கண் “கம்ப்யூட்டர் விஞ்ஞானியின் பொறாமைக்குரியது”
வித்திரை என்பது விழியின் பின்புறத்தில் பொருந்தியிருக்கும் ஒரு மெல்லிய தோலாகும். ஒரு தாளைப் போன்று மெல்லியதாக இருக்கும் இது பல் வேறு அடுக்குகளில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான நரம்பு அணுக்களைக் கொண்டதாயிருக்கிறது. “விழித்திரையானது, மனித உடலிலுள்ள மிகவும் குறிப்பிடத்தக்க திசுக்களில் ஒன்றாக இருக்கிறது” என்கிறது உயிருள்ள உடல் (The Living Body) என்ற புத்தகம். இது ஒவ்வொரு விநாடியும் சுமார் ஆயிரம் கோடி கணக்குகளைப் போடுகின்ற, கம்ப்யூட்டர் விஞ்ஞானியின் பொறாமைக்குரிய ஒன்றாகும்” என்று மிருகங்கள் எவ்விதமாக பார்க்கின்றன (How Animals See) என்ற தன்னுடைய புத்தகத்தில் சான்ட்ரா சின்க்ளேர் குறிப்பிடுகிறார்.
ஒரு காமிரா, ஒளி உணர் பிலிமின் மீது பொருளின் பிம்பத்தை விழச் செய்வது போலவே நமது கண்ணும் நாம் பார்க்கிற பொருளின் பிம்பத்தை விழித்திரையின் மீது விழச் செய்கிறது. என்றபோதிலும் டாக்டர் மில்லர் விளக்குகிறவிதமாகவே, காமிராவின் ஒளிஉணர் பிலிமோடு ஒப்பிட விழித்திரையின் இழைந்து இயங்கும் கூர்மையான உணர்ச்சி திறம் ஈடுஇணையற்றதாக உள்ளது. அதே “பிலிமைக்” கொண்டு நிலா வெளிச்சத்திலோ சூரிய வெளிச்சத்திலோ 30,000 மடங்கு அதிகமாக முனைப்பானதை நாம் காணமுடியும். மேலுமாக, பொருளின் ஒரு பகுதி ஒளியில் தோய்ந்தும் மற்றவை நிழலிலும் இருக்கையில் அப்பொருளின் தெளிவான விவரங்களை விழித்திரையினால் பகுத்துணர முடிகிறது. “காமிராவினால் இதைச் செய்ய முடியாது. ஏனென்றால் பிலிமை சரியான அளவு ஒளியின் செயலுக்குட்படுத்த குறுகிய மாறுநிலை ஒளி அளவு அவசியமாயிருக்கிறது” என்பதாக மருத்துவ உடலியல் பாடபுத்தகத்தில் (Textbook of Medical Physiology) பேராசிரியர் கைட்டன் விளக்குகிறார். இதன் காரணமாக புகைப் படநிபுணர்களுக்கு, ஒளியை தோன்ற செய்து மறைப்பதற்கு ஓர் அமைப்பு (flash) அவசியமாகும்.
“விழித்திரையின் இழைந்து இயங்கும் கூர்மையான உணர்ச்சிக்கு” ஓரளவு காரணமாயிருப்பது 1,250 இலட்சம் உருளைகளாகும். இவை கூர்மையான உணர்ச்சி படைத்தவையாய் இருப்பதால் இரவில் குறைவான வெளிச்சத்திலும் பார்வை கூடிய காரியமாக இருக்கிறது. மேலும் பிரகாசமான வெளிச்சத்துக்குப் பிரதிபலித்து தெளிவான நிறப் பார்வையை சாத்தியமாக்கும் 55 இலட்சம் கூம்புகள் உள்ளன. சில கூம்புகள் சிவப்பு வெளிச்சத்தை உணரக்கூடியதாக, மற்றவை பச்சை நிறத்தையும் இன்னும் மற்றவை நீல நிறத்தையும் உணரக்கூடியவையாக உள்ளன. அவை அனைத்தும் இணைந்து பிரதிவினைச் செய்வதால் உங்களால் இந்தப் பத்திரிகையிலுள்ள எல்லா நிறங்களையும் பார்க்க முடிகிறது. இந்த எல்லா மூன்று வகையான கூம்புகளுக்கும் சம அளவில் உணர்ச்சியூட்டப்படுகையில் நீங்கள் பார்க்கும் நிறம் தூய வெள்ளையாகும்.
அநேக மிருகங்கள் ஒரு சில நிறங்களையே காணக்கூடியவையாகவும் பல மிருகங்கள் நிறங்களையே காண முடியாதவையாகவும் உள்ளன. “நிறத்தைக் காணமுடிவது, வாழ்க்கையின் சந்தோஷங்களை வெகுவாக கூட்டுகிறது” என்கிறார் அறுவை மருத்துவர் ரென்டில் ஷார்ட். அவர் மேலுமாகச் சொல்வது: “உயிரோடிருக்க முழுமையாக இன்றியமையாதாக இல்லாத உடல் உறுப்புகளில் கண்ணை மிகவும் அதிசயமானதாக கருதலாம்.”
“அற்புதமான கூட்டு முயற்சி”
ஒரு காமிரா பிலிமில் விழுவது போலவே, ஒரு பொருளின் பிம்பம் விழித்திரையின் மீது தலைக்கீழாக விழுகிறது. “உலகம் நமக்கு ஏன் தலைக் கீழாக தெரிவதில்லை?” என்று மருத்துவர் ஷார்ட் கேட்கிறார். “ஏனென்றால், பிம்பத்தை மறுபக்கமாக திருப்பும் பழக்கத்தை மூளை வளர்த்துக் கொண்டிருக்கிறது” என்பதாக அவர் விளக்கம் தருகிறார்.
பிம்பத்தை மறுபக்கமாக திருப்ப விசேஷமான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞான பரிசோதனைகளில் இப்படிப்பட்ட கண்ணாடிகளை அணிந்துக் கொண்டவர்கள், அனைத்தையும் தலைகீழாகப் பார்த்தார்கள். ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஆச்சரியமான ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர்கள் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தார்கள்! “உங்கள் கண்ணும் உங்கள் மூளையும் சேர்ந்து செய்யும் அற்புதமான கூட்டு முயற்சி அநேக வழிகளில் தெளிவாக தெரிகிறது” என்று உடல் புத்தகம் (The Body Book) குறிப்பிடுகிறது.
உங்கள் கண் இந்த வரியை கடந்து நகரும் போது, கூம்புகள் கருப்பு மையை வெள்ளைத் தாளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. என்றபோதிலும் உங்கள் விழித்திரையினால் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட எழுத்துக்களை உணர்ந்து கொள்ள இயலாது. எழுத்துக்களின் ஒரு தொகுப்புக்கு அர்த்தஞ் சொல்ல மூளையின் மற்றொருப் பகுதியில் நாம் கற்றுக் கொள்கிறோம். தகவலை இடமாற்றம் செய்வது அவசியமாகும்.
உங்கள் தலையின் பின்பாகத்தில் அமைந்திருக்கும் மூளையின் பகுதிக்கு விழித்திரை இலட்சக்கணக்கான நரம்பு அணுக்களின் மூலமாக குழுஉக் குறியில் செய்திகளை அனுப்புகிறது. “விழித்திரையிலிருந்து சிறு மூளை கார்டெக்ஸ் வரையுள்ள புடைப்புகள் வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்டும் ஒழுங்காகவும் உள்ளன. . . . விழித்திரையின் ஒவ்வொரு பகுதியின் மீதும் சிறிதளவு வெளிச்சம் வீசப்பட்டால், [மூளையிலுள்ள] அதற்கொப்பான பார்வை பகுதி பிரதிபலிக்கும்” என்பதாக மூளை (The Brain) என்ற புத்தகம் விளக்கம் தருகிறது. (g88 6⁄8)
[பக்கம் 7-ன் படங்கள்]
ஒரு காமிராவைப் போலில்லாமல், விழித்திரைக்கு மிகப் பரந்த அளவில் ஒளியை உணருகின்ற திறமையிருப்பதால், கண், ஒளியை தோன்றச் செய்து மறைக்கும் கருவியை நம்பியில்லை
[பக்கம் 8-ன் படம்]
சிவப்பு
நீலம்
பச்சை
உங்கள் விழித்திரை, கூம்புகள் என்றழைக்கப்படும் இலட்சக்கணக்கான நரம்பு அணுக்களைக் கொண்டிருக்கின்றன. இவை பச்சை, சிவப்பு அல்லது நீல நிறங்களை உணரக்கூடியனவாக உள்ளன