தயவுள்ள செயல்கள் சந்தோஷத்தைத் தருகிறது
கடந்த ஆண்டு காவற்கோபுரம் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள் பின்வரும் கடிதத்தைப் பெற்றனர்:
அன்புள்ள ஐயா:
“கடந்த மாதம் பிலெதெல்பியாவில் என்னுடைய இளம் மகளுடைய புத்தகப் பையிலிருந்து அவளுடைய பணப்பை திருடுபோனது. கடந்த வாரம் அவள் தனது பணப்பை, லைசென்ஸ் மற்றும் சில முக்கியமான அட்டைகளுங் கொண்ட ஒரு பார்சலைப் பெற்றாள். இந்தப் பார்சல் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரால் அனுப்பப்பட்டது, ஆனால் அதில் தாங்கள் பிரசுரிக்கும் காவற்கோபுரம் பத்திரிகை ஒன்று இருந்தது. இந்தச் சகோதர அன்பிற்குரிய செயலைச் (சகோதர அன்பிற்குரிய பட்டணத்திலிருந்து) செய்தவர், பணப்பையைத் திருடியவன் அதைக் கீழே எரிந்துவிட்டிருக்க சிரமம் பாராமல் அதை எடுத்து தன் பணத்தில் அதை என் மகளுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தத் தயவுள்ள செயலைச் செய்த அந்த நபருக்கு என் குடும்பம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. . . . இது ‘சாட்சி கொடுக்க’ மிகப் பெரியதோர் வழியாக இருந்திருக்கிறது.”
காவற்கோபுரம் பத்திரிகையை வாசிப்பது பல இலட்சக்கணக்கானோர் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மை, தயவு, அக்கறை ஆகிய தன்மைகளை அவர்களில் ஊன்றவைத்திருக்கிறது. இப்பொழுது இதன் ஒவ்வொரு பிரதியும் 1.2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் 100-க்கு அதிகமான மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்தி செய்து ரூ.18-ம் சேர்த்து அனுப்புவதன் மூலம் காவற்கோபுரம் பத்திரிகையை நீங்கள் மாதந்தோறும் ஓர் ஆண்டுக்குச் சந்தாவாகப் பெற்றுக்கொள்ளலாம்.