உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 22
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 22:1

இணைவசனங்கள்

  • +பிர 7:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 4 2017, பக். 9

நீதிமொழிகள் 22:2

இணைவசனங்கள்

  • +அப் 17:26

நீதிமொழிகள் 22:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 38

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2016, பக். 11

    விழித்தெழு!,

    எண் 3 2016, பக். 5

    3/8/1989, பக். 21

நீதிமொழிகள் 22:4

இணைவசனங்கள்

  • +சங் 34:9; நீதி 18:12

நீதிமொழிகள் 22:5

இணைவசனங்கள்

  • +நீதி 4:14, 15

நீதிமொழிகள் 22:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சரியான வழியில்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 18:19; உபா 6:6, 7; எபே 6:4
  • +2தீ 3:14, 15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 4-5

    3/8/1997, பக். 26-27

    1/8/1993, பக். 3, 9-10

    10/8/1992, பக். 8

    5/8/1988, பக். 8-9

    காவற்கோபுரம்,

    7/1/2008, பக். 16

    6/1/2007, பக். 31

    2/1/1999, பக். 32

    12/1/1997, பக். 6-8

    6/15/1997, பக். 23

    10/15/1996, பக். 21

    10/1/1993, பக். 3-4

    திருப்தியான வாழ்க்கை, பக். 5

    குடும்ப மகிழ்ச்சி, பக். 74-75, 85

நீதிமொழிகள் 22:7

இணைவசனங்கள்

  • +2ரா 4:1; மத் 18:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 37

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2017, பக். 10

    விழித்தெழு!,

    4/8/1999, பக். 18-19

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 20-21

நீதிமொழிகள் 22:8

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கோபாவேசத்தின் கோல்.”

இணைவசனங்கள்

  • +கலா 6:7, 8
  • +சங் 125:3

நீதிமொழிகள் 22:9

இணைவசனங்கள்

  • +உபா 15:7, 8; நீதி 11:25; எபி 6:10

நீதிமொழிகள் 22:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வழக்குகளும்.”

நீதிமொழிகள் 22:11

இணைவசனங்கள்

  • +சங் 45:2; நீதி 16:13; மத் 5:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2010, பக். 30

நீதிமொழிகள் 22:12

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “யெகோவாவின் கண்கள் அறிவைக் காக்கும்.”

இணைவசனங்கள்

  • +அப் 13:8-10

நீதிமொழிகள் 22:13

இணைவசனங்கள்

  • +நீதி 26:13-15

நீதிமொழிகள் 22:14

இணைவசனங்கள்

  • +நீதி 5:3; பிர 7:26

நீதிமொழிகள் 22:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கண்டித்துத் திருத்தும்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 8:21
  • +நீதி 13:24; 19:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 100-101

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2016), 10/2016, பக். 1-2

    காவற்கோபுரம்,

    6/15/2008, பக். 10-11

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 24

நீதிமொழிகள் 22:16

இணைவசனங்கள்

  • +சங் 12:5; நீதி 14:31

நீதிமொழிகள் 22:17

இணைவசனங்கள்

  • +நீதி 13:20
  • +நீதி 15:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2022, பக். 8

நீதிமொழிகள் 22:18

இணைவசனங்கள்

  • +நீதி 15:7
  • +நீதி 2:10; 24:14

நீதிமொழிகள் 22:22

இணைவசனங்கள்

  • +நீதி 23:10
  • +யாத் 23:6; ஆமோ 5:12

நீதிமொழிகள் 22:23

இணைவசனங்கள்

  • +1சா 24:12; சங் 12:5

நீதிமொழிகள் 22:25

இணைவசனங்கள்

  • +நீதி 13:20

நீதிமொழிகள் 22:26

இணைவசனங்கள்

  • +நீதி 6:1-3

நீதிமொழிகள் 22:28

இணைவசனங்கள்

  • +உபா 19:14; நீதி 23:10; ஓசி 5:10

நீதிமொழிகள் 22:29

இணைவசனங்கள்

  • +1சா 16:18, 19; 1ரா 7:13, 14

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 22:1பிர 7:1
நீதி. 22:2அப் 17:26
நீதி. 22:4சங் 34:9; நீதி 18:12
நீதி. 22:5நீதி 4:14, 15
நீதி. 22:6ஆதி 18:19; உபா 6:6, 7; எபே 6:4
நீதி. 22:62தீ 3:14, 15
நீதி. 22:72ரா 4:1; மத் 18:25
நீதி. 22:8கலா 6:7, 8
நீதி. 22:8சங் 125:3
நீதி. 22:9உபா 15:7, 8; நீதி 11:25; எபி 6:10
நீதி. 22:11சங் 45:2; நீதி 16:13; மத் 5:8
நீதி. 22:12அப் 13:8-10
நீதி. 22:13நீதி 26:13-15
நீதி. 22:14நீதி 5:3; பிர 7:26
நீதி. 22:15ஆதி 8:21
நீதி. 22:15நீதி 13:24; 19:18
நீதி. 22:16சங் 12:5; நீதி 14:31
நீதி. 22:17நீதி 13:20
நீதி. 22:17நீதி 15:14
நீதி. 22:18நீதி 15:7
நீதி. 22:18நீதி 2:10; 24:14
நீதி. 22:22நீதி 23:10
நீதி. 22:22யாத் 23:6; ஆமோ 5:12
நீதி. 22:231சா 24:12; சங் 12:5
நீதி. 22:25நீதி 13:20
நீதி. 22:26நீதி 6:1-3
நீதி. 22:28உபா 19:14; நீதி 23:10; ஓசி 5:10
நீதி. 22:291சா 16:18, 19; 1ரா 7:13, 14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 22:1-29

நீதிமொழிகள்

22 நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது.+

தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது.

 2 பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அவர்கள் இரண்டு பேரையும் யெகோவாதான் படைத்தார்.+

 3 சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.

ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*

 4 மனத்தாழ்மை காட்டுவதாலும் யெகோவாவுக்குப் பயப்படுவதாலும் கிடைக்கிற பலன்,

செல்வமும் மகிமையும் வாழ்வுமே.+

 5 குறுக்கு வழியில் போகிறவனின் பாதையிலே முட்களும் கண்ணிகளும் இருக்கின்றன.

ஆனால், தன் உயிரை மதிக்கிறவன் அவற்றிலிருந்து தூரமாக விலகியிருப்பான்.+

 6 நடக்க வேண்டிய வழியில்* நடக்க பிள்ளையைப் பழக்கு.+

வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.+

 7 பணக்காரன் ஏழையை ஆளுகிறான்.

கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.+

 8 அநீதியை விதைக்கிறவன் அழிவை அறுப்பான்.+

அவனுடைய அராஜகம்* முடிவுக்கு வரும்.+

 9 தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்.

ஏனென்றால், அவன் ஏழைகளோடு தன் உணவைப் பகிர்ந்துகொள்கிறான்.+

10 ஏளனம் செய்கிறவனை விரட்டிவிடு.

அப்போது சண்டை நின்றுவிடும்,

சச்சரவுகளும்* பழிப்பேச்சுகளும் முடிவுக்கு வரும்.

11 ஒருவன் சுத்தமான இதயத்தை விரும்பும்போதும் கனிவாகப் பேசும்போதும்,

ராஜாவுக்கு நண்பனாக இருப்பான்.+

12 அறிவோடு நடக்கிறவனை யெகோவா கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறார்.*

ஆனால், துரோகியின் பேச்சை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்.+

13 “வெளியே சிங்கம் நிற்கிறது,

நடுத்தெருவில் என்னைக் கடித்துக் குதறிப்போடும்!” என்று சோம்பேறி சொல்கிறான்.+

14 நடத்தைகெட்ட பெண்ணின் வாய் ஒரு படுகுழி.+

யெகோவாவின் கண்டனத் தீர்ப்புக்கு ஆளானவன் அதில் விழுவான்.

15 பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.+

ஆனால், தண்டனையின்* பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.+

16 ஏழையை ஏமாற்றி சொத்து சேர்க்கிறவனும்,+

பணக்காரனுக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறவனும்

வறுமையின் பிடியில் சிக்குவார்கள்.

17 ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டு,+

நான் புகட்டும் அறிவை உன் இதயத்தில் வை.+

18 அவை எப்போதும் உன் உதடுகளில் இருக்கும்படி,+

அவற்றை உன் இதயத்தில் ஆழமாகப் பதிய வைப்பது சந்தோஷத்தைத் தரும்.+

19 நீ யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்காக

இன்று நான் உனக்கு அறிவு புகட்டுகிறேன்.

20 ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்

நான் உனக்கு ஏற்கெனவே எழுதியிருக்கிறேனே!

21 உன்னை அனுப்பியவருக்குச் சரியான தகவலை நீ கொண்டுபோய்க் கொடுப்பதற்காக

உண்மையான, நம்பகமான வார்த்தைகளை உனக்குப் போதித்திருக்கிறேனே!

22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+

நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+

23 அவர்களுக்காக யெகோவாவே வாதாடுவார்.+

அவர்களை ஏமாற்றுகிறவர்களின் உயிரைப் பறித்துவிடுவார்.

24 கோபக்காரனோடு சகவாசம் வைக்காதே.

எரிந்து விழுகிற சுபாவம் உள்ளவனோடு சேராதே.

25 அப்போதுதான், அவனைப் பார்த்து நீயும் கெட்டுப்போக மாட்டாய்,

ஆபத்தில் சிக்கிக்கொள்ள மாட்டாய்.+

26 வேறொருவன் வாங்குகிற கடனுக்கு நீ பொறுப்பேற்காதே.

அதற்காகக் கை குலுக்கி ஒப்பந்தம் செய்யாதே.+

27 கடனை அடைக்க உனக்கு வழியில்லை என்றால்,

நீ படுத்திருக்கிற படுக்கைகூட பறிபோய்விடுமே!

28 உன் முன்னோர்கள் பூர்வ காலத்தில் வைத்த

எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+

29 திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?

அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல,

ராஜாக்கள் முன்னால் நிற்பான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்