பைபிளின் கருத்து
வாழ்க்கையின் நோக்கமென்ன?
புகழையும் செல்வத்தையும் எய்தப் பெற்ற அநேகர், தங்களுடைய “வெற்றி” மகிழ்ச்சிக்கு உத்தரவாதமளிப்பதில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று இல்லாதிருக்கிறது. ஆனால் என்ன?
நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பது பற்றி கவலைப்படுவதற்கு நேரமில்லாதபடி பிழைப்புக்காக அல்லது தங்களுக்கு ஒரு பெயரை உண்டுபண்ணுவதற்காக வேலை செய்து கொண்டிருப்பவர்கள், தாங்கள் விரும்பி உழைத்த இலக்கை அடைந்தப் பின்பு, ஓர் அதிர்ச்சியைப் பெறக்கூடும். புதிதாகக் கிடைக்கப்பெற்ற செல்வாக்கின் காரணமாக, அது ஓர் உயர்ந்த நோக்கத்தில் குறைவுபட்டால் வாழ்க்கை திடீரென்று திசைத் தெரியாமல் போனதாக அல்லது சோர்வு தருகிறதாக மாறிவிடக்கூடும். இந்தக் குறிப்பு செல்வந்தனான அரசன் சாலொமோனின் மனதில் ஆழமாகப் பதிந்தது: “என் கைகள் செய்த சகல வேலைகளையும் நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:11.
திறமையும் சுறுசுறுப்பும் வாய்ந்த இந்த அரசனுக்குச் சிறப்பளித்த திட்டங்களில் சிறிதளவைச் சாதித்தால்கூட நம்மில் அநேகர் மகிழ்ச்சிக் கொள்வோம். (பிரசங்கி 2:4-9) ஆனால் கொலம்பியா பல்கலைக்கழக (அ.ஐ.மா) ஆராய்ச்சியாளர்கள்படி இன்றும்கூட நம்முடைய தனிப்பட்ட வெற்றியானது “அனைத்தையும் உள்ளிட்ட மகிழ்ச்சியோடு பலமாக சம்பந்தப்பட்டில்லை.” எது உதவி செய்கிறது? “ஒருவரை வழிநடத்திச் செல்லும் மதிப்பீடுகளில் நம்பிக்கை, வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்ற ஒரு நம்பிக்கை” என்கிறது அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவு. அநேகர் இப்படிப்பட்ட அர்த்தத்தைத் தேடும் முயற்சியைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது பற்றி சிந்திப்பது வருந்தத்தக்கதாகும்.
1987 சுற்றாய்வின்படி, தற்கொலைச் சார்ந்த எண்ணங்கள், உயர்ந்த சாதனை புரியும் மாணவர்களில் மூன்றில் ஒருவரை அலைக்கழித்தது. ஏன்? மேலீடாகத் தோன்றுகிறபடி இந்த வெற்றிகரமான மாணவர் தலைவர்கள் சாதனைப் புரிய வற்புறுத்தப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக அல்லது தனிமையாக, தனிப்பட்ட விதத்தில் பயனற்றவர்களாக உணர்ந்தார்கள். ஆம், நாம் நம்மில் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பதற்கு, நமக்கு சுய மதிப்புணர்வு—அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை, வாழ்க்கையில் உன்னதமான ஓர் இலக்கு அல்லது வாழ்வதற்கு வெறுமென ஒரு நல்ல காரணம் அவசியமாயிருக்கிறது.
நல்ல காரணத்துக்காக நாம் இங்கே இருக்கிறோம்
உயிர்வாழ்வு ஒரு தற்செயல் நிகழ்ச்சி அல்ல என்பதற்கு அத்தாட்சிக்காக நீங்கள் தொலைவிடத்தில் பார்க்க வேண்டியதில்லை. அடிக்கடி அடிபடும் பொருட்களைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்—ஓர் இலையின் சிக்கலான திட்ட அமைப்பு, குழந்தைப் பிறப்பு, பிரமாண்டமான பிரபஞ்சம். எவரோ ஒருவர் ஒரு காரணத்துக்காக இந்தக் காரியங்களை வடிவமைத்திருக்கிறார் என்ற எதிர்பார்க்கத்தக்க முடிவு தவிர்க்கமுடியாததாகும். “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள் உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே . . . தொளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:20.
ஆகவே “நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?” என்பதாக ஆட்கள் கேட்கிறார்கள். கானடா தேசத்தைச் சேர்ந்த மருத்துவர் வில்லியம் ஆஸ்லர் பின்வருமாறு சொன்னபோது சரியாகவே ஊகம் செய்தார்: “நாம் இங்கே இருப்பது வாழ்க்கைக்கு நம்மாலானதைக் கூட்டுவதற்காகவேயன்றி அதிலிருந்து நமக்கு முடிந்ததைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல.” (கொட்டையெழுத்துக்கள் எங்களுடையவை.) 25 அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் பதிலளிக்கும்படியாகக் கேட்கப்பட்டபோது, ஒரு கிறிஸ்தவன் சொன்னதாவது: “பூமியை பரதீஸாக்குவதற்காகவே நாம் இங்கே இருக்கிறோம் என்பதாகச் சொல்லாம் என்று நினைக்கிறேன்.”a (ஆதியாகமம் 1:28; 2:8, 15) ஆனால், பரதீஸாக்கவா? அப்பேர்ப்பட்ட ஒரு பெரும்பணியை நாம் செய்ய வல்லவர்களா?
வெறுமென ஆரம்பித்துதானே இருக்கிறோம்!
நம்முடைய தற்போதைய வாழ்நாட் காலம் நாம் செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருப்பதில் மேலீடாகக் கீறிச் செல்வதற்குத்தானே நம்மை அனுமதிக்கிறது. உங்கள் மூளையிலுள்ள 100 பில்லியன் நரம்பு அணுக்களையும் மற்ற உயிரணுக்களையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இந்த உயிரணுக்கள் ஒன்றோடொன்று உண்டுபண்ணக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கை 10800 என்பதாக மதிப்பிடப்படுகிறது. இது சர்வலோகத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையில் 10700 மடங்காக இருப்பது மனதை தடுமாறச் செய்கிறது, சாவகாசமாக நீங்கள் பிரயாணம் செய்து, உங்கள் கருத்தைத் தூண்டும் பாடங்களைப் படிப்பதற்கு முடிவில்லாக் காலத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு விருப்பமான தனித்திறமைகளை அல்லது கைத்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிந்தால், நீங்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும், செய்ய முடியும் என்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள். மனித மேம்பாட்டுக்காக நம் ஒவ்வொருவரிலும் பயன்படுத்தப்படாது கிடக்கும் வாய்ப்புகள் எத்தனை?
ஆனால் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வரையறையில்லாத நேரமும் சொத்துக்களும் இருக்குமானால், சலிப்படைவதை நீங்கள் தவிர்க்க முடியுமா? ஆம்—தன் மனநிறைவு விரைவில் சலிப்பூட்டுகிறது என்பதை கடைசியாக சாலொமோன் உணர்ந்ததுபோல உணருவதன் மூலம்!
சாலொமோனின் பரிகாரம்? “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று அவன் அறிவுரை கூறுகிறான். மற்றபடி, “எனக்குப் பிரியமானவைகளல்ல” என்பதாக நீங்கள் சொல்லக்கூடிய நாட்கள் வந்துவிடும். அதேவிதமாகவே இயேசு சொன்னார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே சந்தோஷம்.”—பிரசங்கி 12:1, 13; அப்போஸ்தலர் 20:35.
மனநிறைவுக்குத் திறவுகோல்
ஆகவே, முதலாவதாக “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவா, NW] அன்புகூரவும்,” இரண்டாவதாக “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூரவும்” வேண்டும் என்ற முதல் முக்கியத்துவம் பெற வேண்டிய இரண்டு மிகப் பெரிய காரியங்கள் வாழ்க்கையில் இருப்பதாக இயேசு காண்பித்தார். மிருக மற்றும் தாவர வாழ்க்கை ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பற்றி நாம் அறிந்திருக்கும் அனைத்துக் காரியங்களோடும் இது பொருந்துகிறது. இந்தத் தாழ்ந்த உயிர் வகைகள் ஒன்றோடொன்று இவ்வளவாகச் சார்ந்திருக்கும்படியாக உண்டாக்கப்பட்டபடியால், பேரளவான ஆற்றல் வளத்தோடுகூடிய மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் கூடி உழைத்து ஜீவ ஊற்றாகிய யெகோவாவை சேவிக்க வேண்டும் என்பது அறிவுள்ள காரியமாக இருக்கிறதல்லவா?—மத்தேயு 22:37-39; சங்கீதம் 36:9.
மனிதர்களோடும் கடவுளோடும் நம்முடைய உறவைப் பிணைக்கும் முடிவில்லாத அன்புள்ள சாதனைகள், நம்முடைய வாழ்க்கையை என்றுமாக அர்த்தமுள்ளதாக வைத்திருக்கும். இந்த மகிழ்ச்சியான கொடுத்தல்தானே இப்பொழுதும் வரப்போகிற “புதிய பூமியிலும்” மனநிறைவளிக்கும் வாழ்க்கைக்குத் திறவுகோலாகும்.—ஏசாயா 65:17, 18. (g89 2⁄8)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்துள்ள நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 28-ன் பெட்டி]
நித்திய ஜீவன் —வரமா அல்லது சாபமா?
“நித்திய ஜீவன் மனிதவர்க்கத்துக்கு வரமாக இருக்குமா அல்லது சாபமாக இருக்குமா?” என்பதாக இயற்பியல் வல்லுநர்—ஆசிரியர் டாக்டர் ராபர்ட் ஜாஸ்ட்ரோவிடம் கேட்கப்பட்டது. அவருடைய பதில்? “அறிய ஆர்வமுள்ள மனங்களையும் கற்றறிவதற்கு முடிவில்லா பசியார்வத்தையுமுடைய ஆட்களுக்கு அது ஆசீர்வாதமாக இருக்கும். அறிவை கிரகித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு முடிவில்லா காலமிருக்கிறது என்ற எண்ணம்தானே அவர்களுக்கு வெகுவாக ஆறுதலளிப்பதாக இருக்கும். ஆனால் கற்றுக்கொள்ள இருப்பதெல்லாம் கற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்து, மனங்களை மூடிக் கொண்டுவிட்டிருக்கும் மற்றவர்களுக்கு அது மிக மோசமான சாபமாக இருக்கும். அவர்களுக்குத் தங்கள் நேரத்தை நிரப்புவதற்கு எந்த வழியுமிருக்காது.”—“டைம்ஸ்-அட்வோகேட்,” எஸ்கான்டிடோ, கலிஃபோர்னியா, பிப்ரவரி 19, 1984.
[பக்கம் 27-ன் படம்]
மனித மூளை நமக்கு நித்தியகாலமாக உழைக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது