உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 9/8 பக். 11-12
  • புகையிலையும் தணிக்கையும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புகையிலையும் தணிக்கையும்
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • லட்சக்கணக்கான உயிர்கள் புகையோடு போகின்றன
    விழித்தெழு!—1995
  • உங்கள் நாடு ஒரு குறியிலக்காக உள்ளதா?
    விழித்தெழு!—1990
  • புகையிலை ஒழுக்கமா?
    விழித்தெழு!—1992
  • புகையிலையின் ஆதரவாளர்கள் வெப்பக்காற்று பலூன்களை பறக்கவிடுகின்றனர்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 9/8 பக். 11-12

புகையிலையும் தணிக்கையும்

“தனிக்கை போதும்! பேச்சு சுயாதீனம்—விளம்பரம் செய்வதற்கான சுதந்திரம் உட்பட—நாம் காத்துக்கொள்ளவேண்டிய ஓர் உரிமையாகும். சிகரெட் விளம்பரங்களின் மீதான தடை பெரும்பான்மையான அமெரிக்கர்களால் ஆதரிக்கப்படவில்லை.”—செய்தித்தாள் விளம்பரம், ஜனவரி 1989, “தேசம் முழுவதும் தொலைபேசியின் மூலம் 1500 வயதுவந்தவர்கள் எடுத்த முடிவின்” அடிப்படையில். ஆனால் 1,500 பேர் “பெரும்பான்மையான அமெரிக்கர்களை” பிரதிநிதித்துவம் செய்கின்றனரா?

தங்களுடைய விளம்பரங்கள் மக்களைப் புகைபிடிக்கத் தூண்டுவதில்லை என்று புகையிலையை விளம்பரம் செய்பவர்கள் விவாதிக்கிறார்கள். வெவ்வேறு சின்னங்களைக் கொண்ட சிகரெட்டுகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு விற்பனையாகிறது என்பதையே அவை தீர்மானிக்கின்றன. என்றபோதிலும் புகைபிடிக்கும் பெண்களின் தற்போதைய அதிகரிப்பு அந்தக் கருத்தை விவாதத்திற்குரியதாக்குகிறது. ஆனால் புகையிலையை விளம்பரம் செய்பவர்களின் வல்லமையிலிருந்து மற்றுமொரு பொல்லாதச் செல்வாக்கு எழுகிறது.

சமீப ஆண்டுகளில், ஐ.மா.வின் புகையிலை நிறுவனங்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, அவர்களுடைய நிறுவனங்களின் பெயர்களிலுள்ள புகையிலை என்ற வார்த்தையை விட்டுவிட்டு, தங்களுக்குத் தாங்களே ஒரு குறிப்பிட்ட மதிப்பை வாங்கிக்கொண்டார்கள். இப்படியாக, ‘தி அமெரிக்கன் டொபக்கோ கம்பெனி,’ ‘அமெரிக்கன் பிரான்ட்ஸ்’ ஆனது; ‘R.J. ரேனால்ட்ஸ் டொபக்கோ கம்பெனி’ அண்மையில் ‘RJR/நபிஸ்கோ’வாக ஆனது; ‘பிரெளன் ஆண்டு வில்லியம்சன் டொபக்கோ கார்ப்பரேஷன்’ ‘பிரெளன் அண்டு வில்லியம்சன் இண்டஸ்ட்ரீஸ்’-ஆக மாறியது. ஆனால் இந்த மாற்றங்களின் விளைவுகளில் ஒன்று என்ன? இன்னும் அதிகமாக விளம்பரம் செய்வதற்கான அழுத்தம். எப்படி?

புகையிலை விளம்பரங்களை என்றுமே வெளியிடாத பத்திரிகைகள் கூட புகைபிடித்தலைப் பற்றியும் புகையிலைப் பொருட்களைப் பற்றியும் குற்றப்படுத்தும் கட்டுரைகளைப் பிரசுரிப்பதுபற்றி இரண்டு முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. உண்மைதான், புகையிலை விளம்பரத்தால் வரும் வருமானம் இழந்துபோகாமல் இருக்கலாம். ஆனால் புகையிலைப் பிரபுக்களிடம் இப்போது சொந்தமாகி உணவை அல்லது மற்ற பொருட்களை விளம்பரம் செய்யும் மற்ற நிறுவனங்களைப்பற்றி என்ன? மேலும் புகைபிடிப்பதை விரும்பத்தகாத ஒன்றாக காண்பிக்கும் கட்டுரைகளைப் பற்றியும் கூற்றுகளைப்பற்றியும் என்ன? ஒரு சாதுரியமான, கிட்டத்தட்ட ஒன்றும் புலப்படாதத் தூண்டுதலைக் கொண்ட சுய தணிக்கைக்கு இங்கே ஓர் அடிப்படை உள்ளது.

குறிப்பாக ஒரு சுவாரசியமான உதாரணம், ஜூன் 6, 1983-ன் நியுஸ்வீக் (Newsweek) இதழ், ஜூன் 6-க்கு முந்திய இதழ்களும், பிந்தியவைகளும் ஏழிலிருந்து பத்து பக்கங்கள் வரை சிகரெட் விளம்பரங்களைக் கொண்டிருந்தன. ஆனால் ஜூன் 6 நியுஸ்வீக் “புகைபிடிப்பதைப்பற்றிய வெளிப்படையான உண்மைகள்” என்ற தலைப்பைக்கொண்ட ஒரு விவாதத்திற்குரியத் தொடரை 4.3 பக்கங்களில் கொண்டிருந்தது. அந்த இதழில் எத்தனை பக்கங்களில் சிகரெட் விளம்பரங்களைக் கொண்டிருந்தது? ஒன்றிலுமே இல்லை. ஆசிரியர் வைட் கூறுகிறார்: “அந்தக் கட்டுரையைப்பற்றிய திட்டங்களை சிகரெட் நிறுவனங்கள் அறிந்தவுடன் அவர்களுடைய விளம்பரங்களை அகற்றுமாறு சொல்லிவிட்டார்கள். அந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததால் சுமார் 10 இலட்சம் டாலர்கள் வரை இந்தப் பத்திரிகை விளம்பரம் செய்வதில் இழந்திருக்கலாம்.”

பத்திரிகைகளுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரம் செய்வதிலிருந்து வரும் பணம் உயிரூற்றாகும். புகையிலைத் தொழிலைப்பற்றி குற்றம் கூறும் கட்டுரை ஒன்றை ஒரு வேளை பிரசுரித்தால், எப்படிப்பட்ட கட்டுரை பிரசுரிக்கலாமென்று பதிப்பாசிரியர்கள் மிகவும் கவனமாக யோசித்து செய்வதாக அத்தாட்சிகள் காண்பிக்கின்றன. ஆரோக்கியத்தைப்பற்றி எழுதும் எழுத்தாளர் ஒருவர் கூறியதாவது: “உதாரணமாக இருதய நோய்க்குக் காரணமான காரியங்களின் பட்டியலில் நான் புகைபிடிப்பதை போட்டிருந்தால், என் பதிப்பாசிரியர் அதைப் பட்டியலின் கடைசியில் போடுவார் அல்லது அறவே விட்டுவிடுவார்.” அதாவது முதுமொழி சொல்வது போல், “யார் ராகம் மீட்டுபவனுக்குக் கூலி தருகிறானோ, அவனே என்ன ராகம் மீட்டவேண்டும் என்றும் சொல்கிறான்.” சுய-தணிக்கை இந்நாளின் வழக்கமாகிவிட்டது.

அக்கறைக்குரியதாக தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) அறிவிப்பதாவது, கடந்த ஆறு வருடத்திற்கும் மேலான காலமாக புகையிலை விளம்பரங்களைக் கொண்ட நீக்ரோக்களுக்காக வெளிவரும் இரண்டு பத்திரிகைகளில் ஒன்று கூட புகைபிடிப்பது பற்றியும் ஆரோக்கியத்தைப்பற்றியும் நேரிடையாக சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையையும் பிரசுரிக்கவில்லை. வெறுமென தற்செயலாக நடந்ததா? சந்தேகமின்றி, புகையிலைப்பொருட்களை விளம்பரம் செய்யும் பத்திரிகைகள் தங்களுக்கு அன்னமிட்ட கையைக் கடிக்க முடிவதில்லை. ஆகவே புகைபிடிப்பதினால் வரும் ஆபத்துகளை எடுத்துக்கூறத் தவறுகிறார்கள்.

புகையிலை, புகைபிடிப்பது மற்றும் விளம்பரம் செய்வது என்ற பொருள்கொண்ட இந்த விமர்சனக் கட்டுரை எவ்வாறு பல முக்கியமான காரியங்கள் உட்பட்டிருக்கிறது என்பதை நான் உணர உதவுகிறது. புகையிலை சாகுபடி செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை உட்பட்டிருக்கிறது. புகையிலை பிரபுக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அவர்களது பெருத்த இலாபங்கள் உட்பட்டிருக்கின்றன. அரசாங்கங்களுக்கு அவர்களது வரி நிதி பணயமாக இருக்கிறது. மேலும் இலட்சக்கணக்கான புகைபிடிப்பவர்களுக்கு அவர்களுடைய ஆரோக்கியமும் அவர்களுடைய உயிரும் ஆபத்திலிருக்கின்றன.

நீங்கள் புகைபிடிப்பவரானாலும் அல்லது புகைபிடிக்க ஆரம்பிக்கலாமென்று யோசிக்கக்கூடியவரானாலும், தெரிவு செய்வது உங்களுடையது. ஐ.மா.வின் புகையிலை அதிபர்கள் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புவதுபோல, புகைபிடிப்பது உங்களுக்குரிய சட்டப்பூர்வமான உரிமையாகும். ஆனால் நுரையீரல் அல்லது தொண்டை சம்பந்தப்பட்ட புற்றுநோய், இருதய இரத்த ஓட்டக் குழாய் நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், எம்ஃபிஸீமா, பர்ஜர்ஸின் நோய் (பக்கம் 9-லுள்ள பெட்டியைப் பாருங்கள்), மேலும் வேறு பல மரணம் தழுவிய நோய்களினால் மரிக்கக்கூடிய ஆபத்துங்கூட உங்களுடைய சட்டப்பூர்வமான உரிமையாகும் என்பதை நினைவில் வையுங்கள். மறுபட்சத்தில், நீங்கள் புகைபிடிப்பதை விட்டுவிட விரும்பினால், நீங்கள் அதை எப்படி செய்யலாம்? என்ன தேவைப்படுகிறது? செயல்நோக்கம்! (g89 7/8)

[பக்கம் 12-ன் படம்]

ஐ.மா.தலைமை அறுவைசிகிச்சை மருத்துவர்கூடப் புகையிலையைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துகளைக் குறித்து இடைவிடாது எச்சரித்துவந்திருக்கிறார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்