விலங்கின உலகில் பயனுள்ள கூட்டாளிகள்
ஷேக்ஸ்பியர் எழுதினார்: “விலங்கினங்கள் தங்கள் நண்பர்களை அறிந்துகொள்ள இயற்கை கற்பிக்கிறது.” ஆம், விலங்கின உலகில் அநேக பயனுள்ள கூட்டாளிகள் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காளைக்கொத்திப் பறவை (oxpecker).
ஏறக்குறைய எட்டு அங்குல நீளமுடைய இப்பறவை அகன்றதும் கனத்ததுமான மஞ்சள் அல்லது சிவப்பு நிற அலகும், குட்டையான கால்களும், உறுதியான வளைந்த நகங்களும் கொண்டது. சாதாரணமா இது நீர்யானைகள் மீதும் வீட்டு விலங்குகள் மீதும் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏன்? இந்தக் காளைக்கொத்திப் பறவை தன்னிடம் உபசாரமாக இருப்பவரின் தோலின் ஒவ்வொரு மடிப்பையும் சுருக்கத்தையும் பரிசோதித்து, அவற்றிலிருந்து கொடிய உண்ணிகளைப் போக்கிடுவதில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறது. என்றபோதிலும் அதற்குரிய பலன் இல்லாமல் இல்லை, ஏனென்றால் இந்த உண்ணிகள்தான் காளைக்கொத்திகளின் முக்கிய உணவு.
காளைக்கொத்திகளின் சேவையிலிருந்து மனிதனும் மிருகங்களுமாகிய இருவருமே நன்மையடைகின்றனர். “தென் ஆப்பிரிக்க வேட்டுவ இனத்தவரும் பழம்பாணியில் வேளாண்மை செய்யும் உழவர்களும் தங்களுடைய விலங்குகளிலிருந்து உண்ணிகளை அப்புறப்படுத்தும் [காளைக்கொத்திகளை] வெகுவாக மதிக்கின்றனர்,” என்று பறவையியல் நூலர் ஆலிவர் ஆஸ்டின் (சிறியவர்) குறிப்பிடுகிறார். என்றபோதிலும், ஆப்பிரிக்க வேட்டைக்காரருக்கு இந்தக் காளைக்கொத்திகள் தொல்லையாக இருக்கின்றன. எப்படி? வேட்டைக்காரன் ஒருவன் வேட்டையாடுவதற்கு பதுங்கிக்கொண்டு மெதுவாக நெருங்கிவருவதைக் கற்பனைசெய்து பாருங்கள். விழிப்பாயிருக்கும் அந்தக் காவற்காரன்—காளைக்கொத்தி—திடீரென்று மேலே பறக்க ஆரம்பிக்கிறான்! குழப்பத்திலிருப்பதாய்க் கரையும் காளைக்கொத்தி ஆபத்து காத்திருக்கிறது என்று தன்னுடைய கூட்டாளியை எச்சரிக்கிறது. தான் வேட்டையாட இருந்த பறவை பறந்துவிடுகிறது!
மலர் விலங்கும் கூனிறாலும்
மற்றொரு விசித்திரமான உறவு, ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரின வகைக்கும் (sea anemone) கூனிறாலுக்கும் (anemone shrimp) இடையேயுள்ள உறவு. மணியுருக்கள் போன்ற உயிரின வகை, சிலசமயங்களில் ‘மலர் விலங்கு’ தன்னுடைய உணர்ச்சிக் கொடுக்குகளின் கீழ் அதை இழுத்து, தன் வாயில் போட்டுக்கொள்கிறது.
என்றபோதிலும், கூனிறால் அதன் நச்சுக் கொடுக்கால் பாதிக்கப்படுவதில்லை, அதே சமயத்தில் அவற்றின் மத்தியில் பாதுகாப்பாக வாழ்கின்றன. இந்த இணைவாழ்வு உறவில், தன்னை இறையாகத் தேடிவரும் உயிரினங்களிலிருந்து கூனிறால் பாதுகாக்கப்படுகிறது, அதே சமயத்தில் ‘மலர் விலங்கு’ வைத்த மீதி மிச்சம் இதற்கு உணவாகவும் அமைகிறது. பதிலாக, கூனிறாலின் சுத்திகரிப்பு சேவையிலிருந்து ‘மலர் விலங்கு’ பயனடைகிறது.
கடலில் மற்ற கூட்டாளிகள்
மனிதரைப் போலவே மீன்களும் வியாதிக்கும் தொத்துநோய்க்கும் உள்ளாகின்றன. ஆனால் ஒரு மீன் ஆரோக்கியமாயிருப்பதற்கு முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமா? ஆம், நிச்சயமாக, ஏனென்றால் சில மீன்கள் துப்புரவாளன், அல்லது அம்பட்டன் என்று அழைக்கப்படும் மீனுடன் கூட்டு சேர்ந்துகொள்கின்றன. ஆழ்கடலின் குடியுரிமைப் பெற்ற இச்சிறிய மீன்களை விலாங்குமீன், உடுமீன், சுறாமின், ஆகிய மீன்வகைகள் ஆவலுடன் நாடிவருகின்றன.
இறைச்சியுண்ணும் இந்த மீன்கள் ஆழ்கடலின் துப்புரவு நிலையங்களில் வரிசையாகத் தங்களுடைய சமயத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். முதலில் இருப்பது ஒரு பெரிய சுறா மீன். சுறாவின் தலையிலிருந்து துடுப்பு வரையாக பாதிக்கப்பட்ட எந்தத் திசுக்களையும் நீக்கிப்போடுகிறது. பின்பு அது சுறாவின் பயங்கரமான பற்களைக் கொண்ட வாயில் மறைந்துவிடுகிறது, அழுகின உணவுத் துணுக்குகளையும், பாசிகளையும், ஒட்டுயிர்களையும் நீக்கி சுத்தம்செய்கிறது. துப்புரவாளன் ஊசி போன்ற கூரிய பற்களுடன் தொண்டை வழியாக பிரவேசித்து செவுள் வழியாய் வெளியே வந்துவிடுகின்றன. பணி நல்ல விதத்தில் நிறைவேற்றப்பட்டது—சரி, அடுத்த நோயாளி!
கூச்ச சுபாவமுள்ள வாடிக்கையாளருக்கு இந்தத் துப்புரவாளன் ஒரு நடனம் ஆடுகிறான். கூச்ச சுபாவமுள்ள அந்த மீன் தன்னுடைய வாயைத் திறப்பதற்கு இணங்கச் செய்யவும் தன்னுடைய வேலையைச் செய்துமுடிக்கவும் பக்கவாட்டில் நீந்திக் காட்டுகிறது. சற்று நேரத்தில், அது வாயைத் திறக்க, சேவை நிறைவேற்றப்படுகிறது. சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு அத்தனை அநேக மீன்கள் காத்துக்கொண்டிருப்பதால், வரிசையைக் கலைத்து முன் செல்வதற்காகச் சண்டைகளும் நடப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. ஒரு துப்புரவு பணியாற்றும் மீன் ஆறு மணி நேரத்தில் 300 மீன்களுக்கு சேவைசெய்தது.
ஆம், அப்படிப்பட்ட விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று பயனுள்ள சேவையை செய்வதற்காக பைபிள் குறிப்பிடுகிறவிதமாக “இயல்புணர்வுபடி ஞானமுள்ளவை”யாக நிரூபித்திருக்கின்றன. (நீதிமொழிகள் 30:24, NW) ஒருவேளை மனிதராகிய நாம் அவற்றிலிருந்து ஒரு பாடத்தை ஏற்று மற்றவர்களுடைய நன்மைக்கா “கொடுப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள” கற்றுக்கொள்ளலாம்.—லூக்கா 6:38. (g88 4/22)