இன்று நட்சத்திரம் பார்த்தல்
“வெள்ளை மாளிகையிலிருந்து உவால் சாலை வரையிலும் சோதிடம் இந்தளவுக்குப் பிரபலமாயிருந்ததில்லை.” ஐக்கிய மாகாணங்களில் சோதிடம் பேரில் பொதுமக்களுக்கு இருக்கும் அக்கறையைச் சுட்டிக்காட்ட ஒரு செய்தித்தாள் அறிக்கை இவ்விதமாகத் துவங்குகிறது.
வெள்ளை மாளிகையைப் பற்றிய குறிப்பு, முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் வெளியிட்டதும் செய்திகளில் மிகுதியாக இடம்பெற்றதுமான விவரப்பதிவை வாசகரின் நினைவுக்குக் கொண்டுவருகிறது. பதிவுக்காக (For the Record) என்ற தன்னுடைய புத்தகத்தில் டொனால்டு T. ரீகன் பின்வருமாறு எழுதினார்:
“வெள்ளை மாளிகைப் பணியாளரின் தலைவராக என்னுடைய காலப்பகுதியில் ரீகன் குடும்பத்தினர் மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதற்கு கோள்கள் சாதகமான வரிசை நிலையில் இருப்பதை நிச்சயப்படுத்தும் வகையில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஒரு பெண் ஜாதகங்களை அமைத்தாள்.”
அந்த விவரப்பதிவிலிருந்து வேறு எந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றாலும், அது நவீன விஞ்ஞானம் சோதிடத்தின் கடைசி தடயத்தையும் நீக்கிவிட்டிருப்பதாகக் கருதப்படும் மேற்கத்திய உலகிலுள்ள மக்கள் சோதிடத்தில் கொண்டிருக்கும் மிகுந்த அக்கறையை வெளிப்படுத்திட நிச்சயமாகவே அதிகத்தைச் செய்தது. பின்வரும் உண்மைகளைக் கவனியுங்கள்:
◼ அமெரிக்க சோதிட கழகத்தின்படி (AFA) ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய 5,000 முழுநேர சோதிடரும், குறைந்தபட்சம் 50,000 பகுதிநேர சோதிடரும் இருக்கின்றனர். ஆண்டுதோறும், அவர்களுடைய கணிப்புக்கு பெறப்படும் தொக மொத்தமாக சுமார் 56 கோடி ரூபாய்.
◼ “ஒவ்வொரு ஆண்டும் ஃபிரான்சில் . . . ஒரு கோடிக்கும் அதிகமாக ஆட்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 30,000-ற்கும் அதிகமான சோதிடர்கள் அல்லது ஆவியுலகத் தொடர்பை ஏற்படுத்தும் மத்தியஸ்தர்களில் ஒருவரை அணுகி சோதிடம் பார்க்கின்றனர்,” என்று டூட்ஸ் லெஸ் நூவெல்ஸ் (Toutes les Nouvelles) என்ற ஒரு பாரீஸ் நகர வார இதழ் கூறுகிறது.
◼ ஐக்கிய மாகாணங்களில் வெளிவரும் 92 சதவீதம் தினசரிகளில் அல்லது 1,500-க்கும் மேற்பட்ட தினசரிகளில் ஜாதகம் வழக்கமாக இடம்பெறுகிறது. ஜெர்மனியில் வெசர் கூரியர் (Weser Kurier) என்ற ஒரு தினசரி ஒரு நாள் ஜாதகப் பத்தியை அச்சடிக்காமற்போனபோது, “அந்த நாளில் வீட்டில் இருந்துவிடுவதா, வெளியே போவதா, தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதா, அப்படியானால் எதில் என்பவற்றை அறியாதிருந்த” வாசகரில் ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.
◼ அதிகமதிகமான சோதிடர்கள் கம்ப்யூட்டர்களுக்குத் திரும்புகிறார்கள். உதாரணமாக, சுவிட்சர்லாந்து வானசாஸ்திர பிரிவு 20 பக்க ஜாதகக் குறிப்புகளடங்கிய ஒரு கம்ப்யூட்டர் அச்சுப் பிரதியை 576 ரூபாய்க்கு அளிக்கிறது. பிரபல பிரிட்டிஷ் சோதிடர் ஒவ்வொரு ஆண்டும் 20,000 தனிப்பட்ட கம்ப்யூட்டர் ஜாதகத்தை ஒவ்வொன்றும் 288 ரூபாய் என்ற விலைக்கு அனுப்புகிறார். நியு யார்க் போன்ற மாநகர்களில் ஜாதகத் தொலைபேசி இணைப்புகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சம் பேர் தொடர்புகொள்வதாக நியு யார்க் தொலைபேசி நிறுவனம் அறிக்கை செய்கிறது.
ஏன் இந்தக் கவர்ச்சி?
இந்தத் தன்னிறைவுச் சகாப்தத்தில், வாழ்க்கையின் அர்த்தம் குறித்து மேலான உட்பார்வையை அளிப்பதாக அல்லது தன்னைப் பற்றியே மேலான விதத்தில் புரிந்துகொள்வதற்கு உதவுவதாக எது வாக்களிப்பினும் அது வரவேற்கப்படும். இப்படியாக, கருத்தறிவிப்பவர் ஒருவரின்படி, மக்கள் சோதிடத்தினிடமாகக் கவர்ந்திழுக்கப்படுவதற்கு ஒரு காரணம், “எல்லாரிலும் மிக முக்கியமான ஆளைக்குறித்து, உங்களைக் குறித்து சொல்லுவதாக அது உரிமைப்பாராட்டுகிறது.”
ஆனால் சோதிடம் உண்மையிலேயே இதைச் செய்கிறதா? அதைவிட மிக முக்கியமாக, நட்சத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை உண்மையிலேயே கட்டுப்படுத்துகின்றனவா? இந்த இயற்காட்சியை நாம் நெருங்கச் சென்று பார்ப்போம். (g89 11/22)