டுகளைத் (பாஸ்போர்ட்) திருடுகிறார்கள். ஆக்ஸ்போர்ட் தெரு சில்லறை விற்பனைக் கடைகள், அடித்தள இரயில் நிலையங்கள் மற்றும் வெஸ்ட் என்ட் விடுதிகளிலுள்ள பொதுக்கூடங்கள் ஆகியவை முக்கிய குறியிலக்கு ஆகும். சமூக நிகழ்ச்சிகளின் போது கூட்டத்தோடு லண்டனின் கோபுரம் மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் திருமடம் போன்ற நன்கு அறியப்பட்ட கவர்ந்திழுக்கக்கூடிய இடங்களில் பயணிகளோடுகூட இவர்கள் கலந்து ஒன்றாகிவிடுகிறார்கள். அவர்கள் மிகவும் திறமையுள்ளவர்களாயும் புத்திசாலிகளாகவும், பலியாளின் கவனத்தை எளிதில் திசைத்திருப்பக்கூடியவர்களாகவும் இருப்பதால் காவல்துறையினர், ஜனநெரிசலுள்ள இடங்களில் அதிகமாக பணம் எடுத்துச்செல்வதற்கு எதிராக அறிவுரை கூறுகிறார்கள். “எளிய விதி இது” என்பதாக ஓர் அதிகாரி சொன்னார். “உங்களுக்கும் உங்கள் விலைமதிப்புள்ள பொருட்களுக்குமிடையே எப்போதும் நேரடி பார்வையைக் காத்துக்கொள்ளுங்கள்.” (g89 12/22)
பெருஞ்செலவு பிடிக்கிற தாமதங்கள்
ஜெர்மன் விண்வெளி இடப்பரப்பு பயன்படுத்துவோர் சங்கத்திலிருந்து வரும் அறிக்கையின்படி, ஐரோப்பாவில் விமான–போக்குவரத்து தாமதங்களினால் ஏர்லைன்ஸுக்கும் அவைகளின் பயணிகளுக்கும், ஆண்டுக்கு 6,400 கோடி ரூபாய் பணம் செலவாகிறது. பிரச்னைகளுக்கு காரணம், விண்வெளி இடப்பரப்பு தவறாக பயன்படுத்தப்படுவதே என்பதாக அறிக்கை உறுதியாக கூறுகிறது. முழு ஐக்கிய மாகாணங்களுக்குமிருக்கும் 20 விமான– போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களோடு ஒப்பிடுகையில், ஐரோப்பாவில் இவை 44 ஆக இருக்கின்றன. முழு ஐரோப்பாவுக்கும் தனியொரு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க 8,000 கோடி ரூபாய் முதல் 16,000 கோடி ரூபாய் வரையாக செலவாகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு முதலீடு உண்மையில் தற்போதைய எல்லா விமான–போக்குவரத்து–கட்டுப்பாடு தாமதங்களையும் நீக்கிவிடும் என்பதாக லண்டனில் வெளியாகும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் சொல்லுகிறது. தற்போதைய ஒத்திசைவு குறைபாடு, விமானம் முழு தகுதிப்பெற்றிராத உயரங்களிலும் பாதையிலும் செலுத்தப்படுவதில் விளைவடைகிறது. இது அசல் ஐரோப்பிய விமானப் பயணத்தை, 10 சதவீதம் கூடுதலாக நீடிக்கச் செய்கிறது. (g90 1/8)
எய்ட்ஸ் பாதுகாப்பு?
ஆப்ரிக்காவில் பலருடன் பாலுறவு கொள்ளுபவர்கள் மத்தியில் எய்ட்ஸ் உடனடியாக பரவுவதற்கான காரணத்தைக் குறித்து நீண்ட காலமாக குழப்பத்திலிருந்த ஆராய்ச்சியாளர்கள், இப்பொழுது ஓரளவு பதிலை உடையவர்களாக இருக்கக்கூடும். விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆப்பிரிக்க ஆண்கள், விருத்தசேதனம் செய்துகொண்டுள்ள ஆண்களைக் காட்டிலும் உடலுறவுகளிலிருந்து கொடிய நச்சுக் கிருமிகளைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் ஐந்திலிருந்து எட்டு மடங்கு அதிகமாக இருப்பதை பல அண்மைக் கால ஆராய்ச்சிகள் காண்பித்திருப்பதை அறிவியல் பத்திரிகை குறிப்பிடுகிறது. சாத்தியமான ஒரு காரணத்தை அறிவியல் குறிப்பிடுகிறது: “நச்சுக்கிருமி நீண்டகாலம் பிழைத்திருந்து ஊடுருவிச் செல்வதை அனுமதிக்கிற வெதுவெதுப்பான ஈரமான சூழலை நுனித்தோல் அளிக்கிறது. வறண்டச் சூழலில் இந்த நச்சுக்கிருமி மிகக் குறுகிய காலமே பிழைத்திருக்கிறது.” கொள்ளைநோய் மருத்துவ வல்லுநர் தாமஸ் குவின் இவ்வாறாக முடிவு செய்கிறார்: “விருத்தசேதனம் வெளிப்படயாக பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதையே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.” ஆனால் விலைமாதர்களும்கூட எய்ட்ஸ் பரவுவதற்குத் தங்கள் பங்கைச் செய்கின்றனர். ஆப்பிரிக்காவின் சிலப் பகுதிகளில், அவர்களில் 50-லிருந்து 80 சதவீதம் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டவர்கள். (g89 12/22)
மறைந்துகொண்டிருக்கும் பேருருவ விலங்கு
நீல திமிங்கிலம் தொந்தரவிலிருந்து இன்னும் தப்பியதாக இல்லை. விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்ததைவிட மிகச் சிலவையே இன்னும் மீதமிருக்கின்றன. எல்லா நீல திமிங்கில வேட்டையும் 1966-ல் சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் அவை மாண்டு மறைந்து போகும் விளிம்பிலிருந்து மீண்டுவந்துகொண்டில்லை. வியாபாரத்துக்காக திமிங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னான நாட்களில் அவை எண்ணிக்கையில் 2,25,000 ஆக இருந்தன. 11,000-லிருந்து 14,000 வரை மீதமிருக்கும் என்பதாக விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் நேரடியாக எண்ணியதன் விளைவாகக் கிடைத்த பூர்வாங்கமான முடிவுகள் 1,200 அல்லது 1,500-க்கும் குறைவாகவே அவை இருக்கக்கூடும் என்பதாக தெரிவிக்கிறது. 100 அடி நீளமும் 150 டன்கள் எடையும் —30 யானைகள் கொண்ட ஒரு மந்தையின் எடை—கொண்டிருக்க வளரும் பேருருவ திமிங்கிலங்கள் பூமியில் குடியிருந்த மிகப் பெரிய உயிரினமாக நன்றாகவே இருக்கக்கூடும். அவை தங்கள் குட்டிகளுக்கு ஓராண்டுக்கு பாலூட்டி, வயதடைய ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, இரண்டாண்டுக்கு ஒரு முறையே பிறப்பிக்கின்றன. இதன் காரணமாகவே படிப்படியாக குறைந்துவிடுவதிலிருந்து இவை தாமதமாகவே மீண்டுவருகின்றன. ஆனால் சட்டவிரோதமாக வேட்டையாடுதலும்கூட அவைகளின் குறைவான எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்கக்கூடும். (g89 12/8)
“எய்ட்ஸைவிட பெரிய கொலையாளி”
பதினைந்து ஆண்டுகளாக, கல்லீரல் நோய் பற்றி ஆராய்ந்தப் பின்னர், ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு முக்கிய மருத்துவமனையின் நோய்ப்படுக்கை ஆய்வு நிர்வாகி, அண்மையில் கல்லீரல் அழற்சி நோய் “எய்ட்ஸைவிட மிகப் பெரிய கொலையாளி” என்பதாக எச்சரித்தார். அவர் மேலும் சொன்னதாவது: “ஆண்டு ஒன்றில் கல்லீரல் அழற்சியினால் சுமார் 20 இலட்சம் ஆட்கள் உயிரிழப்பதாக மதிப்பிடப்படுகிறது, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை எய்ட்ஸ் இன்னும் அந்த அளவை எட்டவில்லை.” கல்லீரலைத் தாக்கும் சாவுக்கேதுவான கல்லீரல் அழற்சி C நச்சுக்கிருமி குறித்து அவர் மக்களை எச்சரிப்பூட்டுகிறார். இதுவரையாக இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை எதுவுமில்லை. ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் கறைப்பட்ட இரத்தத்தை ஏற்றிக்கொள்வதிலிருந்து பெறப்படும் கல்லீரல் அழற்சி C-யினால் 10-லிருந்து 15 பேர் வரையாக மரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிட்னியில் வெளியாகும் ஆஸ்திரேலியன் என்ற செய்தித்தாள், ஆஸ்திரேலியாவில் இரத்தமேற்றுதலுக்காக பயன்படுத்தப்படும் 400 இரத்தப் பைகளில் 1 சாதுவுக்கேதுவான கல்லீரல் அழற்சி C-யினால் கறைப்பட்டது என்று அறிவிப்பு செய்கிறது. (g90 1/8)
தகுதிவாய்ந்த குருமாரின் குறைபாடு
“புராட்டஸ்டன்ட், ரோமன் கத்தோலிக்க மற்றும் யூத அதிகாரிகள் யாவரும், ஒன்றுபோல தங்களுடைய மதகுருக்களின் தரத்தையும் எண்ணிக்கையும் காக்கும் சவாலை எதிர்ப்படுகிறார்கள்,” என்பதாக நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “இந்நிலையை மேலும் சிக்கலாக்குவது, சர்ச்சின் தேவைகளுக்கும் குருமாராக விரும்பும் அநேகரின் பின்னணி மற்றும் இலக்குகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும்.” என்பதாக அநேக மதத்தலைவர்கள் காண்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமயகுரு கல்லூரி மாணவர்கள் இன்றைய குருக்களிலிருந்து “குறிப்பிடத்தக்க விதத்தில் வித்தியாசப்பட்டவர்கள்” என்பதாக சொல்லப்படுகிறது. புராட்டஸ்டன்ட் மதக் கல்லூரிகளில், இப்போது குருக்களாக நியமிக்கப்பட விரும்புகிறவர்களில் பெரும் எண்ணிக்கையினர் பெண்களே. மேலும் வெகு சிலரே கல்லூரியில் சேருவதால், இறையியல் கல்லூரிகள் தேவைப்படும் புத்திக்கூர்மையின் தரத்தைக் குறைத்துக்கொண்டு, படிப்பில் குறைந்த தரமுள்ள மாணவர்களை ஏற்றுக்கொள்ளும் அழுத்தத்தின் கீழ் இருக்கின்றன. கத்தோலிக்க அதிகாரிகள் சமயகுரு கல்லூரிகளில், இன ஒழுக்கத்தின் பேரில் ஆட்களின் மனநிலையைப் பற்றியும் “ஆண்புணர்ச்சிக்காரரான ஒரு பெரிய எண்ணிக்கையினரை குருவர்க்கம் வசீகரிப்பதைக் குறித்து“ கவலையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த அறிக்கை கூட்டுகிறது: “அவர்கள் விசுவாசம், மதப் பிரிவு, இனம் அல்லது வயது என்னவாயிருந்தாலும், இன்றைய மதகுருக்களுக்கும் அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுக்குமுள்ள ஒரு வித்தியாசம் என்னவெனில்: அவர்கள் தங்களுடைய சொந்த மத கோட்பாடுகளில் அவ்வளவு ஊன்றியிருப்பவர்களாக இல்லை.” (g89 12/8)
சுலபமான பிள்ளைப்பேறு
பெண்கள் பிள்ளைப்பேற்று சமயத்தில் உட்காரும் நிலையிலிருந்தால் சுலபமாக பிள்ளைப்பெற்றெடுக்க முடியும் என்பதாக இங்கிலாந்திலுள்ள மகப்பேறு நிபுணர்கள் சொல்கிறார்கள். சுமார் 400 பிள்ளைப்பேற்றை வைத்து செய்யப்பட்ட ஆய்வு, பிள்ளைப் பெறும் பெண்களில் பெரும்பாலானோர், சாய்ந்த நிலையைவிட நிமிர்ந்த நிலையில்தானே மேம்பட்டவிதத்தில் செயலாற்றுவதை காண்பித்திருக்கிறது. அண்டைக் கொடுக்கப்பட்ட உட்கார்ந்த நிலை பலமாகவும் திறம்பட்டவிதத்திலும் முக்கித்தள்ளுவதை அனுமதித்து, குறிப்பிடத்தக்க வகையில் பிள்ளைப்பேற்றின் இரண்டாவது கட்டத்தின் கால அளவையும், பற்றுக்குறடின் உபயோகத்தின் தேவையையும் குறைத்துவிடுகிறது. இரண்டு பளுதாங்கும் பொருட்கள் இப்பொழுது உபயோகத்தில் இருக்கின்றன, பிள்ளைப்பேற்று நாற்காலிகளும் பிள்ளைப்பேற்று திண்டுகளும். ஆய்வுக்குத் தலைமைத்தாங்கிய இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் மில்டம் கீனஸ் பொது மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் ஜேஸன் கார்டோசி திண்டின் உபயோகத்தை சிபாரிசு செய்கிறார். இது நேரடியாக மெத்தையின் மீது வைக்கப்படலாம். இது இடுப்பெலும்பு அகலமாகத் திறப்பதை அனுமதிப்பதன் மூலம் சுலபமான பிள்ளைப்பேற்றுக்கு வழிச்செய்கிறது. இச்சாதனத்தை பயன்படுத்தும் பெண்களில் 95 சதவீதம், தங்களின் அடுத்தப் பிள்ளைப்பேற்றின்போது மறுபடியும் உட்கார்ந்த நிலையை பயன்படுத்தப்போவதாகச் சொன்னார்கள். இந்த நிலைதானே பைபிளில் யாத்திராகமம் 1:16-ல் குறிப்பிடப்பட்டிருப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. (g89 12/8)
கலகத்தனமான தலைமயிர்
நியு யார்க்கும் லாஸ் அன்ஜலஸும், தங்கள் தலை அலங்காரத்தில் மற்றும் ஒரு நாகரீகப் பாணியைத் தோற்றுவித்திருக்கிறார்கள்: குட்டையாக வெட்டப்பட்ட முடியில், பல்வேறு வரைபடங்கள் வடிவில் சவரம் செய்துகொள்ளப்படுகிறது. வரைபடங்களில் நியு யார்க் நகர வான விளிம்பு, தங்கவாயில் பாலம் மற்றும் நற்பெயருள்ள கம்பெனி சின்னங்கள் அடங்கும். தி வால் ஸ்டீரிட் ஜர்னல் பிரகாரம், ஒரு திரைப்படம் இந்நாகரீகப் பாணியை மக்கள் விரும்பும்படிச் செய்ய உதவியது, ஏனென்றால் ஒரு முன்னணி பாத்திரம், தன்னுடைய தலைமயிரை இடியேறு வரைப்பட வடிவில் வெட்டியிருந்தார். இச்சிகையலங்காரம் ஏன் தெரிந்துகொள்ளப்பட்டது என்பதைக் குறித்து திரைப்பட இயக்குநர் பின்வருமாறு கூறியதாக ஜர்னல் குறிப்பிடுகிறது: “கலகத்தனமான ஓர் ஆவியைக் காண்பிக்க ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்துகொண்டிருந்தோம்.” (g89 12/8)