“பள்ளிக் கவலை”—சாதனைக்கு விலை?
ஜெர்மனியிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
ஸ்கூலாங்ஸ்ட் [Schulangst] இது வேகமாக சர்வ தேசீய பிரச்னையாக மாறி வரும் ஒரு பிரச்னையை விவரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஜெர்மன் வார்த்தையாகும். ஒரு மொழிபெயர்ப்பு இந்த வார்த்தையின் எல்லா கருத்தையும் தெரிவிக்க எப்படியோ தவறிய போதிலும் தோராயமாக அதனுடைய பொருள் “பள்ளிக் கவலை” என்பதாகும்.
பத்து வருடங்களுக்கு முன்பு குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் எக்கார்டு ஷ்ரிக்கல் இவ்விதமாகச் சொன்னார்: “நான் சிகிச்சை அளிக்கும் பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பிள்ளைகள் சாதாரண அர்த்தத்தில் நோய்வாய்பட்டவர்கள் இல்லை. அவர்கள் பள்ளியை நினைத்து வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.” டூட்ஷ் ஆர்ஸ்டபிளாட் (Deutsche Arzteblatt) என்ற மருத்துவ இதழ், பள்ளி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக சிகிச்சைப் பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கை அப்போதிலிருந்து பத்து மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது!
ஆம், இளம் ஆசிரியர்களின் ஜெர்மன் சங்கம் சொல்வதை நம்ப வேண்டுமானால், ஜெர்மன் குடியரசுப் பள்ளி அமைப்பு நெருக்கடியான நிலையில் இருக்கிறது. வருடந்தோறும் தேர்ச்சிப் பெற போதிய மார்க்குகளை வாங்கத் தவறும் 2,80,000 மாணவர்கள் பற்றியும் ஒவ்வொரு 30 பேரில் ஒருவர்—மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிற 18,000 பேர் பற்றியும் அச்சங்கம் சுட்டிகாட்டுகிறது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துக்கொள்வதில் வெற்றி பெறுகிறார்கள்.
காரணங்கள்
வெற்றி பெறும்படியாக எல்லா இடங்களிலிருந்தும் கொண்டுவரப்படும் அழுத்தமே பள்ளிக் கவலையை உண்டுபண்ணும் குறிப்பிடத்தக்க காரண கூறாக இருக்கிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஜெர்மனியிலுள்ள இளைஞர்களிடம் அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அல்லது அர்த்தமுள்ள ஒரு வேலையை தேடிக்கொள்ள விரும்பினால், பள்ளியில் சிறப்பான பதிவை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகியர்கள். அநேக பிள்ளைகளுக்கு தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் இறுக்கத்தை உருவாக்கி, அநேகமாக தோல்வியடைந்து விடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. ஜெர்மன் பேராசிரியர் வால்டர் லிப்ரஷ் இவ்விதமாக எச்சரிக்கிறார்: “நம்முடைய பங்கில் மிதமிஞ்சிய பேராசை நம்முடைய பிள்ளைகளுக்கு தீங்கைத்தானே விளைவிக்கக்கூடும்.”
உண்மைதான் மார்க்குகள், நன்றாக படிக்கும்படியாக மாணவர்களுக்கு தூண்டுதலை அளித்து முன்னேற வேண்டிய பகுதிகளை சுட்டிக் காட்டக்கூடும். தன்னுடைய பிள்ளையின் கல்வியில் பெற்றோருக்கு அக்கறையில்லையென்றால், பிள்ளை படிப்பில் அக்கறையை இழந்துவிடக்கூடும். ஆனால் லிப்ரஷ் “மார்க்குகளை பெறுவதற்கு கடுமையாக வற்புறுத்துவதை” கண்டனம் செய்கிறார். மார்க்குகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பது சராசரி அல்லது சராசரிக்கும் மேலான புத்திக்கூர்மையுள்ள பிள்ளைகளை தாழ்வாக உணரச் செய்துவிடும். “அழுத்தத்தை கொடுப்பதற்கு மார்க்குகள் ஒரு நெம்புக் கோலாக மாறி தனிப்பட்ட வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல், சமூக சமநிலை குலிக்கப்படும்போது நம்முடைய அமைப்பு சீரழிந்து போகிறது. நம்முடைய பிள்ளைகள் தானே அவதிப்படுகிறார்கள்,” என்று எல்டர்ன் என்ற ஜெர்மன் பத்திரிகை கூறுகிறது.
சண்டை சச்சரவுகள் நிரம்பிய வீடுகளும் அல்லது விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தலால் பிளவுபட்ட குடும்பங்களும் பள்ளிக் கவலையை அதிகரிக்கின்றன. இத்தகைய வீடுகளிலிருந்து வரும் பிள்ளைகள் குழம்பியவர்களாய், அமைதி இழந்தவர்களாய், நேசிக்கப்படாதவர்களாய் உணரக்கூடும். உர்ஸ்பர்க் ஜூலியஸ் மாக்ஸிமில்லியன்ஸ் பல்கலைகழகத்தின் குழந்தை மனநோய் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கெர்ஹெட் இவ்விதமாக விளக்கியது அக்கறைக்குரியதாக இருக்கிறது: “பெற்றோர் பிள்ளையின் உறவில் அல்லது குழந்தையின் தனித்தன்மை அமைப்பில் மோசமான குறைபாடுகள் இருந்தால் மட்டுமே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதை கவனிக்க முடிகிறது.”
பள்ளிக் கவலைக்கு மற்றொரு காரணத்தை 11 வயது பிள்ளையின் விஷயத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. “ஆசிரியர் எங்கள் முன் வைக்கும் பிரச்னையை என்னால் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தால், அதை என்னால் தீர்த்துவிட முடியும் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன்.” 1960-களின் பிற்பட்ட ஆண்டுகள் முதற்கொண்டு ஜெர்மன் பள்ளி வகுப்பறைகளில் இருந்த எளிமை மாறி, சிக்கலான விஞ்ஞானமும் தொழில் துறையின் விளங்காத சொற்றொடர்களும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக ஏற்படும் ஏமாற்றம் பள்ளிக்கவலையை அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டிருப்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். டெலிவிஷன் பார்ப்பவர்கள், அடுத்து என்ன வருகிறது என்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக, அவர்கள் பார்ப்பதை எளிதில் மறந்து விடக்கூடியவர்களாக இருப்பதாக கல்வி பயிற்சி அளிப்பவர் ஒருவர் தெரிவிக்கிறார். விளைவு? அதே விதமாகவே பள்ளிப் பாடங்களையும் அவர்கள் விரைவில் மறந்துவிடுகிறார்கள்!
சில சமயங்களில் மாணவர்கள் “பயமுறுத்தப்படும், வற்புறுத்தப்பட்டும் மோசமாக நடத்தப்பட்டும்” வருகிறார்கள். ஹாம்பர்கர் ஆபன்ட்பிளாட் மேலுமாக இவ்விதமாக குறிப்பிட்டது: “அநேகமாக பள்ளியைப் பற்றிய பயம், சக மாணவரின் வன்முறையைப் பற்றிய பயமாகவும்கூட இருக்கிறது . . . மாணவர்கள் அழத்தங்களுக்கு வன்முறையினால் பிரதிபலிக்கிறார்கள்.”
மிக அதிகமான விலையா?
ஸ்கூலாங்ஸ்ட் என்ற வார்த்தை ஜெர்மன் மொழியின் வார்த்தையாக இருந்தபோதிலும், அது ஜெர்மனிக்கு மட்டுமே பொருந்தும் ஒன்றல்ல. சோதனையில் தேர்ச்சிப் பெற அநேக பள்ளிகள் தவறுகின்றன என்பதற்கு இது மற்றொரு அமைதியை குலைக்கும் அறிகுறியாக இருக்கிறது. கல்வி அளவில் சாதனை சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் பள்ளியைப் பற்றிய ஒரு கொடிய பயத்தை பிள்ளைகள் வளர்த்துக் கொள்ளும்போது சாதனைக்கு விலை மிக அதிகமாக இல்லையா என்பதை பெற்றோர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் உலகில் பெரும்பாலான இடங்களில், பள்ளிகள், வாசித்தல், எழுதுதல் போன்ற மிகவும் அடிப்படையான திறமைகளை போதிப்பதற்கும்கூட போராடிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகமாகிய வளர்ந்து வரும் தேசங்கள் எந்த அளவுக்கு இந்த சவாலை எதிர்பட்டு வருகின்றன? (g85 9/22)
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் கொடுக்கும் அழுத்தம் அநேக இளைஞருக்கு பள்ளியின் பேரில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது