இளைஞர் கேட்கின்றனர் . . .
ஒரு துணிகரச் செயலில் ஈடுபடுவதனால் என்ன தவறு இருக்கிறது?
“போ, லிஸ்ஸா, போ. ஆசிரியையிடம் சென்று உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்று சொல்” என்பதாக சகமாணவர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். இங்கே வாய் நாற்றத்தின் சம்பந்தமான, ஆரோக்கியத்தைப் பற்றிய எந்த ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் 14-வயது லிஸ்ஸா ஒரு துணிகரச் செயலில் ஈடுபடும்படியான சவாலை ஏற்கும்படி—உண்மையில் புண்படுத்தக்கூடிய ஒரு செயலைச் செய்யும்படி—அவர்கள் தூண்டிக் கொண்டிருந்தனர்.
‘சண்டையை மூட்டு!’ ‘ஒரு பெண்ணுக்கு முத்தங்கொடு!’ ‘ஒருவருக்கும் தெரியாமல் வகுப்பறையிலிருந்து மறைந்துவிடு!’ ‘ரயிலின் இருப்புப்பாதையைக் குதித்து தாண்டு!’ இப்படியாக இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டுகிறார்கள். எளிய குறும்புச் செயலிலிருந்து சர்வ சாதாரண தற்கொலை வரையிலுமான செயல்களை மற்றவர்கள் செய்யும்படிச் சவால் விடுகிறார்கள். அந்தத் தவறான போக்கில் இவர்கள் இன்பங்கொள்கிறார்கள்.
‘நீ தண்ணீரில் குதிக்க பயப்படுகிறாய் என்று நான் உன் மீது 100 ரூபாய் பந்தயங்கட்டுகிறேன்’ என்று ஒரு வாலிபன் தன் 14-வயது தோழனிடம் துணிச்சலாகச் சொன்னான். அந்த அழுத்தத்திற்கு இணங்கிவிட்ட அவனுடைய நண்பன் அவர்கள் சென்று கொண்டிருந்த உல்லாச பயணப்படகிலிருந்து தண்ணீரில் குதித்தான். தண்ணீரில் சக்திவாய்ந்த மின்னோட்டம், இருந்ததென்பதை அவன் உணரவில்லை. அவன் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்த கப்பல் தளத் தொழிலாளி தண்ணீரில் குதித்து அவனைக் காப்பாற்றியிராவிட்டால் இந்தக் கதையைச் சொல்வதற்கு அவன் உயிரோடிருந்திருக்க மாட்டான்.
ஒரு சுற்று பீர் பருகிய பின்பு, 17-வயது ஜேம்ஸ் தன் மீது மண்ணெண்னையை ஊற்றிக்கொண்டு, தன் நண்பர்களிடம் “உங்களில் எவருக்காவது துணிச்சலிருந்தால் என் மீது தீ கொளுத்துங்கள், பார்க்கலாம்” என்று சொன்னான். ஒருவன் அவனுடைய சவாலை ஏற்று, தீ கொளுத்திவிட்டான். அவனது உடலின் 30 சதவிகிதம் மோசமான தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டு ஜேம்ஸ் அதிக கஷ்டப்பட்டான். இந்தக் காரியத்தைச் சுருங்க சொல்பவராய் ஜேம்ஸின் தந்தை குறிப்பிட்டதாவது: “என் மகன் என்னிடம் சொல்வதிலிருந்து பார்த்தால், பிள்ளைகள் வெறுமென விளையாட்டுக்கு அவ்வாறு பேசிக்கொண்டிருந்தனர். அது முற்றிலும் முட்டாள்தனமான செயலாகும்.” இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
பொது சுகாதாரத்தின் அமெரிக்கன் ஜெர்னல் 1984 சொல்லுகிற பிரகாரம்: “ஒரு துணிகரச் செயலானது” ‘ஒருவர் பல்வேறு வகையான செயல்களைச் செய்யும்படிக்குச் சவால்விடப்படும் செயல் முறையாக இருக்கிறது.’ ஆனால் சவால்கள் தாமே எல்லா சமயங்களிலும் தீங்கானவை அல்ல. நீ கணக்கில் குறைந்த மார்க்குகள் வாங்கும்போது உன் பெற்றோர் உன்னிடம் “இப்பொழுதே நீ அந்த பெருக்கல் வாய்ப்பாட்டைப் படித்தாக வேண்டும்! என்று அதிகாரமாய் வற்புறுத்தக்கூடும். நீ அந்தச் சவாலுக்கு வெகு தீவிரமாய் பிரதிபலிப்பதைக் காணக்கூடும்!
ஆனால் ஏதோ ஒரு சிறுப்பிள்ளைத்தனமான, இரக்கமற்ற, முற்றும் ஆபத்தான ஒரு சவால் விடப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளுவதைப்பற்றி பல முறை யோசித்துப் பார்ப்பது நல்லது. ஞானி சொன்னதாவது: “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கொட்டுப் போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர் பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.” (பிரசங்கி 10:1) பண்டைய காலங்களில் ஒரு விலையுயர்ந்த தைலம் அல்லது நறுமண எண்ணெய் ஒரு செத்த ஈயைப் போன்ற அவ்வளவு சிறிய காரியத்தினால் கெட்டுப் போகக்கூடும். அதேவிதமாகவே ஒருவர் கடினமாக சம்பாதித்த நற்பெயர் “சொற்ப மதியீனத்தினால்” பாழக்கப்படக்கூடும். அந்த இழப்பை ஏற்க நீ விரும்புகிறாயா?
மறுப்பு தெரிவிப்பது ஏன் கடினமானதாயிருக்கிறது?
இருந்தபோதிலும் ஏறக்குறைய மூன்றிலொரு இளைஞர் தாங்கள் கோழை என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும் ஒரு துணிகரச் செயலையே ஏற்றுக்கொள்ளுகின்றனர் என்பதை ஆராய்சியாளர்களான சார்லஸ் மற்றும் மேரி ஆன் லூயிஸ் என்பவர்கள் கண்டறிந்தார்கள். சந்தேகமின்றி சமவயது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசை சிந்தனை வகையில் அறிவுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது. அமெரிக்கன் டீன் ஏஜர் (பருவப் பிள்ளைகள்) என்ற அந்தப் புத்தகமானது ஒரு சுற்றாய்வைக் குறிப்பிடுகிறது. வாலிபர்கள் பணக்காரர்களாக இருந்தாலுஞ்சரி ஏழைகளாக இருந்தாலுஞ்சரி தாங்கள் “விரும்பப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய கவலையாக இருக்கிறது.”
எனவே ஒரு துணிகரச் செயல் உன்னை ஒரு சங்கடமான நிலையில் வைக்கக்கூடும். மற்றவரால் விரும்பப்பட வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய், எனவே ஒரு துணிகரச் செயலுக்கு மறுப்புத் தெரிவிப்பது உனக்குப் பெரும் இழப்பாகத் தோன்றக்கூடும். “உன் நண்பர்கள் உன்னை ஒதுக்கி வைக்கப்பட்டவனைப் (நாதியற்றவனைப்) போல் உணரும்படி செய்துவிடுவார்கள்,” என்று மைக் என்ற இளைஞன் சொன்னான். ஆனால் ஒரு துணிகரச் செயலை நடப்பிப்பது ஆபத்தானதாக இருக்கக்கூடும்.
அதோடுகூட ஒரு துணிகரச் செயலைச் செய்யும்படியான அவர்களுடைய சவாலை நீ ஏற்கும்போது பைபிளின் தராதரத்தையோ அல்லது உன் பெற்றோரால் உனக்குக் கற்பிக்கப்பட்டதையோ நீ மீறுவாயா? அப்படியானால் உண்மையிலேயே வேடிக்கை விளையாட்டுகளை நாடக்கூடிய இளைஞரின் தராதரங்கள் உன் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி இயக்க நீ விரும்புகிறாயா? மேலுமாக உன்னுடைய உயிரையும் மற்றும் நற்பெயரையும் அபாயநிலையில் வைக்கும்படி எதிர்பார்க்கும் இளைஞர்கள் உண்மையிலேயே நண்பர்களா? நீதிமொழிகள் சொல்லுவதாவது: “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.” (நீதிமொழிகள் 18:24) ஒரு உண்மையான நண்பன் உன்னை ஆபத்தான நிலையில் நிறுத்த ஒருபோதும் எண்ணமாட்டான்.
அவன் “வாலிபருக்குச்” செவி கொடுத்தான்
சமவயது வாலிபரின் சொல்லுக்கு இணங்கிவிடுவதன் அபாயம் பண்டைய இஸ்ரவேலிலிருந்த ரெகொபெயாமின் அனுபவத்தில் நன்கு சித்தரித்துக் காட்டப்படுகிறது. அவனுடைய ஆட்சியின் ஆரம்ப கால கட்டத்திலேயே அவனுடைய குடிமக்கள் அவனுடைய தகப்பன் அவர்கள் மீது வைத்திருந்த பாரத்தை இலகுவாக்கும்படி மன்றாடினார்கள். அப்பொழுது ரெகொபெயாம் முதலில் முதியோரோடே ஆலோசனைப் பண்ணினான். அவர்கள் அவனிடம் நீர் “நல்வார்த்தைகளைச் சொல்வீரானால் எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள்” என்று சொன்னார்கள். (1 இராஜாக்கள் 12:7) நியாயமான ஒரு அறிவுரை இல்லையா? எனினும் அவர்கள் சொன்னவற்றில் திருப்தியடையாதவனாய் அவனோடே வளர்ந்த வாலிபரோடே ஆலோசனைப் பண்ணினான்.
அவனுடைய நண்பர்கள் மறுமொழியாக நீ எவ்வளவு கடினமானவன் என்பதை அவர்களுக்குக் காட்டு என்று அவனை ஊக்குவித்தார்கள். அவன் பின்வருமாறு சொல்லும்படியாக அவனைத் தூண்டினார்கள்: “என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள் மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்ல வேண்டும் என்றார்கள்.”—1 இராஜாக்கள் 12:10, 11.
பகுத்துணர்வை வளர்த்திடு
தெளிவாகவே, “உன் செவியைச் சாய்த்து ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு” நடந்தால் அது உனக்கு மேன்மையாயிருக்கும். (நீதிமொழிகள் 22:17) அது நீ இன்னுமதிக ஆரோக்கியமான நண்பர்களைக் கண்டடைவதற்கு வழி வகுக்கும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்,” என்று நீதிமொழிகள் 13:20 சொல்லுகிறது.
அப்படியானால் இது நீ நற்பயனுள்ள அறிவுரைகளுக்கும் மற்றும் விளையாட்டுத்தனமான—ஒருவேளை தீங்கிழைக்கக்கூடிய—“பாலியத்துக்குரிய இச்சைகளின்” வெளிக்காட்டுக்கும் இடையே பகுத்துப்பார்க்கும் தன்மையைக் கற்றுக் கொள்வதையுங்கூட உட்படுத்தக்கூடும். (2 தீமோத்தேயு 2:22) ஏதோ ஒரு காரியத்தைச் செய்வதற்கு யாராவது உன்னிடம் சவால் விட்டால் அதனைச் செய்வதினால் வரக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி யோசித்துப்பார். ஆண்டிரி என்ற இளைஞன் குறிப்பிட்டபடி, “யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லுவதன் மூலம் இளைஞர் உன்னை அந்தத் துணிகரச் செயலை செய்யும்படி வசீகரிக்கக்கூடும். அது உண்மையே. என்றபோதிலும் “நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்.” (கலாத்தியர் 6:7) மேலும் சிறு பிள்ளைத்தனமான நையாண்டிக் குறும்புக்காரர்கள் பெரும்பாலும் குறைந்த மார்க்குகள் வாங்குவதில், பள்ளியிலிருந்து நீக்கப்படுவதில், மற்றும் கைதுச் செய்யப்படுவதிலுங்கூட விளைவடைகிறது!.
மறுப்புத் தெரிவிக்க கற்றுக் கொள்ளுதல்
அப்படியானால் இந்தத் துணிகர செயலின் கண்ணிகளை நீ எப்படித் தவிர்க்கலாம்? ஒரு பைபிள் எழுத்தாளன் சொன்னதாவது: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குத் [அல்லது மறுமொழி கொடுப்பதற்கு] தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” (யாக்கோபு 1:19) பேசுவது யார், மற்றும் என்ன செய்யும்படி கேட்கப்படுகிறது என்பதற்கும் சிந்தனை செலுத்து. அது நியாயமானதா? அன்பார்ந்த செயலா? மற்றவர்கள் பேரில் தயவையும் சுயநலமற்ற அக்கறையையும் அது வெளிக்காட்டுகிறதா என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார். அப்படி இல்லையெனில் அந்தச் சவாலை அசட்டைச் செய்துவிடு. மற்றொரு இளைஞன் மாரிஸ் சொன்னதாவது: “தனித்து நிற்க விரும்பும் கோமாளியைப் போல் நீ உணரும்படி அவர்கள் செய்யக்கூடும். ஆனால் உண்மையில், ‘கோமாளி’ யார்? நிதான புத்தியுள்ளவனா அல்லது மூடச் செயலை ஊக்குவிப்பவனா?
எனவே துணிகரச் செயலில் ஈடுபடும்படி சவால் விடும் இளைஞரிடம் நியாயங்களை எடுத்துக் காண்பிக்க நீ முயற்சிக்கலாம். பதினெட்டு வயது டெரி, ‘நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்?’ ‘நான் அதைச் செய்தால் அது எதை நிரூபிக்கும்?’ ‘அதிலிருந்து நான் என்ன நன்மையடைவேன்?’ போன்ற கேள்விகள் கேட்பதன் மூலம் “அந்த வேடிக்கை விளையாட்டை முறித்துவிட” விரும்புகிறாள். ஒருவேளை பைபிளைப் பயன்படுத்துவதுங்கூட பயனுள்ளதாக இருக்கக்கூடும், நீ ஒரு திட்டவட்டமான தராதரத்தைக் கொண்டிருக்கிறாய் என்றும் அந்தத் தராதரத்தின்படி வாழ்வதற்கு நோக்கங் கொண்டிருக்கிறாய் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கட்டும். இளம் பெண் ஒருத்தி ஒரு பையனிடம் “ஆ, நீ எதை இழக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை,” என்று சொல்லுவதன் மூலம் அவனை ஒழுக்கயீனமான செயலுக்கு அழைக்க முயன்றாள். அப்பொழுது அந்தப் பையன் “ஆம், நான் எதை இழக்கிறேன் என்று எனக்குத் தெரியும். படர்தாமரை, மேக வெட்டை கிரந்தி போன்ற பாலின நோய்களை . . . நான் இழக்கிறேன்” என்று பதிலுரைத்தான். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மனசாட்சியைப் பயன்படுத்துவதானது பின்னால் மனம் வருந்தக்கூடிய ஏதோ ஒரு செயலைச் செய்யாமலிருக்க நமக்கு உதவக்கூடும் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!—ஆதியாகமம் 39:7-12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
இருந்தபோதிலும் இளம் லிஸ்ஸா குறிப்பிட்டதாவது: “நீ அவர்களோடு ஒத்துவரவில்லை என்பதை அவர்கள் அறியும்போது பெரும்பாலான இளைஞர்கள் உன்னைத் தொல்லைப்படுத்த மாட்டார்கள். என்றாலும் உன்னைத் திரும்பதிரும்ப பரீட்சிக்க விரும்புகிறவர்கள் இருப்பார்கள்.” 40 நாட்கள் வனாந்தரத்தில் தனிமையாக இருந்தபோது இயேசு கிறிஸ்து பிசாசினால் மூன்று சந்தர்ப்பங்களில் சோதிக்கப்பட்டார். குத்தலாக பேசிய சாத்தான்: ‘கற்களை அப்பமாக மாற்று!’ ‘ஆலய மதிற் சுவரிலிருந்துத் தாழக்குதி!’ ‘என்னைப் பணிந்து கொள்!’ என்றான். இயேசுவின் விடையானது “அப்பாலே போ, சாத்தானே!” (மத்தேயு 4:1-10) அப்படியிருந்த போதிலும் லூக்கா 4:13 தொடர்ந்து குறிப்பிடுவதென்னவெனில்: “பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சில காலம் அவரை விட்டு விலகிப்போனான்.” திரும்பத்திரும்ப எழுப்பப்பட்ட சவால்களை எதிர்த்துத் தள்ளுவதற்கு உன்னுடைய பங்கில் அதற்கொப்பான விடா முயற்சி தேவைப்படுகிறது. ஆனால் துணிகரச் செயல்களில் ஈடுபடும்படியான இந்தச் சிறுபிள்ளைத்தனமான சவால்களுக்கு இணங்கிவிடாதே. எது சரியானதோ அவற்றிற்கு உறுதியாய் நிற்கும்படியான தைரியத்தைக் கொண்டிரு!
இதுவே மெய்யான ஒரு சவால் அல்லவா? (g86 5/8)
[பக்கம் 19-ன் படம்]
பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பின்பற்றுவது பின்னால் மனம் வருந்தக்கூடிய ஏதோ ஒரு செயலைச் செய்வதிலிருந்து உன்னைத் தடுத்து நிறுத்தும்