ஒட்டகச் சிவிங்கிகளும் எறும்புகளும் வேலமரமும்
ஒட்டகச் சிவிங்கிகள் வேல மரத்தின் இலைகளை விரும்பித் தின்கின்றன. ஆனால் வேல மரமோ அதை எதிர்த்து போராடுகிறது. எவ்விதமாக என்பதை காட்டின் ஒரு காட்சி—கிழக்கு ஆப்பிரிக்க பாலூட்டிகளின் நடத்தைப்பற்றிய ஆய்வு (Portraits in the Wild—Behavior Studies of East Aftrican Mammals) என்ற புத்தகத்தில் பக்கம் 56-ல் சின்தியா மாஸ் விளக்குகிறார்:
“வேலமரம் எறும்புகளின் கூட்டத்துக்கு புகலிடம் அளிக்கிறது. பூச்சுகளால் மரங்களில் ஏற்படும், கருமையான குழிவுள்ள கரணை வளர்ச்சிகள் கிளைகளை மூடிக்கொண்டிருக்க இந்த எறும்புகள் அவைகளில் வாழ்கின்றன. ஒவ்வொரு இலைக் காம்பிலும் தேன் வெளித்துவரம் உண்டு. இவை எறும்புகளுக்கு உணவளிப்பதைத் தவிர வேறு எந்த ஒரு நோக்கத்தையும் சேவிப்பதாக தெரியவில்லை. ஒட்டகச்சிவிங்கி ஒன்று மரத்தின் மீதுள்ள இலைகளை மேய வரும்போது இது எறும்புகளுக்கு தொல்லைத் தருவதால் இவை எல்லா கிளைகளின் மீதும் விலங்கின் மீதும் வேகமாக ஓடுகின்றன. குறிப்பிட்ட இந்த க்ரெமாட்டோகாஸ்டர் என்ற வகையான எறும்பு கொட்டும்போது ஏற்படும் வேதனை பயங்கரமாக இருப்பதால் ஒட்டகச்சிவிங்கி ஒரே மரத்தில் நீண்ட நேரம் செலவிடுவதில்லை. அவை மரம் விட்டு மரம் சென்றுக் கொண்டே இருக்கின்றன. இந்த உத்தியானது, இது போன்ற வேலமரத்தின் மீது மேய்வதிலிருந்து ஒட்டகச்சிவிங்கியை தடை செய்யாவிட்டாலும் ஒரே இடத்திலுள்ள பல மரங்கள் முழுவதிலுமாக சேதம் பகிர்ந்தளிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.”