உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தீமோத்தேயு 6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 தீமோத்தேயு முக்கியக் குறிப்புகள்

      • அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (1, 2)

      • பொய்ப் போதகர்களும் பண ஆசையும் (3-10)

      • கடவுளுடைய ஊழியனுக்கு அறிவுரைகள் (11-16)

      • நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்கள் (17-19)

      • உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாத்துக்கொள் (20, 21)

1 தீமோத்தேயு 6:1

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ்.”

இணைவசனங்கள்

  • +ரோ 13:7; எபே 6:5; கொலோ 3:22
  • +1பே 2:13, 14

1 தீமோத்தேயு 6:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இயேசுவின் சீஷர்களாகவும்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 31

1 தீமோத்தேயு 6:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஆரோக்கியமான.”

இணைவசனங்கள்

  • +2தீ 1:13
  • +தீத் 1:1, 2

1 தீமோத்தேயு 6:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வெறித்தனமாக ஈடுபடுகிறவன்.”

  • *

    வே.வா., “இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதும்.”

இணைவசனங்கள்

  • +1கொ 8:2
  • +2தீ 2:14; தீத் 1:10; 3:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 236

1 தீமோத்தேயு 6:5

இணைவசனங்கள்

  • +2கொ 11:3; 2தீ 3:8; யூ 10
  • +1பே 5:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2002, பக். 12-13

    11/1/1989, பக். 5

1 தீமோத்தேயு 6:6

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மன திருப்தி.”

இணைவசனங்கள்

  • +1தீ 4:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம்,

    1/1/2015, பக். 15

    11/15/2011, பக். 19-20

    6/1/2003, பக். 9

    8/15/1995, பக். 21-22

1 தீமோத்தேயு 6:7

இணைவசனங்கள்

  • +யோபு 1:21; சங் 49:16, 17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

1 தீமோத்தேயு 6:8

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “இருப்பிடமும்.”

இணைவசனங்கள்

  • +நீதி 30:8, 9; எபி 13:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2022, பக். 4-5

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    விழித்தெழு!,

    6/22/1994, பக். 31

    காவற்கோபுரம்,

    8/1/2003, பக். 5-6

    6/1/2003, பக். 9

    6/15/2001, பக். 6-7

    1/15/1998, பக். 17

    மெய்க் கடவுள், பக். 103-104

    குடும்ப மகிழ்ச்சி, பக். 40

    உண்மையான சமாதானம், பக். 114-115

1 தீமோத்தேயு 6:9

இணைவசனங்கள்

  • +மத் 13:22
  • +நீதி 28:20, 22; யாக் 5:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2019, பக். 18

    காவற்கோபுரம்,

    3/15/2011, பக். 22-23

    5/15/1998, பக். 5-6

    1/15/1998, பக். 17

    7/15/1997, பக். 13

    11/1/1989, பக். 5-6

    3/1/1987, பக். 24

    விழித்தெழு!,

    6/2007, பக். 3, 4-7

    9/22/1997, பக். 13

    மெய்க் கடவுள், பக். 103-104

1 தீமோத்தேயு 6:10

இணைவசனங்கள்

  • +மத் 6:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 166

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2019, பக். 18

    விழித்தெழு!,

    4/2009, பக். 5

    1/2009, பக். 6

    6/2007, பக். 3, 4-7, 21

    2/8/2003, பக். 29

    9/22/1997, பக். 13

    காவற்கோபுரம்,

    1/1/2011, பக். 4

    3/1/2002, பக். 17

    6/15/2001, பக். 5-6

    5/15/1998, பக். 5-6

    4/15/1994, பக். 13-14

    6/1/1993, பக். 21-22

    11/1/1989, பக். 5, 18

    5/1/1987, பக். 10-11

    மெய்க் கடவுள், பக். 103-104

1 தீமோத்தேயு 6:11

இணைவசனங்கள்

  • +நீதி 15:1; மத் 5:5; கலா 5:22, 23; கொலோ 3:12; 1பே 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2008, பக். 10, 12-15

    4/1/2003, பக். 20

    6/15/2001, பக். 7-8

    7/1/1990, பக். 13-17

1 தீமோத்தேயு 6:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2004, பக். 27

1 தீமோத்தேயு 6:13

இணைவசனங்கள்

  • +மத் 27:11; யோவா 18:33, 36; 19:10, 11

1 தீமோத்தேயு 6:14

இணைவசனங்கள்

  • +2தெ 2:8; 2தீ 4:1, 8

1 தீமோத்தேயு 6:15

இணைவசனங்கள்

  • +வெளி 17:14; 19:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 31

    9/1/2005, பக். 27

1 தீமோத்தேயு 6:16

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

இணைவசனங்கள்

  • +எபி 7:15, 16
  • +அப் 9:3; வெளி 1:13, 16
  • +யோவா 14:19; 1பே 3:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 31

    9/1/2005, பக். 27

    விழித்தெழு!,

    3/8/1992, பக். 16

1 தீமோத்தேயு 6:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    வே.வா., “கட்டளையிடு.”

இணைவசனங்கள்

  • +மத் 13:22; மாற் 10:23
  • +பிர 5:19; மத் 6:33; யாக் 1:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2013, பக். 14

    8/1/2007, பக். 25

    2/1/2004, பக். 30

    6/15/2001, பக். 8

    11/1/1987, பக். 5-7

    விழித்தெழு!,

    2/8/2003, பக். 29

1 தீமோத்தேயு 6:18

இணைவசனங்கள்

  • +ரோ 12:13; 2கொ 8:14; யாக் 1:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 30

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம்,

    6/15/2013, பக். 14

    6/15/2001, பக். 8

    விழித்தெழு!,

    2/8/2003, பக். 29

    ராஜ்ய ஊழியம்,

    7/2000, பக். 3

1 தீமோத்தேயு 6:19

இணைவசனங்கள்

  • +மத் 6:20
  • +லூ 16:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 203-204

    பைபிள் கற்பிக்கிறது, பக். 192-193

    காவற்கோபுரம்,

    10/1/2007, பக். 17-18

    6/15/2001, பக். 8

    8/15/1999, பக். 4-7

    1/15/1995, பக். 4-7

    விழித்தெழு!,

    2/8/2003, பக். 29

    ராஜ்ய ஊழியம்,

    9/2003, பக். 8

1 தீமோத்தேயு 6:20

இணைவசனங்கள்

  • +2தீ 1:13, 14; 3:14; 4:5
  • +1கொ 2:13; 3:19; கொலோ 2:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2020, பக். 26-30

    காவற்கோபுரம்,

    12/1/2000, பக். 30

    5/1/2000, பக். 11

    12/15/1994, பக். 16

    4/1/1994, பக். 13

    விழித்தெழு!,

    1/8/1991, பக். 29

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 தீ. 6:1ரோ 13:7; எபே 6:5; கொலோ 3:22
1 தீ. 6:11பே 2:13, 14
1 தீ. 6:32தீ 1:13
1 தீ. 6:3தீத் 1:1, 2
1 தீ. 6:41கொ 8:2
1 தீ. 6:42தீ 2:14; தீத் 1:10; 3:9
1 தீ. 6:52கொ 11:3; 2தீ 3:8; யூ 10
1 தீ. 6:51பே 5:2
1 தீ. 6:61தீ 4:8
1 தீ. 6:7யோபு 1:21; சங் 49:16, 17
1 தீ. 6:8நீதி 30:8, 9; எபி 13:5
1 தீ. 6:9மத் 13:22
1 தீ. 6:9நீதி 28:20, 22; யாக் 5:1
1 தீ. 6:10மத் 6:24
1 தீ. 6:11நீதி 15:1; மத் 5:5; கலா 5:22, 23; கொலோ 3:12; 1பே 3:15
1 தீ. 6:13மத் 27:11; யோவா 18:33, 36; 19:10, 11
1 தீ. 6:142தெ 2:8; 2தீ 4:1, 8
1 தீ. 6:15வெளி 17:14; 19:16
1 தீ. 6:16எபி 7:15, 16
1 தீ. 6:16அப் 9:3; வெளி 1:13, 16
1 தீ. 6:16யோவா 14:19; 1பே 3:18
1 தீ. 6:17மத் 13:22; மாற் 10:23
1 தீ. 6:17பிர 5:19; மத் 6:33; யாக் 1:17
1 தீ. 6:18ரோ 12:13; 2கொ 8:14; யாக் 1:27
1 தீ. 6:19மத் 6:20
1 தீ. 6:19லூ 16:9
1 தீ. 6:202தீ 1:13, 14; 3:14; 4:5
1 தீ. 6:201கொ 2:13; 3:19; கொலோ 2:8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 தீமோத்தேயு 6:1-21

தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம்

6 அடிமைகளாக* இருக்கிற எல்லாரும் தங்களுடைய எஜமான்களை மிகவும் மதிப்புக்குரியவர்களாகக் கருத வேண்டும்;+ அப்போதுதான், கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் எந்தப் பழிச்சொல்லும் வராது.+ 2 அதோடு, கிறிஸ்தவ எஜமான்களைச் சகோதரர்கள்தானே என்று நினைத்து அவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, தங்களுடைய நல்ல வேலையால் பயன் பெறுகிற தங்கள் எஜமான்கள் விசுவாசிகளாகவும்* அன்புக்குரியவர்களாகவும் இருப்பதை மனதில் வைத்து இன்னும் ஆர்வத்தோடு அவர்களுக்காக உழைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் நீ அவர்களுக்குத் தொடர்ந்து கற்றுக்கொடு, தொடர்ந்து அறிவுரை சொல். 3 ஒருவன் பொய்க் கோட்பாட்டைக் கற்றுக்கொடுக்கிறவனாக, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த பயனுள்ள* அறிவுரைகளையோ+ கடவுள்பக்திக்குரிய விஷயங்களையோ+ ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால், 4 அவன் தலைக்கனம் பிடித்தவன், எதையும் புரிந்துகொள்ளாதவன்,+ விவாதங்களிலும் வார்த்தைகளைப் பற்றிய வாக்குவாதங்களிலும் மூழ்கிப்போயிருப்பவன்.*+ இவற்றிலிருந்தே பொறாமையும், சண்டை சச்சரவும், அவதூறான பேச்சும்,* பொல்லாத சந்தேகங்களும் வருகின்றன. 5 அதோடு, புத்திகெட்டவர்களாகவும்+ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறவர்கள் மத்தியில் சிறுசிறு விஷயங்களைப் பற்றிய வாக்குவாதங்கள் எப்போதும் ஏற்படுகின்றன; கடவுள்பக்தியின் மூலம் ஆதாயம் பெறலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.+ 6 கடவுள்பக்தி மிகுந்த ஆதாயம் தரும்+ என்பது உண்மைதான்; ஆனால் கடவுள்பக்தியோடுகூட, போதுமென்ற மனம்* உள்ளவர்களுக்குத்தான் அது மிகுந்த ஆதாயம் தரும். 7 ஏனென்றால், இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது.+ 8 அதனால், நமக்கு உணவும் உடையும்* இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.+

9 ஆனால், பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்;+ அதோடு, தீமையான, முட்டாள்தனமான பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களை நாசத்திலும் அழிவிலும்தான் அமிழ்த்துகின்றன.+ 10 பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.+

11 ஆனால், கடவுளுடைய ஊழியனாகிய நீ இவற்றைவிட்டு விலகி ஓடு. நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம்+ ஆகியவற்றையே நாடு. 12 விசுவாசத்துக்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடு; முடிவில்லாத வாழ்வை உறுதியாகப் பிடித்துக்கொள்; அந்த வாழ்வுக்காகத்தான் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்; அதைப் பற்றித்தான் நீ நிறைய பேருக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்திருக்கிறாய்.

13 எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிற கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் அருமையாகச் சாட்சி கொடுத்த கிறிஸ்து இயேசுவின்+ முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளை கொடுக்கிறேன்: 14 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும்வரை,+ எந்த விதமான களங்கத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத விதத்தில் நான் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடி. 15 குறித்த காலத்தில் அவர் தன்னை வெளிப்படுத்துவார். அவர்தான் சந்தோஷமானவர், ஒரே மாமன்னர், ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்.+ 16 அவர் ஒருவர்தான் சாவாமை உள்ளவர்,+ அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்;+ எந்த மனிதனும் அவரைப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது.+ அவருக்கே மாண்பும் முடிவில்லாத வல்லமையும் சொந்தம்! ஆமென்.*

17 இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.* 18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல். 19 இந்த விதத்தில் எதிர்காலத்துக்காக நல்ல அஸ்திவாரத்தைப் போட்டு, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும்+ என்று அறிவுரை சொல்; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வை அவர்களால் உறுதியாகப் பிடித்துக்கொள்ள முடியும்.+

20 தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்;+ பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், “அறிவு” என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு.+ 21 ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவு தங்களுக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு சிலர் விசுவாசத்தைவிட்டே விலகிப்போயிருக்கிறார்கள்.

கடவுளுடைய அளவற்ற கருணை உன்மீது இருக்கட்டும்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்