மரணத்தை வியாபாரம் செய்தல்
இந்த உலகம் ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் கோடி டாலர்களை போர்த்தளவாடங்களுக்காக செலவழிக்கும்போது:
80,00,00,000
ஜனங்கள் முற்றிலும் வறுமையில் வாழ்கின்றனர்
77,00,00,000
பேர் சுறுசுறுப்பாக வேலை செய்து வாழ்வதற்கு போதிய உணவு இல்லாமல் இருக்கின்றனர்
10,00,00,000
பேர் தங்கும் இடமின்றி இருக்கின்றனர்
1,30,00,00,000
பேர் சுத்தமான குடிநீர் இன்றி இருக்கின்றனர்
1,40,00,000
பிள்ளைகள் பசியின் விளைவுகளினால் ஒவ்வொரு வருடமும் மரிக்கின்றனர்
அவர்கள் மரண வியாபாரிகள் என்றும், நாகரீகத்திற்கு கல்லறைத் தோண்டுபவர்கள் என்றும், சமுதாயத்தின் உடலிலே புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகின்றனர். யார் இவர்கள்? உலகின் போர் ஆயுத வியாபாரிகள். ஏன்?
முந்தைய காலங்களில் மனிதனுக்கு-மனிதன் செய்த போர்களில் போர்க்களங்களில் கொலை செய்வதற்கு படைகளுக்கு வாள்கள், ஈட்டிகள், கோடரிகள் ஆகியவற்றை இவர்கள் தயாரித்து கொடுத்தனர். இந்த நூற்றாண்டில் அவர்கள் இரண்டு உலக யுத்தங்களின் மூலம் கோடிக்கணக்கான ஆட்களைக் கொல்லவும், அநேக கோடி டாலர் மதிப்புள்ள நகரங்கள், வீடுகள், பிற சொத்துக்கள் போன்ற பொருளாதார வளங்களை அழிப்பதற்கும் துப்பாக்கிகள், குண்டுகள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள், ஆகாய விமானங்கள், நச்சுவாயு போன்ற போரயுதங்களை உருவாக்கி தந்திருக்கின்றனர். இரண்டாம் உலக யுத்த முடிவு முதல் செய்யப்பட்ட 120 போர்களை அவர்கள் தூண்டி நடத்தியிருக்கின்றனர்.
உலகத்தின் பல பாகங்களில் நடைபெற்று வரும் இரத்தப் போர்களுக்குத் தொடர்ந்து தூண்டுதலும் ஆதரவும் அவர்கள் அளித்து வருகின்றனர். அவர்களுடைய போர்க் கருவிகளை மிகவும் திறம்பட்ட வகையில் உபயோகிக்க அவர்கள் முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் படைகளைப் பயிற்றுவிக்கின்றனர். மனிதக் குடும்பத்தை பல தடவைகள் அழிக்கவும், பூமியை குடியிருப்பாரற்ற கோளமாக மாற்றவும் சக்திகொண்ட அணு ஆயுதங்களை உலக இராணுவ அதிகாரங்கள் பெருமளவில் சேர்த்து வைக்கவும் அவர்கள் உதவியிருக்கின்றனர். அவர்கள் பழிபாவங்களுக்குச் சிறிதேனும் அஞ்சாதவர்களாய் தோன்றுகின்றனர். அவர்களுடைய கொள்கை: “உங்கள் மரணம்—எங்கள் இலாபம்” என்பதாக இருக்கக்கூடும்.
போராயுத வியாபாரத்தை போன்று வேறு எந்த ஒரு வியாபாரமும் மனித குடும்பத்தை அவ்வளவு ஆழமாக பாதித்ததில்லை. அத்தாட்சிகள் தெளிவாக இருக்கின்றன. அடுத்த கட்டுரை சில கலங்கச் செய்யும் உண்மைகளை வெளிப்படுத்தும். (g89 6/8)