உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 3/8 பக். 29
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வெறுமென மோகமா?
  • உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானம்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 3/8 பக். 29

எமது வாசகரிடமிருந்து

வெறுமென மோகமா?

“அது வெறுமென மோகம் என்பது யார் சொல்வது?” என்ற (ஜனவரி 8, 1988) உங்கள் கட்டுரை மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நான் பள்ளியிலிருக்கையில் என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரை மூன்று வருடங்களாக மிகவும் நேசித்தேன். அவருடைய மிகச் சிறந்த மாணவிகளில் ஒருத்தியாக நான் இருந்தேன். ஆகவே அவர், விசேஷமாக நான் கூச்சமான சுபாவமுள்ளவளாக இருந்ததால் எனக்குக் கூடுதலான கவனத்தைச் செலுத்தினார். அவர் மிகவும் விசேஷித்தவராக இருந்தார். இன்னும் ஒரு நபராக நான் அவரை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுது வரையாக நான் அவரை நேசிப்பதாக நினைப்பது எவ்வளவு தவறு என்பது எனக்கு ஒருபோதும் தெரியாதிருந்தது. அவர் விவாகமானவர். ஆகவே அவருடைய மனைவி இறந்துவிட்டால் என்ன நடக்கக்கூடும் என்பதை கற்பனை செய்வது மிகவும் எளிதாக இருந்தது. அந்தக் கட்டுரையையும் அதைத் தொடர்ந்து வந்த “மோகத்திலிருந்து நான் எவ்விதமாக விடுபடலாம்?” (பிப்ரவரி 1, 1988) என்ற கட்டுரையையும் நான் உண்மையில் மிகவும் போற்றுகிறேன். அவரை பார்க்க முடியாதபோது நான் அழுதிருக்கிறேன். அவரைப் பற்றி கவிதைகளையும்கூட எழுதியிருக்கிறேன். இப்பொழுது அவற்றை நான் கிழித்து எறிந்துவிட்டேன்.

I.L. ஐக்கிய மாகாணங்கள்

உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானம்

வாழ்க்கையின் பல அம்சங்களின் பேரில் நீங்கள் வெளியிடும் மிகச் சிறந்த கட்டுரைகளுக்காக நன்றி. சமீபத்தில் அறுவைச் சிகிச்சை ஒன்றிற்குப் பிறகு, எனக்கு சவ்வுப்பை நோய் இருந்ததாக நான் நினைத்து, அதிகப்படியான தண்ணீர் குடித்ததன் காரணமாக எனக்கு உடலில் சோடியம் (உப்பின் மூலத் தனிமம்) குறைவு ஏற்பட்டது. இது ஏற்படக்கூடிய காரியம் என்பதையுங்கூட நான் அறிந்தில்லை. நாம் மிகவும் நோய்ப்பட்டேன். இச்சமயத்தில் என்னைச் சந்திக்க வந்த நர்சாக பணிப்புரியும் என் சிநேகிதி உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானத்தை நான் குடிக்கும்படி சொன்னாள். (ஆங்கிலத்தில் செப்டம்பர் 22, 1985; தமிழில் ஜூலை 1986) உடனடியாக எனக்கு சுகம் கிடைத்தது. மறுபடியும் மருத்துவமனைக்குச் செல்வதிலிருந்து இது என்னைப் பாதுகாத்தது. அந்தக் காட்டுரையை வாசித்தபோது நான் அவ்விஷயம் என்னுடைய பேரப்பிள்ளைகளுக்குத்தான் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் யோசித்திருந்தேன், எனக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

G.S. ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்