பக்கம் இரண்டு
“கவனமாக ஓட்டுங்கள்”
வெளியேச் செல்லப் புறப்படும் குடும்பத்தினரிடமாக அல்லது விருந்தினரிடமாக இது எத்தனை அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது! இது நல்லதோர் நினைப்பூட்டுதலாக இருக்கிறது. வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் அபாயமானதாக இருக்கக்கூடும்.. நீங்கள் சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய் சேர்வதில் அநேக காரியங்கள் உட்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஆட்கள் இவ்விதமாக போய்ச் சேருவதில்லை.
பாதுகாப்பாக ஓட்டிச்செல்வதை முன்னேற்றுவிக்க ஏதாவது செய்யப்படக்கூடுமா? பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர் பல்வேறு தேசங்களிலுள்ள நிலைமைகளை பார்வையிட்டு, மோட்டார் வண்டி ஓட்டுநர்களுக்கு அவர்களுடைய சொந்த உயிர்களையும் மற்றவர்களுடைய உயிர்களையும் பாதுகாக்கும் வகையில் ஓட்டுவதற்கு சரியான அறிவுரைகளைத் தருகிறார்.