பக்கம் இரண்டு
கடந்த நூற்றாண்டுகளாய், சமாதானத்துக்காகப் பல இலட்சக்கணக்கான ஜெபங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு வேளை எந்த ஜெபங்களும் 1986-ம் ஆண்டு இறுதிப் பகுதியில் இத்தாலியிலிருக்கும் அஸிஸியில் கூடிய உலக மதத் தலைவர்கள் ஏறெடுத்த ஜெபங்களைக் காட்டிலும் அதிக அசாதாரணமானவையாக இருந்திருக்காது.
அங்கு என்ன நடந்தது? அந்தக் கூட்டம் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததா? அந்த மதங்களின் ஆட்கள் செய்யப்பட்ட ஜெபங்களுக்கு செவிகொடுத்து அவற்றிற்கேற்ப செயல்பட்டார்களா? கடவுள் செவிகொடுத்தாரா?
இத்தாலியிலுள்ள ஒரு விழித்தெழு! நிருபர் இந்தக் கேள்வியைப் பின்வரும் கட்டுரைகளில் ஆராய்ந்தளிக்கிறார்.