உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 12/8 பக். 12
  • “என் கரு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என் கரு”
  • விழித்தெழு!—1987
  • இதே தகவல்
  • கருச்சிதைவு
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் ஒரு பலனுமாம்
    குடும்ப வாழ்க்கை
  • உயிர்—கடவுளிடமிருந்து ஒரு பரிசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கருக்கலைப்பு இரண்டகநிலை—ஆறு கோடி கொலைகள்தான் தீர்வா?
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 12/8 பக். 12

“என் கரு”

ஒரு முதிர் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பது பற்றி மனிதன் அதிகமாக கற்றறியும் போது, ஆரம்பதிலிருந்தே அது உணர்ச்சிகளோடும் கேட்கும், பார்க்கும் ஆற்றலோடும், அசையும் சக்தியோடும் செயலாற்றும் மற்ற திறமைகளோடும் படிப்படியாக வளர்ச்சியடையும் உயிர் என்பதை காண்பிக்கும் அத்தாட்சிகளை அதிகமதிகமாக அவன் எதிர்படுகிறான். அது வெறுமென உயிரணுக்களையும் திசுக்களையும் கொண்ட ஒரு பிண்டத்துக்கும் அதிகமாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கும் கண்டுபிடிப்புகளால் அவன் தொடர்ந்து வியப்படைகிறான். கனாடா தேசத்தில் பெண்களுக்கான பத்திரிகையான ஷேட்டலேனில் ஆன் பெர்ன் தற்போது அறியப்பட்டிருப்பவைகளை எழுதுகிறாள். அசைவுகள்: தாய் உணராவிட்டாலும் முதிர் கரு அதன் தசைகளை எட்டு வாரங்களிலேயே அசைக்க ஆரம்பித்து விடுகிறது. அதன் இருதயமும் துடித்துக் கொண்டிருக்கிறது! “28 வாரங்களில், இயல்பாக வளரும் முதிர் கரு ஒவ்வொரு 12 மணிநேரங்களும் குறைந்த பட்சம் பத்து தடவைகளாவது அசைகின்றது.” உணர்ச்சிகள்: 16 வாரங்களில் நோவுக்கு அது பிரதிபலித்து பரிசோதனைக்காக ஒரு ஊசியால் குத்தப்படுகையில் அது உதைக்கிறது. கேட்கும் ஆற்றல்: 24 வாரங்களில் தாயின் இதய துடிப்பை அதனால் கேட்க முடிகிறது. உரத்த சப்தங்கள், இசை மற்றும் குரல்களுக்கு அது பிரதிபலிக்கிறது. “தாயின் குரலுக்கேற்ப அதனால் துள்ளவும் கூட முடிகிறது” பார்வை: 16 வாரங்களில் அவை அங்குமிங்கும் பார்க்கும் அளவுக்கு, அதன் கண்கள் வளர்ச்சியடைந்து விடுகிறது. 24 வாரங்களில், . . . முதிர் கருவினால் கருப்பை சுவரினூடே வரும் வெளிச்சத்தைக் கண்டு கொள்ள முடிகிறது.

யெகோவாவும் கூட, புதிய உயிர் தரித்த சமயம் முதற்கொண்டு இவை அனைத்தையும் பார்க்கிறார்—ஒரு தனி நபரின் மகத்தான படிப்படியான வளர்ச்சியை அவர் பார்க்கிறார். ஜீவனையும் அதன் ஊற்றுமூலத்தையும் உண்மையாக மதிக்கிறவர்கள் இந்த உண்மையை அசட்டை செய்து கருச்சிதைவு என்பது வெறும் அணுக்களாலான ஒரு பிண்டத்தை அகற்றிவிடுவதே என்பதாக நினைக்க மாட்டார்கள். யெகோவாவிடம் சங்கீதக்காரன் சொன்னான்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தையும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்