கோலியாத் கலாச்சாரப் பின்னணி யுடைய ஓர் இராட்சதனா?
பெலிஸ்த இராட்சதனான கோலியாத்திடம் சண்டைக்குச் சென்ற இளம் தாவீதைப் பற்றிய அந்தச் சரித்திர பதிவை கேள்விப்படாதவர்கள் யார்? (1 சாமுவேல் 17:23–51) பைபிள் காலக்கணக்குப்படி, இந்தச் சண்டை பொ.ச.மு. 1,100 போல் நடந்தது. ஆனால் அந்நாட்களில் பெலிஸ்தர் கலாச்சாரத்தைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
தாவீதின் நாட்களில் பெலிஸ்தரின் ஒரு பெரிய பட்டணமாயிருந்த பூர்வ எக்ரான் கடந்த ஏழு ஆண்டுகளில் செய்யப்பட்ட நில அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. பெலிஸ்தர்கள் சிறந்த கட்டிட கலைஞர்கள் என்றும், நகரத்தைத் திட்டமிடுவதில் முன்னேற்றமான திட்டங்களைக் கொண்டிருந்தனர் என்றும் அந்த ஆய்வு காண்பிக்கிறது. உதாரணமாக, 1988-ன் கோடக்காலத்தின்போது 2,300 சதுர அடி கூட்டுக்கட்டிடம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது. இதுதான் பெலிஸ்தர் சிறந்து விளங்கிய காலப்பகுதியில் (பொ.ச.மு 12-வது நூற்றாண்டு முதல் 10-வது நூற்றாண்டு வரை) அறியப்பட்டிருக்கும் கட்டிடமாக இருக்கிறது. 50 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலஅகழ்வாய்வுகள் வெளிப்படுத்துவது என்னவென்றால், இயற்கையாக ஓடும் நீரை பயன்படுத்திக்கொள்வதற்காக, நகரம் படியடுக்குத் தளவரிசை முறையில் அமைக்கப்பட்டிருப்பதாகும். “அது மிகவும் உயர்தரமான முறையில் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தது,” என்று நில அகழ்வாய்வாளர் செமெளர் கிட்டின் வியந்து கூறுகிறார்.
அந்த நில அகழ்வாய்வுகளில் பறவைகள், மீன்கள் மற்றும் வடிவியல் முறையில் பல வடிவங்கள் கொண்ட சிறந்த மட்பாண்டங்கள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. மேலும் நான்கு கொம்புகளுடைய மத பலிபீடங்களும், அநேகமாய் ஒலிவ எண்ணெய் வைப்பதற்கான ஜாடிகளும் உலோகங்களால் செய்யப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அனைத்து காரியங்களும் பூர்வ பெலிஸ்தரின் முன்னேறிய கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. கிட்டின் குறிப்பிட்டார்: “பெலிஸ்தர் உலகின் இந்தப் பகுதியில் ஒரு புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். மொத்தத்தில் அவர்கள் ஒரு பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறையில் வல்லமைவாய்ந்த தேசமாகவும் ஆனார்கள்.” (g89 2/22)
[பக்கம் 31-ன் படம்]
பூர்வீக எக்ரான் என்ற இடத்தில் அண்மையில் பெலிஸ்தரின் இந்த விதமான மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன