பைபிளின் கருத்து
தாயத்துக்கள்—அவை உங்களை பாதுகாக்கக்கூடுமா?
“இன்றையிலிருந்து அறுவடை காலத்திற்கான இடைகாலத்தில் டேனியேல் செத்துப்போவான்!”
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள உயிரற்ற வழிபாட்டு பொருளின் பூசாரி தனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த குடும்பத்தினரை அந்த துயர்தரும் வார்த்தைகளால் அதிர்ச்சிக்குள்ளாக்கினார், எனினும் இந்த குடும்பத்தினர், அந்த இளம் பையனான் டேனியேல் பற்றியதல்ல. ஆனால் மிக மோசமாய் வியாதிப்பட்டிருக்கும் அவனுடைய தந்தையைப்பற்றி விசாரிக்கவே அங்கு வந்திருந்தார்கள். சிறு எலும்புகள் சிப்பிகள், மற்றும் கற்கள் ஆகியவை சேர்ந்த குவியலை விசாரித்தபின்னர் சில பலிகளும் சடங்கு முறைகளும் சரியான முறையில் செய்யப்பட்டால் தந்தை விரைவில் பூரண சுகம் பெறுவார் என்று அந்த பூசாரி உறுதியளித்தார். ஆனால் அவர்களுக்கு திகிலூட்டும் விதத்தில் அந்த பூசாரி சொன்னதாவது, சீக்கிரத்தில் பயங்கரமான ஒரு நோயினால் டேனியேல் தாக்கப்பட்டு செத்துப்போவான்!
அந்த குடும்பத்தினர் அந்த பூசாரியிடம் மன்றாடினார்கள். நிச்சயமாகவே ஏதோவொன்று செய்யப்படவேண்டும். அவர்களுடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த பூசாரி மீண்டுமாக நிமித்தம் பார்க்க முனைந்தான். ஆம், அங்கே ஒரு நம்பிக்கை இருந்தது! அந்த பூசாரி சொன்னதாவது மாயசக்தியுள்ள நாணயம் ஒன்று நூலில் சேர்க்கப்பட்டு இடுப்பை சுற்றி கட்டப்பட்டு அதை டேனியேல் எப்பொழுமே அணிந்துகொண்டிருந்தால் உடனடியாக நேரிடவிருக்கும் மரணத்தை தவிர்க்கலாம் என்று சொல்லப்பட்டது.
டேனியேல் உடனடியாக பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அபாயம் அவனிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. என்றபோதிலும் தனக்கு அளிக்கப்பட்ட அந்த செம்புநாணயத்தை மறுத்தான். அவன் கிறிஸ்தவனாக இல்லாதபோதிலும் தன் உயிரை காப்பாற்றுமளவுக்கு அந்த நாணயத்துக்கு வலிமை இருக்கிறதென்று அவன் நம்பவில்லை.
சக்தியுள்ளதா அல்லது சக்தியில்லாததா?
தாயத்து போன்ற மந்திரித்துப் பொருட்கள் உண்மையிலேயே பாதுகாப்பளிக்கக்கூடும்? அது அவ்வாறு அளிக்கக்கூடும் என்ற நம்பிக்கையை புதிதான ஒன்றல்ல. இது உயிரற்ற மாய பொருட்கள் பண்டைய ரோம், கிரீஸ், பாபிலோன், மற்றும் எகிப்து ஆகியவற்றில் தெய்வத்தன்மையுள்ளதாக பூஜித்துப் பாராட்டப்பட்டுவந்தன. மற்றும் ஆவற்றின் மீதுள்ள நம்பிக்கை இன்று பரவியிருக்கிறது, மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலை தீங்கு நேரிடாமல் ஒரு கிராமத்தை காவல் காக்கிறது. ஒரு தந்தை பொல்லாத ஆவிகளை விரட்டியடிப்பதற்காக கூறையிலிருந்து விசேஷ சிறு மூட்டை ஒன்றை கட்டி தொங்கவிடுகிறார். ஒரு தாய் நோய்களை தடுத்து விலக்க தன் மகளின் கழுத்தில் ஒரு சிறு தோல் பை ஒன்றை கட்டி தொங்கவிடுகிறாள். எதிரிகளின் மாந்தரீக வேலைபாடுகளுக்கு எதிராக தற்காத்துக்கொள்ள ஒரு தலைவர் நீர்யானை பல் ஒன்றை அணிந்துகொள்கிறார்.
இப்படிப்பட்ட பொருட்கள் பேரில் நம்பிக்கை வைப்பதை மேற்கத்திய நாட்டுமக்கள் ஏளனமாக கருதக்கூடும். என்றபோதிலும் என்ஸைக்ளோபீடியா அமேரிக்கானா நமக்கு நினைப்பூட்டுவது என்னெவனில்: ‘இது நாகரீக முதிர்ச்சியற்ற சமுதாயத்தினரின் செயலாக அடிக்கடி கருதப்பட்டபோதிலும் எல்லா சமுதாயங்களிலும் ஏதோ ஒரு அளவில் தாயத்துக்கள் போன்ற பொருள்கள்மீது நம்பிக்கை காணப்படுகிறது,” எனவே ஒரு மேற்கத்திய நாட்டு மனிதன் மூடபக்தியுடன் ஒரு குழிமுயல்பாதத்தை தன் ஜோபியில் போட்டு செல்வதோ அல்லது குதிரை லாடம் ஒன்றை தன் வீட்டு நிலைக்கால்களில் அடித்துவைப்பதோ இப்படிப்பட்ட தாயத்தை பக்திக்கு சமமாக இருக்கிறது.
அக்கறையூட்டுவதென்னவெனில், இப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்கிறவர்கள் தங்களுடைய மாந்தரீக பொருட்கள் கடவுளிடமிருந்து வருவதாக நம்புகின்றனர். இந்த உயிரில்லா உருவங்களை குறித்து கடவுள்தாமே என்ன சொல்லுகிறார்? எரேமியா தீர்க்கதரிசி மூலம் பேசுகிறவராய் அவர் விடையை வெகு தெளிவாக கூறுகிறார்: “அவைகள் (உயிரில்லா உருவங்கள்) வெள்ளரித் தோட்டத்தில் வைத்திருக்கும் மிரட்டுபொம்மை போலிருக்கும்; அவைகள் பேசமுடியாதவைகள், அவைகளைச் சுமப்பதே அவசியம். அவைகள் நடக்கமாட்டாதவைகள்; அவைகளுக்கு பயப்படவேண்டாம்; தீமை செய்யவும், நன்மை செய்யவும் அவைகளுக்கு சக்தி இல்லை.” (சாய்வு எழுத்துக்கள் எங்களுடையது)—எரேமியா 10:5. தி.மொ.
உயிரில்லாத மிரட்டு பொம்மையால் எப்படி நன்மையோ அல்லது தீமையோ செய்ய இயலாதோ அப்படியே இந்த உயிரற்ற உருவங்கள் எதையும் செய்யமுடியாது. அவைகளால் நடக்கவோ அல்லது பேசவோ முடியாது என்பதை கவனியுங்கள். அவைகளை நொறுக்கிவிடமுடியும், நெருப்பினால் அழித்துவிடமுடியும். ஆறுகளில் தூக்கியெறிய முடியும். கரையானுக்கு இறையாகக்கூடும். துருப்பிடிக்கக்கூடும் அப்படியிருக்க அவைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள சக்கியற்றவையாக இருக்கையில், மற்றவர்களை பாதுகாப்பது எப்படி கூடிய காரியமாக இருக்கக்கூடும்?
மோசடிக்கு பின்னால்
மோசடியும்கூட உட்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மிரட்டுபொம்மையில் உயிர் இருக்கிறது என்ற எண்ணத்தினால் பறவைகள் ஏமாற்றப்படுகின்றன. அவ்வாறே ஆட்களும்கூட இந்த போலி உருவங்களுக்கு சக்தி இருப்பதாகவும் தங்களுடைய நலன்களுடன் சம்பந்தப்பட்டவையாயுமிருப்பதாக எண்ணும்படி ஏமாற்றப்படுகின்றனர்.
உதாரணமாக, ஒரு விழித்தெழு! நிருபர் பொருட்காட்சி சாலையிலிருந்து இப்படிப்பட்ட ஒரு பொருளை புகைபடமெடுப்பதற்கு அனுமதிபெற்றார். அது ஒரு ஆப்ரிக்க தோல் தொப்பியாக இருந்தது. அது ஒரு போர் வீரனை போரில் யாரும் வெல்லமுடியாதவனாக ஆக்குவதற்கு புகழ்பெற்றது. யாராவது அந்த தொப்பியைபோல் ஒன்றை செய்யக்கூடுமா என்று கேட்கப்பட்டபோது அந்த தொப்பிக்கு இன்னமும் மாந்தரீகசக்தி இருக்கிறது, அது தீங்கு இழைக்கக்கூடும்.
அப்படியானால் நன்கு கல்விப்பயின்ற ஆட்களும்கூட இந்த உயிரில்லாத போலி வழிபாட்டு பொருட்களால் வஞ்சிக்கப்பட்டு போகக்கூடும் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் இந்த மோசடிக்குபின்னால் இருப்பது யார்? தெளிவாகவே, அது யெகோவா தேவன் அல்ல, அவர் “சத்தியத்தின் தேவன்” மந்திர செயல்களை கண்டனம் செய்கிறார். (சங்கீதம் 31:5; உபாகமம் 18:10-14) மாறாக, இது கடவுளுடைய பிரதான சத்துரு பிசாசாகிய சாத்தான். அவன் முதல் வஞ்சகன் அவன் தனக்கு கீழான பேய் கூட்டாளிகளுடன் “உலகமனைத்தையும் மோசம் போக்குகிறான்.” வெளிப்படுத்துதல் 12:9.
இந்த உயிரில்லா போலி உருவ பக்தியின் ஊற்றுமூலத்தை அறிவதாவது அதை அப்பியாசிக்கிறவர்கள் அறியாமலேயே பாதுகாப்பிற்காவும் தற்காப்புக்காகவும் பேய்களை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை மதித்துணருவதற்கு உதவுகிறது. இது ஞானமான காரியமா? நிச்சயமாகவே இல்லை! இயேசு பிசாசை “மனுஷ கொலைபாதகனாகவும்” அடையாளங்காட்டினார். சாத்தானிய சக்திகள் பாதுகாப்பளிக்க அல்ல ஆனால் ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றனர். அவர்களுடைய குறிக்கோள் காப்பாற்றுவதல்ல, ஆனால் அழிப்பதே. யோவான் 8:44.
ஆகையால் யெகோவாவை பிரியப்படுத்த விரும்புகிறவர்கள், ஆவிக்கொள்கை சம்பந்தமான தங்கள் உபகரணங்களை எபேசுவிலிருந்த பண்டைய கிறிஸ்தவர்கள். செய்ததைப்போன்றே செய்கின்றனர். (அப்போஸ்தலர் 19:19) ஆனால், தாயத்துபோன்ற மாந்தரீகபொருட்களை அழிக்க முயன்றவர்கள் ஆவி உலகத்திலிருந்து தாக்கப்படுவதை கண்டிருக்கின்றனர் என்பது உண்மையல்லவா?’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆம், ஆனால் இது அந்த உயிரற்ற மரத்துண்டா கல்லோ அல்லது துணியோ பாதுகாப்பு கொடுக்கதவறியதன் காரணமாக அல்ல, ஆனால் இந்த சடப்பொருள் உலகத்துடன் உள்ள தொடர்பை இழந்துவிடுவதன் காரணமாக பேய்கள் கோபமடைகின்றன.—மத்தேயு 8:28-32-ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்.
என்றபோதிலும், யெகோவாவும் அவருடைய உண்மையுள்ள தேவ தூதர்களும் இந்த பொல்லாத ஆவிகளைகாட்டிலும் அதிக சக்திவாய்ந்தவர்கள் மற்றும் கடவுளை விசுவாசத்தோடு கூப்பிடக்கூடியவர்களுக்கு உதவியளிப்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீதிமொழிகள் 18:10 சொல்லுகிறபடி: யெகோவாவின் திருநாமம் பலத்த கோபுரம்; நீதியான அதற்குள் ஓடி அடைக்கலம் பெறுவான்.”—தி.மொ.
இந்த வழிப்பாட்டு பொருட்கள் இப்படிப்பட்ட பாதுகாப்பை கொடுக்கமுடியாது. அவை போலியானது, மோசடி, ஆரம்பத்தில் சொல்லப்பட்ட டேனியேல் என்ற பெயருள்ள மனிதனை கேட்டு பாருங்கள். அங்கே சொல்லப்பட்ட சம்பவங்கள் 1935-ல் நிகழ்ந்தது. இந்தத் தாயத்துப் “பாதுகாப்பில்” அவனுடைய தந்தை ஒரு மாதத்துக்குள்ளாக மரித்துபோனார், ஆனால், இந்தத் தாயத்து பக்திமுறையை வெறுத்த டேனியேல் ஆறு மாதத்தில் சாகும்படி கண்டனஞ்செய்யப்பட்டான். ஐம்பது ஆண்டுகள் கடந்த பிற்பாடும் அவன் உயிருள்ளவனாகவும் சுகமாகவும் இருக்கிறான்.
எனவே, பொல்லாத ஆவிகளின் உபகரணங்களை ஏன் பயன்படுத்தவேண்டும்? அந்த உபகரணங்கள் உயிரற்றவை, மிரட்டு பொம்மை போன்று சக்தியற்றவை. உண்மையான பாதுகாப்பும் தற்காப்பும் யெகோவா தேவனிடமிருந்து வருகிறது.
[பக்கம் 29-ன் படம்]
ஒரு போர்வீரனை போரில் யாரும் வெல்லமுடியாதவனாக ஆக்குவதற்கு புகழ்பெற்ற சக்தியுடைய மாந்தரீக தொப்பி—ஃப்ரி மியுஸியம், சியரா லியோன்