உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

அப்போஸ்தலர் முக்கியக் குறிப்புகள்

      • ஏழு ஆண்கள் முக்கிய வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (1-7)

      • கடவுளை நிந்தித்ததாக ஸ்தேவான் குற்றம்சாட்டப்படுகிறார் (8-15)

அப்போஸ்தலர் 6:1

இணைவசனங்கள்

  • +அப் 4:34, 35; 1தீ 5:3; யாக் 1:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 41-42

    காவற்கோபுரம்,

    7/15/2006, பக். 16

அப்போஸ்தலர் 6:2

இணைவசனங்கள்

  • +யாத் 18:17, 18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2018), 11/2018, பக். 5

    காவற்கோபுரம்,

    8/15/1994, பக். 26

அப்போஸ்தலர் 6:3

இணைவசனங்கள்

  • +அப் 6:8, 10
  • +அப் 16:1, 2; 1தீ 3:7
  • +உபா 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 42

    காவற்கோபுரம்,

    11/15/2014, பக். 28

    8/15/1994, பக். 26

    12/1/1987, பக். 10

    ராஜ்ய ஊழியம்,

    7/2013, பக். 6

அப்போஸ்தலர் 6:5

இணைவசனங்கள்

  • +அப் 21:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2016, பக். 9

    காவற்கோபுரம்,

    11/15/2007, பக். 18

அப்போஸ்தலர் 6:6

இணைவசனங்கள்

  • +உபா 34:9; அப் 8:14, 17; 13:2, 3; 1தீ 4:14; 5:22; 2தீ 1:6

அப்போஸ்தலர் 6:7

இணைவசனங்கள்

  • +அப் 12:24; 19:20
  • +அப் 2:47
  • +யோவா 12:42; அப் 15:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/2001, பக். 10-11

அப்போஸ்தலர் 6:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 45-47

அப்போஸ்தலர் 6:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 47

    காவற்கோபுரம்,

    1/1/1991, பக். 11

அப்போஸ்தலர் 6:10

இணைவசனங்கள்

  • +ஏசா 54:17; லூ 21:15; அப் 6:3

அப்போஸ்தலர் 6:12

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களையும்.”

அப்போஸ்தலர் 6:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 47

அப்போஸ்தலர் 6:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “முறைமைகளை.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 47

அப்போஸ்தலர் 6:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2018, பக். 32

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 8

    1/1/1991, பக். 11

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

அப். 6:1அப் 4:34, 35; 1தீ 5:3; யாக் 1:27
அப். 6:2யாத் 18:17, 18
அப். 6:3அப் 6:8, 10
அப். 6:3அப் 16:1, 2; 1தீ 3:7
அப். 6:3உபா 1:13
அப். 6:5அப் 21:8
அப். 6:6உபா 34:9; அப் 8:14, 17; 13:2, 3; 1தீ 4:14; 5:22; 2தீ 1:6
அப். 6:7அப் 12:24; 19:20
அப். 6:7அப் 2:47
அப். 6:7யோவா 12:42; அப் 15:5
அப். 6:10ஏசா 54:17; லூ 21:15; அப் 6:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
அப்போஸ்தலர் 6:1-15

அப்போஸ்தலரின் செயல்கள்

6 அந்த நாட்களில், சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனபோது எபிரெய மொழி பேசிய யூதர்களுக்கு எதிராகக் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்; ஏனென்றால், அன்றாட உணவு கொடுக்கிற விஷயத்தில் அவர்கள் மத்தியிலிருந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.+ 2 அப்போது, பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்ற எல்லா சீஷர்களையும் கூப்பிட்டு, “நாங்கள் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு கொடுக்கிற வேலையில் ஈடுபடுவது சரியாக இருக்காது.+ 3 அதனால் சகோதரர்களே, கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்தவர்களாகவும்,+ நல்ல பெயரெடுத்தவர்களாகவும்+ இருக்கிற ஏழு ஆண்களை உங்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுங்கள். இந்த அவசியமான வேலையை மேற்பார்வை செய்ய நாங்கள் அவர்களை நியமிப்போம்.+ 4 அதேசமயத்தில், ஜெபம் செய்வதற்கும் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்கும் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்” என்று சொன்னார்கள். 5 அவர்கள் சொன்னது சரியென்று அங்கிருந்த எல்லாருக்கும் தோன்றியது. அதனால், கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவரான ஸ்தேவானையும், பிலிப்புவையும்,+ பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், அந்தியோகியா நகரத்தைச் சேர்ந்தவரும் யூத மதத்துக்கு மாறியவருமான நிக்கொலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 6 பின்பு, அவர்களை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்துவிட்டு அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.+

7 இதன் காரணமாக, கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது;+ எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது;+ ஏராளமான குருமார்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.+

8 கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவரான ஸ்தேவான் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் மக்கள் மத்தியில் செய்துவந்தார். 9 இருந்தாலும், ‘விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஆட்களில் சிலர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலரோடு வந்து ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். 10 ஆனால், ஞானத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் பேசிய அவரை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.+ 11 பின்பு, அவர்கள் சில ஆட்களை ரகசியமாகக் கூப்பிட்டு, “மோசேயையும் கடவுளையும் இவன் நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லும்படி தூண்டிவிட்டார்கள். 12 அதோடு, மக்களையும் பெரியோர்களையும்* வேத அறிஞர்களையும் தூண்டிவிட்டார்கள்; அவர்கள் திடீரென்று அவரிடம் வந்து, அவரைப் பலவந்தமாகப் பிடித்து நியாயசங்கத்துக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். 13 பின்பு, பொய் சாட்சிகளை அங்கே நிறுத்தினார்கள்; இவர்கள், “இந்தப் பரிசுத்த இடத்துக்கு எதிராகவும் திருச்சட்டத்துக்கு எதிராகவும் இவன் பேசிக்கொண்டே இருக்கிறான். 14 உதாரணத்துக்கு, நாசரேத்தூர் இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார், மோசே நமக்குக் கொடுத்த சட்டதிட்டங்களை* மாற்றிவிடுவார் என்றெல்லாம் இவன் சொல்கிறான்; அதை நாங்களே கேட்டோம்” என்று சொன்னார்கள்.

15 நியாயசங்கத்தில் உட்கார்ந்திருந்த எல்லாரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவருடைய முகம் ஒரு தேவதூதரின் முகம்போல் இருந்ததைக் கவனித்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்