உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 8/8 பக். 31
  • பன்றி எப்பொழுது பன்றி அல்ல?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பன்றி எப்பொழுது பன்றி அல்ல?
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • கேப்பிபெரே படைப்பின் கோளாறா அல்லது அதிசயமா?
    விழித்தெழு!—1993
  • பாடம் 2
    என் பைபிள் பாடங்கள்
  • உடல் பருமனோடு போராட்டம்—முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டா?
    விழித்தெழு!—2004
  • சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா?
    விழித்தெழு!—2006
விழித்தெழு!—1990
g90 8/8 பக். 31

பன்றி எப்பொழுது பன்றி அல்ல?

கோலிசிஸ்டோகினின் எப்போது போதும் என்கிறதோ அப்போது என்பது பதில்! அது வாய்க்கு அடங்காத மிகப்பெரிய வார்த்தையானால், CCK என்று சொல்லிப் பாருங்கள். அது பன்றிகள் சாப்பிடும்போது அவை உற்பத்தி செய்யும் ஓர் இயக்குநீராகும். அவற்றின் வயிறு நிறைந்தவுடன் ‘சாப்பாடு முடிந்தது, திரும்புங்கள்’ என்று CCK மூளைக்கு அறிவிக்கிறது. மாடுகள், ஆடுகள் மற்றும் இதர பண்ணை விலங்குகள் தாங்கள் பாதிக்கப்படும்வரை சாப்பிடும். ஆனால் அதிகம் தூஷிக்கப்பட்ட பன்றிகளோ அப்படி இல்லை! பன்றி வளர்ப்பவர்கள் அவர்கள் விலைகளையும் பணப்பைகளையும் பெருகப் பண்ணுவதற்கு ஒரு தடையாக இதைக் கருதுகிறார்கள்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் எழுதியுள்ளபடி அவர்கள் அதைக்குறித்து சில நடவடிக்கையும் எடுத்துள்ளனர்: “ஒரு சத்து நீரை ஊசிமூலம் பன்றிகளுக்குச் செலுத்தி இந்த இயக்குநீரை தடைசெய்து அவற்றின் பசியை அடங்காத ஒன்றாக மாற்றி, முடிவாக சில மெய்யானப் பன்றிகளை உருவாக்க முடியுமென்று, ஒரு வேளாண்மை துறை ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று மாதங்களுக்குள், ஊசிபோடப்பட்ட மிருகங்கள் தொழுவத்திலுள்ள தங்கள் ஊசி போடப்படாத நண்பர்களைப் பார்க்கிலும் சராசரி 22 பவுண்டுகள் அதிக சோளத்தையும், சோய அவரை உணவையும் உட்கொண்டன; மேலும் ஊசிபோடப்படாத தங்கள் கூட்டாளிகளைவிட 11 பவுண்டு அதிக பன்றி இறைச்சியைக் கொண்டிருந்தன.”

“எல்லாப் பிராணிகளும் வெவ்வேறுபட்ட அளவுகளில் CCK-யை உற்பத்தி செய்கின்றன” என்று நமக்குச் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு அது உண்டு; மேலும் கட்டுக்கடங்காத பசியை கட்டுப்படுத்த இதை அதிகப்படுத்த முடியுமாவென்று ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. நொறுவல் சாப்பிடுவார்கள் “மிகவும் குறைவான அளவில்” CCK-யையும் திருப்தியடையும் தன்மையையும் காட்டுகின்றன” என்று அந்த அறிக்கை சொல்லுகிறது. ஆனால் இந்தக் “குறைக்கப்பட்ட CCK ஒழுங்கற்ற உணவருந்தும் பழக்கவழக்கங்களினால் ஏற்படுகிறதேயல்லாமல் அதற்கு காரணமாக ஆவதில்லை,” என்று அது மேலுமாக கூறுகிறது. மனிதர்களில், ஹைபோதாலமஸ் சுரப்பியிலுள்ள இரண்டு பகுதிகள், திருப்தியடையும் தன்மை மற்றும் சாப்பிட வேண்டுமென்ற தன்மைக்கான மையங்கள், சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதாக எண்ணப்படுகிறது. இந்தக் கட்டுப்படுத்தும் மையங்கள் ஒழுங்காக செயல்படுவது, நீண்ட நாட்களாக அதிகம் சாப்பிடுவதனால் பாதிக்கப்படலாம். இதற்கான பரிகாரம் கலாத்தியர் 5:22, 23-ல் உள்ளது: “ஆவியின் கனியோ . . . இச்சையடக்கம்.” (g89 5⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்