உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 2/8 பக். 14-16
  • மதுபானமும் நீங்களும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதுபானமும் நீங்களும்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மது எவ்வாறு செயலாற்றுகிறது?
  • மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்
    குடும்ப ஸ்பெஷல்
  • குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்
    விழித்தெழு!—2005
  • குடித்தல்—ஏன் கூடாது?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • மதுபானமும் வாகனம் ஓட்டுவதும்
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 2/8 பக். 14-16

மதுபானமும் நீங்களும்

‘ஜோ, நீ அதிகம் குடித்துவிட்டாய் என்று நினைக்கிறேன்,’ என்று விருந்தளிப்பவர் சொல்லுகிறார்.

‘ஓ, நானா என்று தன் வார்த்தை தடுமாற ஜோ, கேட்கிறான், ‘என்னால் அதை சமாளிக்க முடியும்’ என்கிறான். ‘ஓருவேளை அப்படியிருக்கலாம், ஆனால் நீ வீட்டிற்கு காரை ஓட்டிச் செல்லும் முன்பு ஓரு கப் காபி குடித்துவிட்டு செல்லும்படி நான் சிபாரிசு செய்கிறேன்.’

நல்ல அறிவுரையா? நிச்சயமாகவே இல்லை! உண்மையில் அவன் அதிகம் குடித்துவிட்டிருந்தால் ஜோ, தன் வீட்டிற்கு காரை ஓட்டி செல்வதை ஓரு கோப்பை காபி பருகுவது பாதுகாப்பானதாக ஆக்கிவிடாது. இப்படிப்பட்ட காரியங்கள் ஜோ, அதிக விழிப்புணர்வுள்ளவனாக இருக்கும்படி செய்யக்கூடும். ஆனால் அவன் தெளிவு அடைவதற்கு உதவக்கூடிய ஓரே ஓரு காரியம் இருக்கிறது,—நேரம். இதை புரிந்துகொள்வதற்கு உங்கள் உடல் மதுவை எவ்வாறு கையாளுகிறது என்பதன் பேரில் ஓரு பார்வையை செலுத்துவது உதவியாக இருக்கும்.

மது எவ்வாறு செயலாற்றுகிறது?

நீங்கள் சாராய சத்துள்ள மதுவை பருகும்போது உங்களுடைய இரத்த ஓட்டத்தில் புகுந்துவிட வேண்டும் என்ற “ஆவலை” அந்த சாராயசத்து கொண்டிருக்கிறது. அது மற்ற உணவுகளைப் போன்று ஜீரணிக்கவேண்டிய அவசியமில்லை, சுமார் 20 சதவிகிதமானது உடனடியாக உங்களுடைய வயிற்றின் சுவர்கள் வழியாய் இரத்த ஓட்டத்தினுள் சென்றுவிடுகிறது. அதில் மீதி பாகம் உங்கள் சிறுகுடல் வழியாக கடக்கும்போது உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது.

இந்த மதுபானம் எந்தளவுக்கு உங்களை பாதிக்கும் என்பது உங்களுடைய இரத்த ஓட்டத்தில் எந்தளவுக்கு பெருகுகிறது என்பதை பொருத்தது. மேலும் அது எவ்வளவு தீவிரமாய் பெருகுகிறது என்பது பல்வேறு அம்சங்களின் பேரில் சார்ந்திருக்கிறது.

(1) மதுபானம் குடிக்கும் அளவு: சாதாரணமாய் குடிக்கும் சமயங்களில் எவ்வளவு மதுபானத்தை நீங்கள் குடிக்கிறீர்கள்? ஓரு மொடக்கு விஸ்கியை காட்டிலும் ஓரு குவளை பியர் குறைந்த வெறியச்சத்தை தன்னுள் கொண்டிருக்க கூடுமா? சிறிதளவில் பரிமாறப்படும் பியர் திராட்சரசம் மற்றும், 80 தரமான விஸ்கி ஆகிய இவையனைத்தும் ஓரே அளவான—அரை அவுன்சுக்கும் (15CC) சற்று அதிகமான—a வெறியச்சத்தை கொண்டிருக்கின்றன என்பது ஒருவேளை ஆச்சரியமாக தோன்றக்கூடும்.

எனவே வெறியச்சத்தின் துர்ப்பிரயோகமும் வெறிய நச்சுத்தன்மையும் என்பதின்பேரில் தேசிய நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்ட வெறியச்சத்தின் உளநூல் சார்ந்த பாதிப்புகள் என்ற நூலினுடைய அறிக்கையின் முடிவுரை என்னவெனில்: ஒரு தனிப்பட்ட நபரின் மனதிலும் உடலிலும் குடித்தல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் அவனோ அல்லது அவளோ குடிப்பதற்கு, திராட்சமது பியர் அல்லது மற்ற கடுமையான குடிவகை ஆகியவற்றின் எதை பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கிய குறிப்பல்ல-ஆனால் உண்மையில் எவ்வளவு வெறியச்சத்து உட்கொள்ளப்படுகிறது என்பதே மிக முக்கியமானதாக இருக்கிறது.

(2) இரத்தத்தில் கலந்திடும் வேகம்: உங்கள் இரத்த ஓட்டத்தில் சாராயச்சத்து கலந்திடும் வேகத்தை அநேக அம்சங்கள் பாதிக்கக்கூடும். உணவு ஒரு அம்சமாகும். அதாவது, உங்கள் வயிற்றில் நீங்கள் உணவை கொண்டிருப்பதானது வெறியச்சத்தின் திட்டத்தை தளர்த்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இது இரத்தத்தில் கலந்திடும் வேகத்தை குறைக்கிறது. எனவே வெறும் வயிற்றில் குடிக்கப்படும் ஒரு கோப்பை திராட்சரசத்தினால் அவனுடைய இரத்த ஓட்டத்தில் புகக்கூடிய வெறியச்சத்தின் அளவை காட்டிலும் உணவோடு சேர்த்து பருகும் அதே அளவான திராட்சரசத்தின்போது இரத்த ஓட்டத்தில் புகக்கூடிய வெறிச்சத்தின் அளவு குறைவானதே, பருகுதலில் இடைவெளியும்கூட இரத்தத்தில் கலக்கும் வேகத்தில் மாறுதலை ஏற்படுத்தக்கூடும். ஓரிரண்டு மணிநேர இடைவெளியில் பருகப்படும் இரண்டு கோப்பை மது உண்டுப்பண்ணக்கூடிய போதையைக் காட்டிலும் ஒரு சில நிமிடங்களில் அடுத்தடுத்து பருகப்படும் இரண்டு கோப்பை மதுவின் போதை அதிகமாயிருக்கும்.

உடலின் எடையும்கூட மற்றொரு அம்சம். ஏன்? ஏனெனில் ஒரு ஆளின் உடல் எடை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமான திரவம் அவரது உடலில் இருப்பதால் அது அந்த வெறியச்சத்தின் திட்பத்தைதளர்த்திவிடுகிறது. உதாரணமாக, பெரியவர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மதுபான திட்ட அபிவிருத்தி அறிக்கை செய்வதாவது: *160 பவுண்டுகள் (73 கிலோ) எடையுள்ள ஒரு ஆள் மதுபான திட்பத்தை தளர்த்தக்கூடிய 110 பவுண்டுகள் (50 கிலோ) தண்ணீரை (திரவத்தை) தன் உடலில் கொண்டிருக்கி(றாள்)றான். ஒரு மணி நேரத்தில் மூன்று தடவை குடித்தபின்பு அவனுடைய அல்லது அவளுடைய இரத்த வெறிச்சத்து உள்ளடக்கம் சுமார் 0.07 சதவீதமாக இருக்கும். ஆனால் 100 பவுண்டு (45 கிலோ) உடல் எடையுள்ள ஒரு நபர் அதே அளவான மதுவை ஒரே நேரத்தில் குடித்தால் அவனுடைய அல்லது அவளுடைய இரத்த வெறியச்சத்தின் உள்ளடக்கம் 0.11 சதவீதமாக இருக்கும். ஆகவே அவனோ அல்லது அவளோ ஒரு குடிவெறி வாகன ஓட்டியாக கருதப்பட்டு கைது செய்யப்படுவதற்கு ஏற்றவராக இருப்பார்.

வெறியச்சத்து கடுமையாக்கப்பட்ட பானங்களும்கூட அது இரத்தத்தில் கலந்திடும் வேகத்தை பாதிக்கக்கூடும். அதாவது பானத்தில் வெறியச்சத்தின் வலிமை எவ்வளவு அதிகமாய் இருக்கிறதோ அவ்வளவு தீவிரமாய் மதுபானம் உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உங்கள் இரத்த ஓட்டத்தில் கலந்திடும் வெறிச்சத்தின் வேகம் கூட்டப்படுவதும் குறைக்கப்படுவதும்—மேலே சொல்லப்பட்ட ஏதாவதொரு செல்வாக்குகளின் பேரிலேயே சார்ந்திருக்கிறது. என்றபோதிலும் உங்களுடைய இரத்த ஓட்டத்தில் எவ்வளவு வெறியச்சத்து பெருகுகிறது என்பதை தீர்மானிக்கக்கூடிய மற்றொரு அம்சமும் இருக்கிறது.

(3) பஸ்பமாக்கப்படும் வேகம்: வெறியச்சத்து ஒருமுறை உங்கள் இரத்த ஓட்டத்திலிருக்குமானால் உங்களுடைய உடல் அதை அகற்றுவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது ஒரு மிகச்சிறிய அளவானது (2 முதல் 10 சதவிகிதத்திற்கு உட்பட்ட அளவு) சுவாசத்திலும் வியர்வையிலும் மற்றும் சிறுநீரிலும் மாற்றப்படாமலேயே வெளியேற்றப்பட்டுவிடுகிறு. அதில் மீதமானது பிராணவாயு இணைந்து “பஸ்பமாக்கப்படுகிறது” பெரும்பாலும் இது கல்லீரலில் சம்பவிக்கிறது. அங்கே வெப்பத்தையும் வீரியத்தையும் வெளியிடுவதற்கு வெறியச்சத்தின் இராசயன பொருள் மாற்றப்படுகிறது.

உங்கள் கல்லீரலில் எவ்வளவு தீவிரமாக அந்த வெறிச்சத்தை பிராணவாயுடன் இணையச்செய்கிறது. பிராணவாயுடன் இணையும் வேகம் உடலின் ஆரோக்கியம் ஆகிய அம்சங்களின் பேரில் சார்ந்தது ஆளுக்குஆள் வெகு சிறிய அளவில் வேறுபடக்கூடும். மால்பெஃட்டிக்கு மற்றும் வின்டரின் அறிக்கைபிரகாரம் “பொதுவாக 150 பவுண்டு (68 கிலோ) எடையுள்ள ஆள் ஒருமுறை பருகும் மதுபானத்திலுள்ள வெறியச்சத்தை ஒரு மணி நேரத்தில் “பஸ்பமாக்கக்கூடும்.”

உங்கள் கல்லீரல் அந்த வெறியச்சத்தை அரித்தழிப்பதில் அவ்வளவு தீவிரமாக செயலாற்றும்போது அந்த வெறிச்சத்து உங்களுடைய இரத்த ஓட்டத்தில் எவ்வாறு பெருகுகிறது? அது வெகு எளிது: பிராணவாயுவில் கலக்கும் வேகத்தை இரத்தத்தில் கலக்கும் வேகம் மிஞ்சிவிடும்போது அந்த இரத்த வெறியச்சத்தின் அளவு உயருகிறது. மது பானத்தின் உளநூல் பாதிப்புகள் அறிக்கை பின்வருமாறு சித்தரிக்கிறது: “இது ஓட்டையுடைய படகிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு ஒப்பாக இருக்கிறது”; “வெறியச்சத்தை உடல் வெளியேற்றும் வேகத்தை காட்டிலும் வெறியச்சத்து இரத்தத்தில் கசியும் வேகம் அதிகமாக இருக்குமானால் அதன் அளவு அல்லது வலிமை அதிகரிக்கிறது. இரத்தத்தில் வெறியச்சத்து அதிகமாகும்போது அந்த நபர் அதிக போதைக்குள்ளாகிறார்.

எனவே இரத்த ஓட்டத்திலுள்ள கலந்துவிடுவதற்கு வெறியச்சத்து “ஆவலாக” இருந்தபோதிலும் விட்டு செல்வதற்கு அது அகற்குரிய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. உடலானது அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட பிராணவாயுவிற் கலக்கும் வேகத்திலேயே அந்த வெறியச்சத்தை அரித்தழிக்கிறது. ஆகவே அது அவ்வாறு செய்யும் வரையில் நீங்கள் சாலையில் பிரயாணஞ்செய்வதை தவிர்க்கவேண்டும். ஏன் ஏனெனில் ஒரு வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டு செல்வதற்கு தேவையான பல்வேறு அம்சங்களின் மதுபானம் உங்களை பாதிக்கிறது.

a [அடிக்குறிப்புகள்]

இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை

[பக்கம் 15-ன் படம்]

அவர் அதிகமாகக் குடித்துவிட்டிருப்பாரானால், அவர் பத்திரமாக ஓட்டுவதற்குக் காப்பி உதவுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்