1914 முதற்கொண்டு இந்த உலகம்
பாகம் 2: 1929-1934 உலகளாவிய பொருளாதார மந்தம், மீண்டும் போருக்குச் செல்லுதல்
“அதிருஷ்டம் என்பது ஐக்கிய மாகாணங்களின் பக்கமாக எப்போதாவது இருந்தது என்றால் அது அந்நாளில் தானே இருந்தது.” சரித்திராசிரியர் டேவிட் A. ஷன்னான் 1929-ல் ஐக்கிய மாகாணங்களில் ஜனாதிபதி ஹர்பர்ட் ஹுவர் பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்ட அந்த நாளை இவ்விதமாக விவரிக்கிறார். ஷன்னான் மேலுமாக விளக்குகிறார்: “அடிவானத்தில் யுத்த மேகங்கள் இல்லாத சமாதான ஆண்டாக அது இருந்தது. அமெரிக்க நாட்டுச் செல்வம் தாராளமாக கடல் கடந்து விரிவடைந்து பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உலகின் மற்ற பகுதிகளில் நிலைமைகளை மாற்றிக்கொண்டிருந்தது.”
ஆனால் ஹுவரின் பதவி காலம் முடிவடையும் சமயத்தில், “தேசீய மனநிலை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. தளராத நம்பிக்கைக்கு பதிலாக தோல்வி மனப்பான்மையும் மனமுறிவும், மிகுதியான மனக்கசப்பும் இருந்தது.” என்ன நடந்துவிட்டது?
‘இருண்ட வியாழன்’—ஒரு சகாப்தத்தின் முடிவு
1929, அக்டோபர் 23 புதன்கிழமை வணிக முயற்சியில் துணிந்து இறங்கிய அநேகர் எந்த ஒரு தெளிவான காரணமுமின்றி, மிகுதியான வலையில் மூலதனப் பங்குகளை, நியு யார்க் பங்கு மாற்று வாணிகத்தில் விற்க ஆரம்பித்தார்கள். அடுத்த நாளான வியாழனன்று, தங்கள் மூலதனப்பங்குகள் இன்னும் அதிகமாக மதிப்பை இழந்துவிடுமோ என்ற கவலையில் பங்குதாரர்கள் களத்தில் சாட ஒரே வாரத்துக்குள் 195,00 கோடி மதிப்புள்ள பங்குகள் காலியாயின. அதைத் தொடர்ந்து வந்த சில மாதங்களில் இன்னும் அதிகம் காலியாயின. இவ்விதமாகவே பெரும் பொருளாதார மந்தம் ஏற்பட ஆரம்பித்தது.
எதனால் இப்படியானது என்பதற்குப் பொருளாதார நிபுணர்களும் சரித்திராசிரியர்களும் அநேக கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் குறிப்பிடும் விதமாகவே, மந்தத்துக்கான அநேக காரணங்கள் செழுமையான இருபதுகளில் ஆழமாக பதிக்கப்பட்டவையாக இருந்தன” என்பது தெளிவாக இருக்கிறது. அவைகளின் செழுமை “உறுதியற்ற ஓர் அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டிருந்ததால் . . . , பங்குமாற்று வணிகத்தின் சரிவு . . . [அவைகளின்] ஆதாரமான பொருளாதார தோல்வியை சடுதியாக வெளிப்படுத்தியது.”—இருபதாம் நூற்றாண்டில் ஐக்கிய மாகாணங்கள், பக்கங்கள் 10, 12.
எப்படியிருந்தபோதிலும் கிளர்ச்சி மிகுந்த இருபதாம் ஆண்டுகள் மறைந்துவிட்டன. அவை தோற்றுவித்த கிளர்ச்சியூட்டிய நம்பிக்கைகளும் மறைந்துவிட்டன. “1929-ல் பங்கு மாற்ற வணிகத்தின் பெரும் சரிவு குட்டை வெளிப்படுத்தியது” என்பதாக சரித்திராசிரியர்கள் F. ஃபீரிடலும் N. போலக்கும் சொல்கிறார்கள். “பொருள் வளம் குறைந்து இலட்சக்கணக்கானோரை அது வறுமையில் விட்டுச் சென்றபோது இருபதாம் ஆண்டுகள் ?ஒரு போலியான இடைவெளியாக அல்லது வேதனை தருகிற வேடிக்கையாகவே—ஒழுக்கங்கெட்ட ஜாஸ் சகாப்தமாக, பொன் கன்றுகுட்டியின் காலமாகவே இருந்தது.”—American Issues in the Twentieth Century, பக்கம் 115.
திடீரென்று இலட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். கடன்பட்டிருந்த ஆட்கள் தங்களின் வீடுகள் உட்பட கடன் சலுகையில் வாங்கியவற்றை இழந்தனர். செலவுகளைக் குறைப்பதற்காக அவர்கள் இரண்டிரண்டு குடும்பங்களாக சேர்ந்து வாழத் தொடங்கினர். மூலதன பங்குகளின் விலைகள் கீழே சரிந்தபோது ஓரிரவுக்குள் செல்வங்கள் இல்லாமல் போயின. வியாபாரம் முடங்கியது. ஐக்கிய மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வங்கிகள் கதவுகளை மூடியபோது தற்கொலையின் அலை தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன்பெல்லாம் “பணம் இல்லை” என்ற குறிப்போடு காசோலை தனக்குத் திரும்பி வருவதுண்டு என்றும் ஆனால் இப்பொழுதோ “வங்கி இல்லை” என்ற குறிப்போடு திரும்பி வருவதாகவும் ஒரு நகைச்சுவை நடிகன் சொன்னபோது அனைவரும் சப்தமாக சிரித்தனர்.
பொருளாதார வீழ்ச்சி உலகம் முழுவதிலும் செயல்பரப்பிலும் அதன் பாதிப்புகளிலும் வெகு தூரம் சென்றெட்டுவதாக இருந்தது. உண்மையில் ஐக்கிய மாகாணங்களும் உலக விவகாரங்களில் அதன் இடமும் 1918-1943 என்ற புத்தகம் “இந்தப் பொருளாதார பாதிப்பு ஒவ்வொரு தேசத்தையும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும், சமுதாய அரசியல், உள்நாடு மற்றும் அனைத்து நாடுகளையும் தாக்கியது” என்று சொல்லுகிறது.
இதற்கிடையில் ஜப்பானில் போரில் ஈடுபாடு கொண்ட இராணுவத்தினரும்கூட பொருளாதார நிலையை சுயநலத்துக்காக ஆதாயப்படுத்திக் கொண்டார்கள். தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்விதமாகச் சொல்கிறது: “இராணுவ படையெடுப்பின் மூலமாக ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்திக்கொள்வது ஐப்பானின் பொருளாதார பிரச்னைகளைத் தீர்த்துவிடும் என்ற கருத்து 1929-ன் மந்தமான காலத்தின்போது பிரபலமானது.” 30-ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்த ஸ்திரமற்ற தன்மையின் காரணமாக, உள்நாடு அரசின் அங்கீகாரமில்லாமலே இராணுவத்தினர் இதைச் செய்யத் துணிந்தார்கள். மன்ச்சூரியாவின் மீது படையெடுத்து அதை ஐந்தே மாதங்களில் கைப்பற்றி விட்டனர். சர்வதேச சங்கத்தால் வலுச்சண்டைக்காரர் என்ற பெயரை பெற்றுக்கொண்டபோது, ஐப்பான் மனச்சூரியாவிலிருந்து அல்ல, ஆனால் சர்வதேச சங்கத்திலிருந்து விலகிக்கொள்வதன் மூலம் பதிலளித்தது.
“நான் தான்” முதல் என்ற மனப்பான்மை
சிற்றின்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருளாசையை ஊக்குவிப்பதன் மூலம், கிளர்ச்சி மிகுந்த இருபதாம் ஆண்டுகள், ஆன்மீக உணர்வை அடக்கி “நான் தான் முதல்” என்ற மனநிலையை வளர்த்தது. ஆனால் “ஐக்கிய மாகாணங்களும் உலக விவகாரங்களில் அதன் இடமும் 1918-1943 என்ற மேலே குறிப்பிடும் புத்தகம் சொல்கிறபடி 1929-ல் ஆரம்பமான பூகம்பம் இப்பொழுது இந்த மனநிலையை இன்னும் அதிக உறுதியாக்கியது. எவ்விதமாக? ஏனென்றால் பொருளாதார மந்தம், வளர்ந்துவந்திருக்கக்கூடிய சமுதாய உணர்வு அக்கறைகளை அழித்து மற்றவர்கள் மீது பாதிப்பு என்னவாக இருப்பினும் ஒவ்வொரு குடும்பத்தையும், தன் சொந்த குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே கருத்தூன்றியிருக்கச் செய்தது. எவர் எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே முனைப்பாயிருந்தனர்!”
தற்பெருமையும், தன்னலம் கருதுவதும் கரிசனையில்லாத மனநிலையும் தனிப்பட்ட ஆட்களில் வெறுக்கத்தக்கவையாக கருதப்படுகின்றன. ஆனால் தேசப்பற்று என்ற பாவனையில் தேசீய தொகுதிகளின் இதே போன்ற மனநிலை அநேகமாக நியாயமானதாகவும் சிலசமயங்களில், விரும்பத்தக்கதாகவும்கூட கருதப்படுகிறது. பெரும் பொருளாதார மந்தம் இப்படிப்பட்ட ஓர் ஆவியை ஊக்குவித்தது.
உலகின் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சங்கம் வெளிப்படுத்திய சர்வ தேச உடன்பாடு மற்றும் ஒத்துழைப்பின் ஆவிக்குத் தவிர்க்க முடியாத ஒரு பேரடியைக் கொடுத்தது என்றும் இது “தனி நாடுகள், கொள்கையற்ற தற்பெருமை கொள்வதற்கான” வழியைத் திறந்து வைத்தது என்றும் சரித்திராசிரியர் ஹெர்மன் க்ராமல் சொல்கிறார். பெரும்பாலான தேசங்கள், தங்களைக் காத்துக்கொள்ள வே
ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ என்ற இடத்தில் இரண்டு செவிலியர் “பயங்கரமான இராக்கனவுக்களைக்” கொண்டிருந்தனர், நிம்மதியான தூக்கமின்றி அவதியுற்றனர்” என்று தி டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்தது. ஏன்? ஏனென்றால் 24 வார ஆண் குழந்தையைச் சிதைத்திட ஒரு அறுவை சிகிச்சையில் பங்கு கொண்டனர். எதிர்பாராத விதமாக, அவன் “ஒரு சிறிய காலத்துக்கு” உயிரோடிருந்தான்.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள டெட்ராய்ட்டில் 29 வார முதிர்கரு, அதன் தாயின் கர்பப்பையில் போடப்பட்ட ஊசியால் கொல்லல்லை . . . தேசங்கள் செழிப்பாக வாழ்வதைப் பற்றியோ அல்லது ஆடுமாடுகளைப் போல் பட்டினியில் சாவதைப் பற்றியோ எனக்கு அக்கறை இல்லை. நம்முடைய கலாச்சாரத்துக்கு அடிமைகளாக நமக்கு அவர்கள் தேவையாக இருப்பதில்தானே எனக்கு அக்கறை . . . . போர்காலங்களில் பீரங்கி வண்டிக்கு எதிராக பாதுகாப்புக்காக பயன்படும் பள்ளத்தைத் தோண்டுவதில் முழுமையாக சோர்வடைந்து 10,000 ருசிய நாட்டுப் பெண்கள் உயிரிழப்பதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஜெர்மனிக்குத் தேவையான அந்தப் பள்ளம் தோண்டப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்ற அளவில்தானே நான் அதில் அக்கறையுள்ளவனாக இருக்கிறேன்.”
தனி நபர்களும் தேசங்களும் இப்படிப்பட்ட தன்னல மனப்பான்மையைக் காண்பித்து, “உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்ற கடவுளுடைய சட்டத்தை இப்படியாக அவமதிக்கையில் சமாதானத்தை எவ்விதமாக முயன்று அடைந்து அதைக் காத்துக்கொள்ள முடியும்? (லூக்கா 10:27) சங்கீதம் 119:165-ல் “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு” என்கிறது பைபிள். ஆனால் இந்த அன்பு குறைவுபட்டதன் காரணமாக தேசங்கள் ஒரு புதிய போருக்கு சுலபமாக ஆயத்தமாயின. அன்பில்லாமையும், தன்னல மனநிலையும் ஆகிய இரண்டுமே, சாத்தானின் பொல்லாத ஒழுங்கு முறையின் “கடைசி நாட்களை” வருணிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3, 12.
மனிதன் யாரில் நம்பிக்கை வைக்க வேண்டும்?
தெளிவாகவே மோசமாகிக் கொண்டுவந்த உலக நிலைமை, கிளர்ச்சி மிகுந்த இருபதாம் ஆண்டுகளின்போது கடவுளிடமாக முதுகைக் காட்டிய மக்களை அவரிடமாக திரும்பும்படியாகச் செய்ததா? சிலருடைய விஷயத்தில் அவ்விதமாகச் செய்தது. 1931-ல் உவாட்ச் டவர் சொஸயிடியோடு கூட்டுறவுக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு செய்தியை அறிவித்தபோது அநேகர் சாதகமாக பிரதிபலித்தார்கள். ஆனால் தேசங்கள் மொத்தத்தில் செவிகொடுக்காதவர்களாகவும் கடவுளில் அல்ல, ஆனால் “தலைச்சிறந்த” மனிதர்களில் நம்பிக்கை வைப்பதாகவும் இருந்தன.
உதாரணமாக, 1930-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்நாட்டு சட்ட மீறுதலின் வன்முறை இல்லா இயக்கத்துக்கு மோகன்தாஸ் காந்தி அமோகமான ஆதரவைப் பெற்று வந்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அவர் நாடிய சுதந்தரம் ஸ்திரமான அமைதியான ஓர் இந்தியாவுக்கு வழிசெய்யும் என்பதாக அநேகர் நம்பினர். ஆனால் அவ்விதமாகச் செய்ததா?
அதே ஆண்டில் சீன ஜனாதிபதி சியாங்-காய் ஷெக், மெத்தடிஸ்ட் சர்ச்சின் உறுப்பினரானார். கிறிஸ்தவத்துக்கு இவர் மதம் மாறியதால் சீனாவுக்கும் கிறிஸ்தவ தேசங்கள் என்றழைக்கப்படும் மேற்கத்திய தேசங்களுக்குமிடையே நெருங்கிய பிணைப்புக்கு இது வழிவகுக்கும் என்பதாக அநேகர் நம்பினர். அது அவ்விதமாகச் செய்ததா?
1932-ல் வத்திக்கன் நடத்திய ஒரு விழாவில் முசோலனி ஆட்சியில் தனது பத்தாம் ஆண்டை கொண்டாடினான். அங்கு இவன் போப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசியினால் அவர்கள் தேசத்தின் நிலையான அமைதியும் பாதுகாப்பும் உறுதியளிக்கப்படும் என்பதாக பக்தியுள்ள இத்தாலிய மக்கள் நம்பினார்கள். அது அவ்விதமாகச் செய்ததா?
மேலுமாக 1932-ல் ஐக்கிய மாகாணங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ப்ராங்லின் D. ரூஸ்வெல்ட் நிலைமைகளை முன்னேற்றுவிக்க புதியதோர் நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்களித்தார். ஓர் ஆண்டுக்குப் பின்னர், ஐக்கிய மாகாணங்களின் ஆயுத ஒழிப்புத் திட்டங்களை எடுத்துரைத்து எல்லா போரயுதங்களையும் ஒழித்துவிடும்படியாக உலகத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இந்தப் புதிய நடவடிக்கை வேலையில்லா திண்டாட்டத்துக்கும் வறுமைக்கும் ஒரு முடிவை கொணர்ந்து சமாதானத்துக்கு வழிசெய்யும் என்பதாக அநேகர் நம்பினர். அது அவ்விதமாகச் செய்ததா?
1933-ல் ஹிட்லர் ஜெர்மனியின் புதிய முதல்வரானார். இதை அடுத்து விரைவிலேயே அவருடைய சமாதான உரை என்றழைக்கப்படும் உரையில், அவர் இதுவரை ஆற்றியுள்ளதிலேயே வெகுவாக கருத்தைக் கவரும் ஒரு பேச்சைக் கொடுத்தார். அதில், “தற்போதைய சமுதாய மற்றும் அரசியல் ஒழுங்கை தகர்த்துவிடக்கூடிய எல்லையில்லா பயித்தியக்காரத்தனம்” என்பதாக போர அவர் பழித்துப் பேசினார். ஜெர்மனி போர் தொடுப்பதை அல்ல, ஆனால் பாதுகாப்பை அடைவதையே ஆவலுடன் தேடுவதன் காரணமாக ரூஸ்வெல்டின் கேளிக்கைக்கு இணங்க எந்த ஓர் ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்துக்கும் அது தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தக் கொள்கை, ஜெர்மனி தேசத்தின் கனத்தையும் கண்ணியத்தையும் மீட்டுத் தந்து சமாதான வழிமுறைகளின் மூலமாக அதனுடைய தலைவரின் ஆயிர வருட ஆட்சிக்கு உத்தரவாதமளிக்கும் என்பதாக நம்பினார்கள். அது அவ்விதமாகச் செய்ததா?
பின்பு, “மாபெரும்” அமைப்பாகிய சர்வ தேச சங்கம் இருந்தது. அதைக் குறித்து 1932, மே 15 ஆங்கில காவற்கோபுர பத்திரிக்கை இவ்விதமாகச் சொன்னது: “மதகுருமாரின் ஆலோசனையின் பேரில் பூமியின் ராஜாக்கள், . . . சர்வதேச சங்கத்தில் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அதிலும், குழப்பமும் இன்னல்களும் நிறைந்த உலகை தற்போதைய இரண்டக நிலையிலிருந்து விடுவிக்க மனிதனின் கூர்மையான அறிவிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” யெகோவாவின் சாட்சிகள் இதை நம்பாவிட்டாலும் அநேகர்—சர்வதேச சங்கம் உலகை அதன் இரண்டக நிலையிலிருந்து விடுவிக்கும் என்பதாக நம்பினார்கள். அவ்விதமாக அது செய்ததா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதினான்: “மாபெரும் மனிதர்களை—எந்த ஓர் உதவியையும் கொடுக்க இயலாத வெறும் சாகக்கூடிய மனிதர்களை நம்பாதேயுங்கள்.” இதை நன்றாய் புரிந்துகொண்டிருப்பவர்களாய், இந்த வார்த்தைகள் ஞானமுள்ளவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?—சங்கீதம் 146:3, Moffat.
மந்தம் ஏற்படாமல் இருந்திருந்தால் . . .
“முப்பதாம் ஆண்டுகளின் சம்பவங்களுக்கும் போக்குகளுக்குமான எல்லா பொறுப்பையும் பொருளாதார மந்தத்தின் மீதே போட்டுவிடுவது மிக சுலபமான முட்டாள்தனமாக இருக்கும்” என்கிறார்கள் “ஐக்கிய மாகாணங்களும் உலக விவகாரங்களின் அதன் இடமும் 1918-1943” என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். என்றபோதிலும், பஞ்சம் நேர்ந்த ஆண்டுகளின்போது, பரவலாக இருந்த வறுமையும் பாதுகாப்பின்மையும் நாடக மேடையைத் தயார் செய்து, நடிகர்களுக்கு கனமான பாத்திரங்களைக் கொடுத்து கதை அமைப்பில் பெரிய காட்சிகளைச் சேர்த்து காண்போருக்கு, கைத்தட்டிப் பாராட்ட புதிய கதாநாயகர்களையும் ஒலி எழுப்பி கண்டனம் செய்ய புதிய வில்லன்களையும் அளித்தது” என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பொருளாதார மந்தம் ஏற்படாமல் இருந்தால், இரண்டாவது உலகப் போர இருந்திருக்காது என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள்.
ஆனால் உலகந்தழுவிய பொருளாதார மந்தம் ஒன்று இருந்தது. இரண்டாவது உலகப் போர் வந்தது. ஆகவே மதசம்பந்தமான ஆதரவு இருந்தபோதிலும், சமாதானத்தைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சங்கம் அதில் தோல்வியடைந்தது. அதன் ஆரம்பத்திலிருந்தே சர்வ தேச சங்கம் அழிவுக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது வேகமாக அழிந்துவிடாது. அது மெதுவாக அழிவை நோக்கி தள்ளாடிச் செல்லும். அதைக் குறித்து எமது அடுத்த பிரதியில் வாசிக்கவும். (g87 3/22)
[பக்கம் 19-ன் பெட்டி]
மற்ற புதிய செய்தி குறிப்புகள்
1929—கலை மற்றும் விஞ்ஞான திரைப்படங்களுக்கு முதல் முறையாக ஹாலிவுட்டில் (ஆஸ்கர்) பல்கலைக்கழகப் பரிசுகள் கொடுக்கப்பட்டன.
1930—ப்ளூட்டோ என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
உருகுவே உதைப் பந்தாட்டத்தில் உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.
1931—சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 8,000 பேர் உயிரிழந்தனர். 230 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
நிக்கராகுவாவில் பூமியதிர்ச்சியில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அந்தச் சமயத்தில் மிக உயரமான கட்டடமாயிருந்த நியு யார்க்கின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டி முடிக்கப்பட்டது.
1932—நியூட்ரான் மற்றும் டிட்டெரியமின் (heavy hydrogen) கண்டுபிடிப்பு அணு ஆற்றல் இயற்பியல் தோன்ற காரணமாயிருந்தது.
1933—ஜெர்மனி சர்வ தேச சங்கத்திலிருந்து விலகிக்கொண்டது. ஹிட்லர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். டாக்குவில் முதல் கான்ஸன்ட்ரேஷன் முகாம் அமைக்கப்பட்டது. ஜெர்மனிக்கும் வத்திக்கனுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது; பெர்லினில் விரும்பப்படாத புத்தகங்கள் பகிரங்கமாக எறிக்கப்பட்டன.
1934—FBI (Federal Bureau of Investigation) கூட்டரசு செய்தி அறிவிக்கும் அலுவலகம், கொள்ளைக் கூட்டத்தாரை எதிர்த்துப் போராட ஐக்கிய மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்டது.
90,000 போர் வீரர்களடங்கிய சீன சிவந்த சேனை யென்னான் என்னுமிடத்துக்கு அதன் நீண்ட அணிவகுப்பைத் துவங்கியது.
[பக்கம் 18-ன் படம்]
குறைந்த காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்தார்கள்